உலகில் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திர உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு நாட்டிலும் ஓர் ஸ்பெஷல் உணவு இருக்கும். அந்த ஸ்பெஷல் உணவைச் சுவைத்துப் பார்க்க ஒவ்வொருவருக்கும் ஆசையும் இருக்கும். இதுவரை நாம் சைனீஸ், தாய் உணவுகள் மற்றும் நிறைய நாடுகளின் உணவுகளை சுவைத்திருப்போம். இந்த நாட்டு உணவுகளின் சமைக்கும் முறை மற்றும் மசாலாப் பொருட்கள் போன்றவை அந்த உணவுகளின் சுவையை வித்தியாசமாக காட்டுகிறது. இந்தியாவில் சாப்பிடப்படும் சில விசித்திர உணவுகள்!!!

ஆனால் இன்னும் சில நாடுகளில் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான உணவுகளை உட்கொள்வார்கள் என்பது தெரியுமா? அதுமட்டுமின்றி அந்த உணவுகளை அந்நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு அப்படி உலகில் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடும் விசித்திரமான மற்றும் விநோதமான உணவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை இரத்த சூப்

பச்சை இரத்த சூப்

இந்த சூப் வாத்து இரத்தம் மற்றும் கோழியின் வயிறு மற்றும் இதர பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இது வியட்நாமில் மிகவும் பிரபலமான ஓர் உணவு. இந்த சூப்பில் சில மூலிகைகள், நட்ஸ் போன்றவை இதனை சுவையை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

வறுத்த சிலந்தி

வறுத்த சிலந்தி

கம்போடியாவில், வறுத்த சிலந்தியை சாப்பிடுவது பொதுவான ஒன்று. சிலந்திகளானது பூண்டு எண்ணெயில் நன்கு மொறுமொறுவென்றும் வரும் வரை வறுக்கப்படும். ஆனால் இந்த சிலந்திகள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. எனவே இதனை சமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே கம்போடியா சென்றால் தவறாமல் இந்த சிலந்தி ப்ரையை உட்கொள்ளுங்கள்.

பறவைக் கூடு சூப்

பறவைக் கூடு சூப்

இது மற்றொரு விசித்திரமான ஓர் உணவுப் பொருள். சீனா மற்றும் ஹாங்காங்கில், இந்த பறவையின் கூடு கொண்டு செய்யும் சூப் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. முக்கியமாக இந்த நாடுகளில் பறவைக் கூடு சூப்பை சுவைக்க மக்கள் 100 டாலர்களுக்கும் அதிகமாக செலவழிப்பார்களாம். ஏனெனில் இந்த சூப் மிகவும் சுவையாக இருப்பதோடு, பறவையின் எச்சில் இருப்பதால், ஊட்டச்சத்துமிக்கதும் கூட என்பதால் தானாம்.

துரியன் பழம்

துரியன் பழம்

தென்கிழக்கு ஆசியாவில் துரியன் பழம் மக்களால் சாப்பிடப்படுகிறது. இந்த பழம் விமான நிலையம், ஹோட்டல் மற்றும் இதர பொது இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இது அவ்வளவு மோசமான வாசனையைக் கொண்டிருக்குமாம். அதுவும் எப்படி ஓர் இறைச்சி அழுகினால் துர்நாற்றம் வீசுமோ, அந்த அளவில் இப்பழத்தை வெட்டும் போது வீசுமாம். இவ்வளவு மோசமான பழம் தான் தென்கிழக்கு ஆசியாவில் பழங்களின் ராஜாவாக உள்ளது.

விஷமிக்க மீன்

விஷமிக்க மீன்

மீன் சாப்பிடுவது சாதாரணமானது தான். ஆனால் ஜப்பானில், மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ஃபுகு என்னும் மீன், பல வருடங்களாக பிரத்யேக வகுப்புக்கள் கொடுத்த சமையல்கலைஞர்களால் சமைக்கப்பட்டு, விற்கப்படுகிறது. ஏனெனில் இந்த மீனில் உள்ள விஷத்தை மிகவும் கவனமாக நீக்கி சமைக்காவிட்டால், அதனால் உயிரையே இழக்க வேண்டியிருக்கும். அந்த அளவில் மிகவும் மோசமான ஓர் மீன் தான் இது. உங்களுக்கு இந்த மீனை சுவைக்க ஆசையா?

உயிருள்ள ஆக்டோபஸ்

உயிருள்ள ஆக்டோபஸ்

தென் கொரியாவில் உள்ள மக்கள் உயிருள்ள பேபி ஆக்டோபஸை உட்கொள்வார்கள். இதனை சன்னக்ஜி என்றும் அழைப்பார்கள். இதனை உட்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதனை விழுங்கும் போது அது தொண்டையில் ஒட்டிக் கொள்ளும். இருப்பதிலேயே இது தான் உலகிலேயே மிகவும் விநோதமான உணவு என்று சொல்லலாம்.

காளையின் விதைப்பை

காளையின் விதைப்பை

கனடாவில், காளையின் விதைப்பை மிகவும் சுவையான ஓர் உணவாக கருதப்படுகிறது. அங்குள்ள மக்கள், காளையின் விதைப்பையை எணணெயில் போட்டு வறுத்து, மசாலாக்களைச் சேர்த்து பிரட்டி நன்கு சுவையாக சமைத்து உட்கொள்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Weird And Bizarre Foods Eaten By People

There are some weird and bizarre foods eaten by people. Know these weird and unusual food that people eat around the world.