Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது?
இந்த படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க அக்கறையானவரா, இல்லையா-ன்னு சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களை கவரும்படி வித்தியாசமாக இருப்பதோடு, அதில் பல விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்க்கும் போது, நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. உளவியல் பகுப்பாய்வில் கூட ஆப்டிகல் இல்யூஷன் பட சோதனை முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இப்படியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் உலா வருகின்றன. இந்த படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் ஒருவரின் குணாதிசயங்கள், ஆசைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். கீழே ஒரு சுவாரஸ்யமான மற்றும் புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் சுவாரஸ்யமான குணாதிசயங்களைக் கூற முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை கூறுங்கள். அது நீங்கள் அக்கறை உள்ளவரா, இல்லையா என்பதை தெரியப்படுத்தும்.
ஒரு பெண்ணின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் மற்றவர்கள் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள் என்று அர்த்தம். மேலும் உங்களுக்கு ஒவ்வொன்றும் மற்றும் ஒவ்வொருவருமே சுவாரஸ்யமானவர்கள் மற்றும் தனித்துவமானவர்கள். மிகவும் ரொமான்டிக்கானவர்கள். நீங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்பானவருடன் நேரத்தை செலவிட அதிகம் விரும்புவீர்கள். முக்கியமாக நீங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள் மற்றும் நீங்கள் இருக்கும் இடம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்.
இரண்டு மீன்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு இரண்டு மீன்கள் மிதந்து கொண்டிருப்பது போன்று தெரிந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கை வாழ்க்கையை சந்தோஷமாக வாழ விரும்புவீர்கள். வாழ்க்கை போகும் போக்கில் வாழ விரும்புவீர்கள். இதனால் நீங்கள் மற்றவர்களை உங்களுடன் இணைத்துக் கொள்ள விரும்பமாட்டீர்கள். உங்களிடம் உள்ள ஒரு நேர்மறையான குணம் என்றால், நீங்கள் ஒரு பிரச்சனையை எடுத்தால், அதற்கு எளிதான தீர்வுகளை காண்பீர்கள். நல்ல ஞானமுள்ளவர்களாக கருதப்படுவீர்கள். இதனால் மற்றவர்கள் உங்களிடம் ஆலோசனை பெற அதிகம் வருவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: The Minds Journal



Click it and Unblock the Notifications