Latest Updates
-
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள்
சற்றும் யோசிக்காமல் இந்தியர்கள் மட்டுமே செய்யக்கூடிய பைத்தியகாரத்தனமான 8 விஷயங்கள்!!!
இந்தியர்கள் புத்திசாலிகள். நம்பிக்கையில்லையா, உங்களையும் என்னையும் பாருங்கள்! ஆனால் சில நேரங்களில் நாம் செய்யும் சில பைத்தியகாரத்தனமான விஷயங்கள் அடக்க முடியாத அளவில் சிரிப்பை வரவழைக்கும். உதாரணத்திற்கு, இந்தியர்களான பலரும், லிஃப்ட்டில் மேலே ஏறுவதற்கான பட்டன், கீழே இறங்குவதற்கான பட்டன் என இரண்டையும் அழுத்துவார்கள். இன்னொன்றை சொல்ல வேண்டுமானால், இழுக்க வேண்டிய கதவை பிடித்து தள்ளுவார்கள்!
இந்திய மக்கள் மட்டுமே செய்யக்கூடிய சில முரணான வேலைகள்!!!
அதேப்போல் பற்பல புத்திசாலித்தனமான செயல்கள் உள்ளது. அவற்றை நம்மை அறியாமலேயே நம்மில் பலரும் அன்றாடம் செய்து வருவோம். இன்று, தமிழ் போல்ட்ஸ்கை அவற்றைப் பற்றிய சில உதாரணங்களை பட்டியலிட்டுள்ளது. கண்டிப்பாக பட்டியலில் உள்ள விஷயங்களில், ஒன்றிற்கு மேற்பட்ட விஷயங்களில் உங்களுக்கு அனுபவம் ஏற்பட்டிருக்கும்.
உலக மக்களை ஆச்சரியப்படுத்தும் இந்தியாவில் மட்டுமே நடக்கும் சில அமானுஷ்யமான செயல்கள்!!!
குறிப்பு: இந்த பட்டியலில் உள்ள விஷயங்கள் போக, இதேப்போன்ற விஷயங்கள் உங்களிடம் இருந்தால், எங்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தியர்களாக நாம் செய்யக்கூடிய அத்தகைய பல பைத்தியகாரத்தனமான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது தானே!
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட திரைப்படங்களை பற்றிய தகவல்கள்!!

லிஃப்ட் பட்டன்கள்
லிஃப்ட்டை பயன்படுத்தும் போது நம்மில் பலரும் இரண்டு பட்டன்களையும் அழுத்தும் தவறை புரிவோம்! நீங்களும் அதற்கு விதிவிலக்காக இருந்திருக்க மாட்டீர்கள்.

தலையை ஆட்டுதல்
இந்தியாவில், பல ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் தலையை ஆட்டுவதன் மூலம் தான் கேள்விக்கு பதிலளிப்பார்கள். 'ஆம்' என்பது அவர்களது பதில் என்றால் மேலேயும் கீழேயுமாக தலையை ஆட்டுவார்கள். இதுவே கேள்விக்கு பதில் 'இல்லை' என்றால், தலையை வலதிலிருந்து இடது அல்லது எதிர்மாறாக ஆட்டுவார்கள்.

கல்வி பாதை
விந்தையாக, யோசிக்காமல் இந்தியர்கள் (சிலர்) செய்யும் ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் படிக்கும் படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் ஒட்டுமொத்தமாக சம்பந்தமே இருக்காது. நீங்களும் அதில் ஒருவரா?

குப்பை போடும் போக்குகள்
இந்தியர்களுக்கு டன் கணக்கான பல குணங்கள் உள்ளது. அதில் ஒன்று தான், தெருவோரமாக தேங்கி கிடக்கும் குப்பையில் நம் வீட்டு குப்பையையும் அன்றாடம் தூக்கி எறிவது. அதே நேரம், இதில் வேடிக்கை என்னவென்றால், நம் நாட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள யாருக்குமே அக்கறை இல்லை என்று தொடர்ச்சியாக குறை கூறவும் செய்வோம்.

"சரியான வயது" விதிமுறையை பின்பற்றுதல்
இந்தியாவில் பல பகுதிகளில், பெற்றோர்கள் தங்கள் பெண்களுக்கு சரியான வயதில் திருமணம் செய்து வைத்து விடுவார்கள்! சரியான வயதிற்கான கருத்துப்படிவம் மிக வேடிக்கையானது. என்ன நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?

பொய்யான உச்சரிப்பு
எப்போதாவது வெளிநாட்டினரோடு ஒரு இந்தியன் பேசுவதை கவனித்துள்ளீர்களா? அப்படி இல்லையென்றால், அதனை கவனியுங்கள்! அந்த இந்தியரின் உச்சரிப்பில் ஏற்படும் மாற்றத்தை உங்களால் கவனிக்க முடியும். யோசிக்காமல் இந்தியர்கள் செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

போக்குவரத்து சிக்னலை மீறுபவர்
நம்மை சுற்றியுள்ளவர்கள் செய்வதை நாமும் செய்ய விரும்புவோம். வேண்டுமென்றே போக்குவரத்து சிக்னலை மீறி ஒருவர் சென்று விட்டால் போதும், அவரை ஒரு கூட்டமே பின்பற்றி செல்லும்... உண்மை தானே!

ஆம்புலன்ஸ் பின்னால் வண்டி ஓட்டுவது
இந்தியர்கள் செய்யக்கூடிய மிக விந்தையான விஷயம் இது - ஆம்புலன்ஸ் பின்னே விரைந்து செல்லுதல்!



Click it and Unblock the Notifications