Latest Updates
-
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெண்களுக்கு நேரும் தீமைகள்!!!
பொதுவாக வெற்றி பெற்ற சாதனையாளர்களின் கதையே வரலாறாக கூறப்படுகிறது. மக்கள் அனைவரும் வெற்றி பெறவே விரும்புவர். தங்களுடைய நன்முயற்சிகளால், தோல்வியை தவிர்க்கவே விரும்புவர். இதனால் தோல்வியடையும் மக்களின் மனநிலையே புரியாமல் போய் விடும். இதுவே இயற்கை.
வெற்றியே உங்கள் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெற்றி என்பது எந்த உருவத்திலும் இருக்கலாம். வெற்றி உங்களுக்கு புகழைத் தரும். மேலும் பதவி உயர்வைத் தரும். வசதியையும், மகிழ்ச்சியையும் தரும். சில நேரங்களில் சந்தோசமான திருமண வாழ்வையும் கொடுக்கும்.
வாழ்க்கையின் ரகத்தை மாற்ற வெற்றி மிகவும் அவசியம். உலகம் முழுவதும் வெற்றி பெற்ற பெண்மணிகளை பிரமிப்பாக பார்க்கிறது. ஆனால் வெற்றி பெற்ற பெண்மணிகளுக்கு ஏற்படும் தீமைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாழ்க்கையில் வெற்றியை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்து விட்டால், தோல்வியை பற்றி ஒன்றும் தெரியாமல் போய்விடும். இதனால் தோல்வியடையும் மக்களின் மனநிலையே புரியாமல் போய் விடும்.

வெற்றியை மனதில் வைத்துக் கொண்டு கடினமாக உழைத்து வந்தால் அது சிலநேரங்களில், மோசமான சமூக எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும். வெற்றி பெற்ற பெண்கள் அடையும் எதிர்மறையான தாக்கங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. ஏதேனும் ஒரு நிலையில் வாழ்வில் தோல்வியை சந்தித்தால், இவை உங்களுக்கு உதவியாய் இருக்கும். ஒரு வேளை நீங்கள் வெற்றி பெற்ற பெண்களில் ஒருவராக இருந்தால், இது உங்களுக்கு ஒரு எச்சரிக்கையாயிருக்கும்.
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமை
நீங்கள் வெற்றி பெற்றால், அனைத்து செயல்களும் உங்களுக்கு ஆதரவாக நடைபெறுவது போல இருக்கும். இதுவே வெற்றி பெற்ற பெண்களுக்கு, தீங்கை ஏற்படுத்துகிறது. இதனால் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய் விடும்.
சமூக திறமைகளை பெறாமை
வெற்றி பெற்ற அனைவருமே சமூக திறமைகளை பெறுவதில்லை. இதுவே வெற்றி பெற்ற பெண்கள் அடையும் மிக முக்கியமான தீங்கு. வெற்றியானது, உங்களை ஒரு வசதியான இடத்தில் வைத்து விடுவதால், உங்களுக்கு சாதாரண பொது மனிதர்களுடன் கலந்து பழகும் நிலை குறைகிறது.
கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க முடியாமை
வாழ்வில் வெற்றியின் தித்திப்பை, அடிக்கடி உணர்ந்து பழகி விட்டால், நீங்கள் ஒரு வசதியான வாழ்விற்கு பழகி விடுவீர்கள். இதனால் வாழ்வில் கஷ்டமான சூழ்நிலையை சந்திக்கும் நிலை வரும் போது அதை சமாளிக்கும் திறனை நீங்கள் இழந்து விடுவீர்கள்.
மன அழுத்தம்
வெற்றியால் மனஅழுத்தம் எப்படி ஏற்படும் என நீங்கள் யோசிக்கிறீர்களா? இந்த வெற்றியானது உங்களை எதிர்காலத்தில் ,மன அழுத்தத்திற்கான நிலைக்கு தள்ளி விடும். பிரச்சனை ஏற்படும் போது, நீங்கள் அதை சமாளித்து விடுவீர்கள் என உலகமே எதிர் பார்க்காது. இதுவே வெற்றி பெற்ற பெண்களுக்கு நேரும் மிகப் பெரிய தீங்காகும்.
பொறுப்புகள்
வெற்றி பெற்ற பெண்ணாக இருக்கும் பட்சத்தில், உங்கள் தலையில் பல பொறுப்புகள் சுமத்தப்படுகின்றன. ஏனெனில், உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் வெற்றியே கிட்டும் என மக்கள் பொதுவாக நம்புகின்றனர். இதனால் உங்களுக்கு, உங்கள் பேரை காத்துக் கொள்ள, கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுவும் வெற்றி பெற்ற பெண்களுக்கு ஏற்படும் துன்பமே ஆகும்.
நண்பர்கள் அல்லது எதிரிகள்
பொதுவாக வெற்றி பெற்ற சாதனையாளர்களான பெண்களுக்கு, நண்பர்களையும் எதிரிகளையும் பிரித்து அறிவது மிகவும் கடினமான விஷயம். ஏனெனில், உங்களை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் உங்கள் வெற்றியை கொண்டாடுவதற்கு கூடுவது இயற்கையே.
எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ளல்
நீங்கள் வெற்றி பெற்று, ஒரு சாதனை பெண்ணாக மாறினால், உலகம் உங்களிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்க்கும். நீங்கள் காட்டாயமாக அதை எதிர் கொண்டு அவற்றை நிறைவேற்ற முயல வேண்டும். ஏனெனில், நீங்கள் எப்போதும் வெற்றி பெற்ற பெண்ணாக முத்திரை குத்த படுகிறீர்கள்.
பிரபலம் என்ற விளம்பரத்தை தக்க வைக்க முயற்சி எடுத்தல்
உங்களுடைய வெற்றி, உங்களை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும். அந்த பிரபலம் என்ற விளம்பரத்தை தக்க வைத்துக் கொள்ள தக்க முயற்சியை மேற்கொள்ள வேண்டும். உலகம் மாறுவது இயற்கையே.நீங்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மாற்றத்தோடு போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications