Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
வெற்றிப்பாதையை நோக்கி செல்லும் ஆண்கள் மேற்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்கள்!!!
வெற்றி பெற வேண்டுமென்றால் கடினமாக உழைத்தால் மட்டும் போதாது, புத்திசாலித்தனமாகவும் உழைக்க வேண்டும். நாம் அனைவருமே வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினாலும், தவறான இடங்களில் நமது கடும் உழைப்பைக் கொட்டுவதால் வெற்றி எட்டாக் கனியாகப் போய் விடுகிறது.
ஆனால், சில எளிமையான பழக்கவழக்கங்களும், புத்திசாலித்தனமான எண்ணங்களும் நம் வாழ்க்கையை வெற்றிப் பாதையை நோக்கித் திருப்புகின்றன. இவ்வாறான பழக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

நேரமாக எழவும்
ஒரு நாளின் மிகவும் உபயோகமான நேரமாக இருப்பது அந்நாளின் காலை நேரம் மட்டுமே. அந்நேரத்தில் உங்களுடைய உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டும் புத்துணர்வுடன் இருப்பதால், அந்நாளுக்கான சவால்களை எதிர்கொள்ள அதிகமான சக்தி நம்மிடம் இருக்கும். உங்களுடைய நாளை அலுவலகத்திற்கு தாமதமாக சென்று அவசரமாக தொடங்க வேண்டாம், அதற்கு 2 மணிநேரம் முன்னதாகவே சென்று நிதானமாக தொடங்குங்கள். அப்போது அந்நாளில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை திட்டமிடுங்கள், அவற்றைப் பட்டியலிடுங்கள் மற்றும் இந்த திட்டத்தை உறுதியாகப் பின்பற்றுங்கள்.

உடற்பயிற்சி
வாழ்க்கையின் குறிக்கோள்களை சரியாக அடைவதற்கு ஆரோக்கியமான உடலைக் கொண்டிருத்தல் அவசியமாகும். எனவே, தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள். இந்த பயிற்சிகள் நீங்கள் செய்யும் கடின உழைப்புக்கு உறுதுணையாக இருந்து வெற்றியைப் பரிசளிக்கும்.

ஆள் பாதி ஆடை பாதி
உங்களிடம் நம்பிக்கை அதிகளவில் இருந்தால், உங்களுடைய போராட்டத்தில் பாதியளவு வெற்றியைப் பெற்றுவிட்டீர்கள் என்று பொருளாகும். உங்ளுடைய தோற்றம் நன்றாக இருக்கும் போது, நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். எனவே, நன்றாக தோற்றம் அளிக்குமாறும், நல்ல உடை அணிந்துள்ளவாறும் இருந்தால், உங்களுடைய நம்பிக்கை அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்திடுங்கள். இந்த தோற்றத்தில் உலகத்தின் கண்ணோட்டம் மாறுபட்டதாக இருக்கும்.

சரியான உணவு
நீங்கள் சாப்பிடும் உணவு உங்களை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவ வேண்டுமே தவிர, படுக்கையில் புரளும் எண்ணத்தைக் கொடுக்கக் கூடாது. நீங்கள் சாப்பிடும் மதிய உணவு சோர்வையும், தூக்கத்தையும் தருவதாக இருந்தால், அந்த உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். எளிமையான உணவு உண்டு, ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள்.



Click it and Unblock the Notifications