Latest Updates
-
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது-ன்னு சொல்லுங்க.. நீங்க பலி வாங்கும் நபரா இல்லையா-ன்னு சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும் வகையில் இருக்கும் சுவாரஸ்யமான படங்களாகும். முக்கியமாக இந்த வகை படங்களானது ஒருவரது குணாதிசயங்களை பிரதிபலிக்கும். மேலும் இப்படங்கள் நமது கவனத்தை சிதறவிடாமல் சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.
நமது குணாதிசயங்களை மற்றவர்கள் கணித்து கூறுவதை தெரிந்து கொள்ள ஒருவித ஆவல் அனைவருக்கும் இருக்கும். உங்களுக்கும் அப்படியொரு ஆர்வம் இருந்தால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள புதிர்களை கண்டுபிடியுங்கள். அதுவும் நீங்கள் பலி வாங்கும் நபரா அல்லது கருணை உள்ளம் கொண்ட நபரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் அதை தெரிவிக்கும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள். இந்த படத்தைக் கண்டதும், முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது என்பதை மனதில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் கண்ணில் தென்பட்ட விஷயம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் உள்ளன. அவை பாம்பு மற்றும் கை. இந்த இரண்டில் உங்கள் கண்களுக்கு எது முதலில் தெரிந்தது என்பதை மனதில் பதித்து, அந்த படம் என்ன சொல்ல வருகிறது என்பதை படித்து பாருங்கள்.
கை தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு கை தெரிந்தால், நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்புவீர்கள். புதிய சவால்களையும், சாகசங்களையும் தொடர்ந்து தேடுவீர்கள். உங்களால் ஒரு இடத்தில் அமைதியாக எந்த வேலையையும் செய்யாமல் இருக்க முடியாது. எப்போதும் ஏதாவது புதிதாக ஒன்றை செய்ய நினைப்பீர்கள். யாருடனும் மோத விரும்பமாட்டீர்கள். ஏதாவது உங்களை தொந்தரவு செய்தால், அதிலிருந்து விலகி இருப்பீர்கள். வாழ்க்கை சிறியது என்று நம்புபவர். நாளை எப்படி இருக்கும் என்று யோசிக்காமல், இன்று எப்படி இருக்கிறோம் என்று யோசித்து வாழ்வீர்கள். முக்கியமானவற்றில் மட்டுமே எப்போதும் கவனம் செலுத்துவீர்கள். மொத்தத்தில் நீங்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் மற்றும் வெறுப்புணர்வை வைத்திருக்கமாட்டீர்கள்.
பாம்பு தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பாம்பு தெரிந்தால், நீங்கள் எதையும் கூர்ந்து கவனிக்கும் குணம் கொண்டவர். உங்களை யாரேனும் கட்டளையிட்டால் அது உங்களுக்கு பிடிக்காது. மற்றவர்கள் உங்களை நம்பிக்கையான நபராக கருதுவார்கள். நீங்கள் மிகவும் நேர்மையானவர்கள். பாசாங்குதனத்தை வெறுப்பீர்கள். யாரேனும் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டால், அது உங்களை ஆழமாக காயப்படுத்தும். இதனால் சில சமயங்களில் பழிவாங்கவும் நீங்கள் நினைக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சோதனை உங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கான ஒரு வேடிக்கையான வழியாகும். இந்த சோதனை எவ்வளவு துல்லியமாக இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications