Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
Poonam Pandey: கவர்ச்சி கன்னி பூனம் பாண்டே கிளப்பிய மறக்க முடியாத சில சர்ச்சைகள்!
Poonam Pandey Controversy List: கவர்ச்சி கன்னியாக அறியப்படும் பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டேவின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதே ஆன கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிப்ரவரி 01 ஆம் தேதி தனது மும்பை இல்லத்தில் திடீரென்று மயங்கி விழுந்து காலமாகியுள்ளார். இச்செய்தி இன்று காலை அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் அவரது மேனேஜர் தெரியப்படுத்தினார்.
பூனம் பாண்டே என்று சொன்னதுமே பலரது மனதிலும் பலவிதமான விஷயங்கள் தோன்றலாம். ஏனெனில் இவர் அந்த அளவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக தொடர்ந்து பல சர்ச்சைகளில் இவரது பெயர் அடிபட்டு வந்ததால், சர்ச்சைக்கு பெயர் போனவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இதோ சர்ச்சை ராணி பூனம் பாண்டேவால் எழுந்த சில மறக்க முடியாத சர்ச்சைகள்..

2011 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பாக அளிக்கப்பட்ட சர்ச்சைமிக்க வாக்குறுதி (Will Strip Down If India Wins World Cup 2011)
2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா உலக கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்று பூனம் பாண்டே உறுதியளித்து, மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவரது துணிச்சலான இந்த கூற்று பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அதற்கு பிபிசிஐ அனுமதிக்கவில்லை.
லீக்கான குளியல் வீடியோ (Leaked Bathroom Video)
பூனம் பாண்டே கவர்ச்சிக்கு பெயர் பெற்றவர். ஒருமுறை பூனம் பாண்டேவின் குளியலறை வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். லீக்கான இந்த குளியல் வீடியோவில், இவர் நடனமாகிக் கொண்டே குளிப்பது இருந்தது. குறுகிய நேரத்தில் அதிகமாக வைரலான இந்த வீடியோவை யூடியூப் முடக்கிவிட்டது.
கோவிட்-19 விதிகளை மீறியதால் கைது (Arrest For Violating COVID-19 Rules)
மிகவும் கொடிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஆங்காங்கு லாக்டவுன் போடப்பட்ட போது, பூனம் பாண்டே ஒரு சர்ச்சையில் சிக்கினார். அது என்னவெனில், கோவிட்-19 லாக்டவுனின் போது, வெளியே யாரும் வரக்கூடாது என்று கூறப்பட்ட போது, இவர் தனது கணவர் சாமுவுடன் வெளியே சுற்ற முயன்றுள்ளார். விதிகளை மீறியதால் மும்பை போலீசார் அவரை கைது செய்தனர்.
'பாண்டே ஆப்' சர்ச்சை ( Launched Her 'Pandey App')
2017 ஆம் ஆண்டில் பூனம் பாண்டே தனது சொந்த ஆப்பை அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த ஆப் அதன் கொள்கைகளை மீறியதற்காக கூகிள் ப்ளே ஸ்டோர் அகற்றியது. இந்த ஆப்பில் பூனம் பாண்டே தனது கவர்ச்சியான படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இது கூகிளின் வழிகாட்டுதல்களை மீறுவதாக கருதி, அந்த ஆப்பை கூகிள் ப்ளே ஸ்டோர் அகற்றிவிட்டது.
ஆபாச குற்றச்சாட்டு (Obscenity Charges on Poonam Pandey)
2014 ஆம் ஆண்டில், பூனம் பாண்டே தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆபாசத்தைப் பரப்பியதாகவும், வெளிப்படையான பாலியல் வீடியோவை வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். "தி பாத்ரூம் சீக்ரெட்ஸ்" என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோ, அவருக்கு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியது.
கணவர் மீது தாக்குதல் வழக்கு (Assault Case Against Husband)
பூனம் பாண்டே 2020 ஆம் ஆண்டில் சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக குற்றம் சாட்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஹனிமூனுக்காக கோவாவிற்கு சென்ற போது பூனம் சாமுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, தன்னை கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.



Click it and Unblock the Notifications











