Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க முக்கியமான குணத்தை சொல்றோம்..
Optical Illusion: ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த மாதிரியான படங்களில் பலவிதமான விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் ஆளுமையைப் பற்றி உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது மனம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி கூறும். இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். உங்களின் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான குணம் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிரிக்கும் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சிரிக்குமாறான முகம் தெரிந்தால், நீங்கள் மற்றவர்களால் மிகவும் இரக்கமுள்ள நபராக கருதப்படுவீர்கள். ஆனால் இயற்கையாகவே நீங்கள் அதிக இரக்கமுள்ள மற்றும் மிகவும் அக்கறையுள்ள நபர். எப்போதும் மற்றவர்களிடம் உள்ள சிறந்ததை மட்டுமே பார்ப்பீர்கள் மற்றும் எளிதில் மன்னித்துவிடுவீர்கள். நீங்கள் செய்யாத ஒன்றை மற்றவர் செய்ததாக குற்றம் சாட்டும் போது, நீங்கள் அளவுக்கு அதிகமாக வருத்தம் கொள்வீர்கள்.
சந்திரன்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சந்திரன் தெரிந்தால், நீங்கள் உறவு விஷயத்தில் அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள் மற்றும் நீங்கள் மிகவும் ரொமான்டிக்கான நபர். சிறு விஷயங்களையும் மனதளவில் எடுத்துக் கொள்வதால், ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ரோலர்கோஸ்டர் போன்று இருக்கும். நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது, உங்கள் கால்கள் தரையில் படாத அளவில் துள்ளி குதிப்பீர்கள். ஆனால் வருத்தப்பட்டால், அதிலிருந்து மீள முடியாத அளவில் மனச்சோர்வு நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
