Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த படத்துல முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்க ஆழ்மன பாதுகாப்பின்மையை சொல்றோம்..
Optical Illusion: ஒவ்வொருவருக்குமே தங்களைப் பற்றி மற்றவர்கள் கணித்து கூறுவதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதுவும் நீங்கள் உங்களின் ஆழ்மனதில் உள்ள பாதுகாப்பின்மையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை முயற்சித்துப் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை பல்வேறு விஷயங்கள் நிறைந்த ஒரு அழகான மற்றும் கவர்ச்சியான படங்களாகும். இந்த மாதிரியான படங்கள் ஒவ்வொருவரின் பார்வையிலும் வெவ்வேறு விஷயங்களை வெளிப்படுத்தும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் கண்களில் தெரிவதற்கு காரணம், அவர்களின் மூளையின் செயல்பாடு தான்.

அதுவும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது நாம் என்ன உணர்கிறோம், நம் எண்ணங்கள் மற்றும் உலகத்தைப் பற்றிய நமது புரிதலைப் பாதிக்கிறது. இந்த படங்கள் ஏன் நம்மைத் திகைக்க வைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயலும்போது விஞ்ஞானிகள் கூட தங்களைத் தாங்களே குழப்பிக் கொள்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி மட்டும் வெளிப்படுத்துவதில்லை, ஒருவரின் புத்திசாலித்தனத்தையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. அந்த வகையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டு விஷயங்கள் ஒருவரது கண்களில் முதலில் தென்படலாம். அதில் ஒன்று கண் மற்றொன்று பள்ளம். இவ்விரண்டில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள். உங்கள் ஆழ்மனதில் உள்ள பாதுகாப்பின்மையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
கண்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்களுக்கு கண் தெரிகிறது என்றால், நீங்க்ள உங்கள் இலக்குகளை அடைவதில் அக்கறை கொண்டிருப்பதையும், உங்கள் எதிர்கால அபிலாஷைகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளீர்கள் என்றும் அர்த்தம். மேலும் நீங்கள் உணர்ச்சி ரீதியாக பாதுகாப்பாக உணரமாட்டீர்கள். உங்கள் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையை அதிகம் கொண்டிருப்பீர்கள்.
மிகவும் கடினமாக உழைப்பீர்கள். உங்களின் படைப்பாற்றல் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வர விரும்புவீர்கள். அதே வேளையில் அந்த மாற்றம் உங்களை சங்கடப்படுத்தும். நீங்கள் எப்போதும் சௌகரியமான பகுதியில் தான் இருக்க விரும்புவீர்கள்.
பள்ளம்
ஒருவேளை உங்கள் கண்களுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் மரங்களால் சூழப்பட்ட பள்ளம் தெரிகிறது என்றால், நீங்கள் மிகவும் சென்சிடிவ்வான நபர். நீங்கள் மற்றவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் மனம் புண்படும்படி ஒருபோதும் பேசமாட்டீர்கள். மற்றவர்களுடன் நன்கு பழகிக் கொண்டிருக்கும் போதே, ஒரு எல்லையை நிறுவி, அதைத் தாண்டாமல் சரியாக நடந்து கொள்வீர்கள்.
மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எப்போதாவது யாரேனும் ஒருவர் உங்களை லேசாக புண்படுத்திவிட்டாலும், நாள் முழுவதும் அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். மிகவும் நட்பாக இருப்பீர்கள். ஆனால் உங்கள் நண்பர்கள் உங்களை அதிகமாக கட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நீங்கள் மற்றவர்களால் எளிதில் திசைதிருப்பப்படுவீர்கள். ஒரு முடிவை எடுப்பது என்பது உங்களுக்கு சவாலானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications