Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இந்தியர்களுக்கு ஏன் வெள்ளைத்தோலின் மீது மோகம் அதிகம் உள்ளது?
பரவலாகவே இந்தியர்கள் வெள்ளைத்தோலுக்கு மயங்கும் குணம் கொண்டவர்கள் என்ற எண்ணம் உள்ளது. உதாரணத்திற்கு மேட்ரிமோனியல் இணைய தளங்களை எடுத்துக் கொள்ளுங்கள். வெண்மையான (ஃபேர் லுக்) மற்றும் நல்ல தோற்றம் கொண்ட மணமகன் அல்லது மணமகள் தேவை என்ற வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அழகான மணமகளாக தோற்றமளிப்பதற்கும், எடுப்பான மணமகனாக தோற்றமளிப்பதற்கும் வெள்ளைத் தோல் மிகவும் முக்கியம் என்பது தான், இதில் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது.
பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் தான் வெள்ளைத் தோல் மோகம் உருவாகத் துவங்கியது. வெள்ளைத் தோலுடைய பிரிட்டிஷ்காரர்கள் நம்மீது ஆளுமை செலுத்தி வந்ததால், நமக்கும் வெள்ளைத் தோல் மீதான மோகம் வரத் துவங்கியது எனலாம்.
இவ்வாறு வெள்ளைத் தோலின் மீது இந்தியர்கள் மோகம் கொண்டிருப்பது ஏன் என்பதற்கு சில காரணங்களை பட்டியலிட முடியும். இந்த காரணங்களை ஒன்றாக்கி, உங்களுக்கு தமிழ் போல்ட் ஸ்கை வழங்குகிறது.

கவனத்தை ஈர்க்க
கருப்பாக இருப்பவர்கள், தங்களை யாரும் கவனிப்பதில்லை என்று நினைக்கிறார்கள். எனினும், இது உண்மையல்ல!

அழகாக இருக்க...
இந்தியாவில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் பெரும்பாலானவை, வெள்ளைத் தோலை உருவாக்கும் கிரீம்களால் நம்மால் அழகாக தோற்றமளிக்க முடியும் என்ற எண்ணம் வலுவாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், செய்தித்தாள்கள் மற்றும் ஆன்லைன் மேட்ரிமோனியல் இணைய தளங்களில் வரும் விளம்பரங்கள் கூட இந்த விஷயத்தையே பிரதிபலிக்கின்றன. இதன் காரணமாகவும் இந்தியர்கள் வெள்ளைத் தோலின் மேல் மோகத்துடன் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

நாமும் அவசியம்
ஒரு குழுவிலோ அல்லது சமூகத்திலோ நம்மை மற்றவர்கள் விரும்பச் செய்வதற்கும் மற்றும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும் வெள்ளைத் தோல் அவசியம் என்று இந்தியர்கள் நினைப்பதும் இந்த மோகத்திற்கு காரணமாக உள்ளது.

வெளிநாட்டு மோகம்
இந்தியர்கள் வெள்ளையர்களை மிகவும் ஆழமாக கவனித்து வருகிறார்கள். இதற்கு காரணமாக இருப்பது அவர்களுடைய வெள்ளைத் தோலன்றி வேறெதுவும் இல்லை. ஆனால், பெண்கள் உயரமான, கருப்பான மற்றும் அழகான ஆண்களையே விரும்புவர்கள் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம்!

தோல் வண்ணமே, மன வண்ணம்
இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், பெரும்பாலான இந்தியர்கள் நம்முடைய தோலின் வண்ணத்தைக் கொண்டே நாம் எப்படிப்பட்டவர்கள் என்று மதிப்பிடுகிறார்கள். உங்களுடைய தோலின் வண்ணம் தான் உங்களுடைய நிலையை பறைசாற்றுவதாக உள்ளது என்கிறார்கள், இவர்களில் சிலர். இந்தியர்கள் ஏன் வெள்ளைத் தோலின் மீது மோகத்துடன் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்!

நானும் ஸ்டார்!
இன்றைய சினிமா நட்சத்திரங்கள் வெள்ளைத் தோல் கொண்டவர்களாகவே இருப்பதால், நானும் ஸ்டார் என்ற எண்ணத்துடன் வெள்ளைத் தோல் மோகம் தலைக்கேறுவதை இந்தியர்கள் தடை செய்வதில்லை.



Click it and Unblock the Notifications
