For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலரும் அறியாத அதிராஜேந்திர சோழன் பற்றிய வரலாற்று தகவல்கள்!!!

|

இராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், கரிகாலன் இராஜேந்திர சோழன் என சோழ வம்சத்தில் பிறந்து வரலாற்றில் தங்கள் தடத்தை மிக அழுத்தமாய் பதித்த அரசர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமான அரசனாகவும், சோழ அரச மரபில் மாற்றம் ஏற்பட்டு, முதலாம் குலோத்துங்கன் சோழ சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்யவும் அதிராஜேந்திர சோழன் காரணமாக இருந்தான்.

முதலாம் குலோத்துங்க சோழன் பற்றி பலரும் அறிந்திராத சரித்திர தகவல்கள்!!!

வீரராஜேந்திரன் சோழன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த அதிராஜேந்திர சோழன், நாட்டில் நிலவிய கலகத்தினால் கொல்லப்பட்டதாகவும், நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும் இவரது இறப்பு குறித்து பல கருத்துக்கள் நிலவி வருகிறது. இனி, பலரும் அறியாத அதிராஜேந்திர சோழன் பற்றிய வரலாற்று தகவல்கள் குறித்து பார்க்கலாம்....

ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமான இராஜேந்திர சோழனைப் பற்றிய அரியக் குறிப்புகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளவரசன் பட்டம்

இளவரசன் பட்டம்

அதிராஜேந்திர சோழன் வீரராஜேந்திர சோழனின் மகன் ஆவான். தந்தை இருந்த காலத்திலேயே இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது.

அரசனாக முடிசூடுதல்

அரசனாக முடிசூடுதல்

கி.பி 1070 ஆம் ஆண்டில் வீரராஜேந்திரன் இறக்கவே. அதிராஜேந்திரன் சோழநாட்டுக்கு அரசன் ஆனான்.

ஆட்சி அனுபவம்

ஆட்சி அனுபவம்

வீரராஜேந்திரன் காலத்திலேயே அவன் தன் மக்களுக்கு தொண்டைமண்டலத்தையும், பாண்டிய மண்டலத்தையும் கவனித்துக் கொள்ள தன் மகன்களையே நியமித்திருந்தான். இது அதிராஜேந்திர சோழனுக்கு ஓர் ஆட்சி அனுபவமாக இருந்தது என வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.

பட்டப்பெயர்

பட்டப்பெயர்

அதிராஜேந்திர சோழனுக்கு "பரகேசரி" எனும் ஒரு பட்டப்பெயர் இருந்தாக சில சோழ வரலாற்று நூல் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

அதிராஜேந்திர சோழனும் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு தான் ஆட்சி புரிந்துள்ளார் என வரலாற்று கூற்றுகளின் மூலம் அறிய முடிகிறது.

சாளுக்கிய விக்கிரமாதித்தன் வருகை

சாளுக்கிய விக்கிரமாதித்தன் வருகை

அதிராஜேந்திரன் ஆட்சி செய்த போது, நாட்டில் கலகங்கள் மூண்டு பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த செய்தி அறிந்து மைத்துனன் அதிராஜேந்திர சோழனுக்கு உதவ நான்காம் சாளுக்கிய விக்கிரமாதித்தன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை புரிந்தான்.

அடக்கப்பட்டன

அடக்கப்பட்டன

அதிராஜேந்திர சோழனுக்கு உதவியாய் இருந்து கலகங்களை அடக்கிவிட்டு, அமைதியான சூழலை ஏற்படுத்தி தன் மைத்துனனை வாழ்த்தி நான்காம் சாளுக்கிய விக்கிரமாதித்தன் ஊர் திரும்பினான்.

குறிகிய ஆட்சிக் காலம்

குறிகிய ஆட்சிக் காலம்

நான்காம் சாளுக்கிய விக்கிரமாதித்தன் ஊர் திரும்பிய சில நாட்களிலேயே அதிராஜேந்திர சோழன் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது. அதிராஜேந்திர சோழனுடைய ஆட்சி மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் இறக்க நேரிட்டது.

இறப்பு குறித்த பல்வேறு கருத்துகள்

இறப்பு குறித்த பல்வேறு கருத்துகள்

இவரது இறப்புப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவர் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும். அதிராஜேந்திரன் கொல்லப்பட்டது தான் உண்மை என்ற கருத்தும் நிலவுகின்றது.

வைணவ - சைவ பிரச்சனை

வைணவ - சைவ பிரச்சனை

அக்காலத்தில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது. வைணவர்கள் தொல்லைகளுக்கு ஆளானதாகவும், இதன் காரணமாகக் கலகங்கள் நிகழ்ந்ததாகவும் கருதப்படுகின்றது.

ஆய்வாளர்களின் ஐயம்

ஆய்வாளர்களின் ஐயம்

அதிராஜேந்திரனின் இறப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வாளர்கள் ஐயம் வெளியிட்டுள்ளார்கள்.

சோழ அரச மரபில் மாற்றம்

சோழ அரச மரபில் மாற்றம்

வாரிசு எவரும் இன்றி அதிராஜேந்திரன் இறந்தது, சோழ அரசமரபில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமானது.

முதலாம் குலோத்துங்கன்

முதலாம் குலோத்துங்கன்

அதுவரை, விஜயாலய சோழனின் நேரடி ஆண் வழியினரால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு, முதலாம் இராஜேந்திரனின் மகள் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியன் கீழ் வந்தது. இவனே முதலாம் குலோத்துங்கன் எனப்பட்டவன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Historical Facts About Adhi Rajendra Cholan

Do you know about the Historical Facts About Adhi Rajendra Cholan? Read here.
Desktop Bottom Promotion