Latest Updates
-
200 கிராம் பன்னீர் இருந்தா இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவியை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: மார்ச் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழ்வாங்க.. -
தீபாவளிக்கு இந்த அவல் முறுக்கை செஞ்சு பாருங்க - வாரக்கணக்கில் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
புதன்-சுக்கிரனால் உருவாக்கப்படும் லட்சுமி நாராயண யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
எம தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்? எந்த இடத்தில் மற்றும் திசையில் ஏற்றி வைக்க வேண்டும்? -
இந்தியாவின் 'ஐஸ்க்ரீம் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? இங்க தினமும் ஐஸ்க்ரீம் சாப்பிடணுமாம் -
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும்
உண்மையான ஆண் மகன்களிடம் இருக்கும் 8 சிறந்த குணங்கள்!!!
ஆண்மையுடனும், அழகாகவும் இருக்கும் ஆண்களைத் தான் உண்மையான ஆண்பிள்ளை என்று நாம் சொல்லுவோமா? இல்லை. தன்னுடைய வாழ்நாளில் பின்பற்றும் சில குறிப்பிட்ட குணங்களால் தான் உண்மையான ஆண்மகன் என்பவன் உருவாக்கப்படுகிறான்.
இதுப்போன்று வேறு: ஆண்கள் செய்யும் வேடிக்கையான மற்றும் விந்தையான விஷயங்கள்!!!
அவன் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் கொண்டு உருவாக்கப்படுவதில்லை, அவனுக்குள் இருக்கும் மனிதனைக் கொண்டு உருவாக்கப்படுகிறான். எனவே, உண்மையான ஆண்மகன்களிடம் இருக்க வேண்டிய அந்த குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் உங்களுக்கும் ஆர்வம் உள்ளதல்லவா?!

வலிமையானவன்
முகத்திற்கு நேராக வீசப்படும் எதிர்மறை விமர்சனங்களால் சஞ்சலம் அடையாமல் இருப்பவன் தான் உண்மையான ஆண் மகன் ஆவான். அவன் மோசமான சூழல்களைக் கண்டு அழ மாட்டான், அவற்றை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்வான். மேலும் சூழல்களை அவன் ஒரு போதும் குறை சொல்லமாட்டான், சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவரை நோக்கி ஓடவும் செய்யமாட்டான் இவன். செயல் மற்றும் வார்த்தைகளுக்குப் பொறுப்பாக இவன் நடந்து கொள்வான். உலகையே வெல்லத் தயாராக இருக்கும் வகையில் இந்த ஆண்மகன் தன்னைத் தயார் செய்து கொள்வான்.

கவனம் மிக்கவன்
முக்கியமானவை மற்றும் தேவையற்றவைகளுக்கு இடையிலான வித்தியாசங்களை கண்டு கொள்ளும் மனிதனாக இருக்கும் ஆண்மகன், பயனில்லாத செயல்களைச் செய்வதில்லை. அவனுடைய உண்மையான குறிக்கோள்களை அடைய உதவும் வகையிலும், உடல் மற்றும் மனதை நிலைநிறுத்தவும் கூடியவற்றையே பொழுதுபோக்குகளாகக் கொண்டிருப்பவன் உண்மையான ஆண்மகன். வலிமை, குடும்பம் மற்றும் பணத்தின் மீது கவனமாக இருக்கும் இவன், செக்ஸை நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்ப மாட்டான்.

குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவன்
உண்மையான ஆண்மகன் தன்னுடைய குடும்பத்தின் முதுகெலும்பாக இருப்பான், தன்னுடைய குடும்பத்தை உறுதியானதாகவும் மற்றும் முன்னோர்களுடைய பாரம்பரியத்தையும், பொறுப்பையும் பின்பற்றும் வகையிலும் காத்து வருவான். தன்னுடைய குழந்தைகளை மிகவும் விரும்பவும், அவர்களிடம் ஒழுக்கத்தை கொண்டு வரவும் முழுமையான முயற்சிகளை அவன் செய்வான். குடும்பத்தின் வேலையாக அல்லது நிறுவனத்தின் வேலை என எதுவாக இருந்தாலும் பொறுப்புள்ளவனாக நடந்து கொள்வான்.

முன்மாதிரியாக இருக்க முனைபவன்
உண்மையான ஆண்மகன் தன்னையும், பிறரையும் மதிப்பவனாக இருப்பான்; அவன் ஒழுக்கத்தைப் பின்பற்றி, மீறாமல் நடந்து கொள்வான். தன்னுடைய நேரத்தைத் திறமையுடன் பயன்படுத்தி, நல்ல பலன்களைப் பெறுவான். உண்மையான ஆண்மகனின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு ஊக்கம் தருபவையாக இருக்கும். சவால்களை எதிர்கொள்ளும் ஆண்மகன் அதனை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக் காட்டுவான்.

அரட்டை தேவையில்லை
உண்மையான மனிதன் தன்னுடைய பேச்சை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பான். தனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி அவன் ஒரு போதும் பேசுவதில்லை மற்றும் தெரியாத மனிதர்களிடமும் அவன் பேசுவதில்லை. பெண்களைப் போல மற்றவர்களிடம் புறம் பேசவும் அவன் விரும்புவதில்லை. தேவைக்கேற்ப சரியான வார்த்தைகளை மட்டுமே அவன் உதிர்ப்பான்.

ஒரு சொல், ஒரே செயல்
உண்மையான ஆண்மகனுக்கு அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் முக்கியமானது. அவன் தன்னுடைய உறுதிமொழிகளைக் காப்பாற்றுவான், காப்பாற்ற முடியாத உறுதிமொழிகளை அவன் கொடுப்பதில்லை. மேலும், அவன் சொன்ன சொல்லை ஒரு முறை கூட மீற மாட்டான், ஏனெனில் வார்த்தைகளின் வலிமையை நன்றாக உணர்ந்தவன் இவன்.

தன்னுடைய வாழ்க்கையை தானே உருவாக்குதல்
உண்மையான ஆண்மகன் அதிர்ஷ்டத்தை நம்பியிருப்பதில்லை, நல்ல நேரம் கதவைத் தட்டும் என்று காத்திருப்பதும் இல்லை. சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்து, திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தன்னுடைய குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ளத் தெரிந்தவன் தான் உண்மையான ஆண்மகன். குருட்டு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல், தன்னுடைய வெற்றியை தானே உருவாக்கும் தன்னம்பிக்கை மிக்கவன் உண்மையான ஆண்மகன்.

பெண்களைப் போல பார்க்க மாட்டான்
பெண்களைப் போல தோற்றமளிக்கும் நீளமான முடி மற்றும் கை விரல் அலங்காரங்களை அவன் கண்டு கொள்வதில்லை. மார்பில் உள்ள முடியை ஷேவ் செய்யலாம் என்றாலும் கூட அவன் அவ்வாறு செய்வதில்லை. அவனுக்குத் தேவையான சுகாதாரத் தேவைகளை பெண்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவன் உணர்ந்திருப்பான்.



Click it and Unblock the Notifications
