நியூமராலஜி படி இந்த 5 தேதிகளில் பிறந்தவங்க மைண்ட் கேம் விளையாடி நினைச்சதா சாதிக்காம விடமாட்டாங்களாம்...!

Numerology: ஒருவரின் ஆளுமைப் பண்புகளை ஜோதிடம் போலவே எண்கணிதம் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ராசி மற்றும் நட்சத்திரத்தைப் போல எண்களை அடிப்படையாக வைத்து செயல்படும் ஒரு பழமையான நம்பிக்கை அமைப்பு.

ஒரு நபரின் பிறந்த தேதி அவர்களின் விருப்பங்கள், இலட்சியங்கள் மற்றும் அவர்கள் மற்றவர்களிடம் எப்படி பழகுகிறார்கள் போன்றவற்றைப் பாதிக்கலாம் என்று எண் கணிதம் கூறுகிறது. சில தேதிகளில் பிறந்தவர்கள் மன விளையாட்டுகளை விளையாடுவதற்கும், மற்றவர்களைத் தங்களின் நலனுக்காக பயன்படுத்துவதற்கும் புகழ்பெற்றவர்களாக இருப்பார்கள்.

Numerology Which Date Born People Are Expert At Playing Mind Games in Tamil

இதில் சிறப்பு என்னவென்றால் இவர்கள் மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வதை அவர்களே அறிய மாட்டார்கள். இந்த பதிவில் எண்கணிதத்தின் படி எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் மற்றும் மற்றவர்களிடம் மைண்ட் கேம் விளையாடுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து மாதங்களிலும் 3 ஆம் தேதி பிறந்தவர்கள்

எண் கணிதத்தின் படி, எண் 3 நட்பு, படைப்பாற்றல் மற்றும் தொடர்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அனைத்து மாதங்களிலும் மூன்றாவது தேதியில் பிறந்தவர்கள் உண்மையான அன்புடனும், நம்பிக்கையுடனும் இருப்பார்கள்.

அவர்கள் மற்றவர்களுடன் பழகுவதை விரும்பினாலும், அவர்கள் தங்கள் நலன்களுக்கு உதவும் வகையில் விவாதங்களைத் திசைதிருப்ப தங்கள் புத்திசாலித்தனத்தையும், வசீகரத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் போக்கைக் கொண்டிருக்கலாம். இவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் இவர்களுக்கான நன்மைகள் ஒளிந்திருக்கும்.

அனைத்து மாதங்களிலும் 7 ஆம் தேதி பிறந்தவர்கள்

எண் கணிதத்தின் படி எண் 7 சிந்தனை, ஆன்மீகம் மற்றும் விமர்சன சிந்தனையுடன் தொடர்புடையது. அவர்கள் பொதுவாக அதிநவீன சிந்தனையாளர்களாக இருந்தாலும், ஏதேனும் ஒரு மாதத்தின் 7-வது தேதியில் பிறந்தவர்கள் தங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், நன்மைகளைப் பெறுவதற்கும் மற்றவர்களைக் கையாளும் போக்கைக் கொண்டிருக்கலாம்.

அவர்கள் தங்கள் உறவுகளில் எப்போதும் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் மற்றும் அவர்களின் அறிவுசார் திறன்களைப் பயன்படுத்தி தேவையற்றவர்களை அவர்களின் வாழ்க்கையை விட்டு வெளியேற்ற முடியும்.

அனைத்து மாதங்களிலும் 2 ஆம் தேதி பிறந்தவர்கள்

இராஜதந்திரம், உள்ளுணர்வு மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் பண்புகள் அனைத்து மாதங்களிலும் 2 ஆம் தேதி பிறந்தவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எண் கணிதத்தில் எண் இரண்டு என்பது நல்லிணக்கம் மற்றும் சமநிலையைக் குறிக்கிறது.

அதேசமயம், இந்த நாளில் பிறந்தவர்கள் எப்போதாவது சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தவும் தங்கள் உறவுகளை மேம்படுத்தவும் தங்கள் வலுவான உள்ளுணர்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் அன்பு மற்றும் உணர்ச்சிரீதியான பாதுகாப்பை விரும்புகிறார்கள், எனவே அவர்கள் மற்றவர்களின் அன்பு மற்றும் விசுவாசத்தை அளவிடுவதற்கு மன விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

அனைத்து மாதத்திலும் 5 ஆம் தேதி பிறந்தவர்கள்

அனைத்து மாதத்திலும் 5 ஆம் தேதி பிறந்தவர்கள் இயற்கையாகவே அதிக ஆர்வம் மற்றும் தைரியம் கொண்டவர்கள். எண் கணிதத்தில், எண் 5 நெகிழ்வுத்தன்மை மற்றும் சுதந்திரத்தை குறிக்கிறது. ஆனால் மிகவும் அரிதாக, இந்த தேதியில் பிறந்தவர்கள் தங்கள் அணுகுமுறைகளையும் நடத்தைகளையும் பல்வேறு சூழல்களில் தங்கள் நன்மைக்காக மாற்றிக்கொள்ள இந்த நெகிழ்வுத்தன்மையைப் பயன்படுத்தலாம்.

மற்றவர்களின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்ளவும், உறவுகளை அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் இவர்கள் மனவிளையாட்டுகளில் ஈடுபடலாம்.

அனைத்து மாதத்திலும் 9 ஆம் தேதி பிறந்தவர்கள்

அனைத்து மாதத்திலும் 9 ஆம் தேதி பிறந்தவர்கள் பெரும்பாலும் இலட்சியவாதிகள், கனிவானவர்கள் மற்றும் அனைவரிடமும் பச்சாதாபம் கொண்டவர்கள். எண் கணிதத்தில், எண் 9 என்பது கருணை மற்றும் பரோபகாரத்தைக் குறிக்கிறது.

இருப்பினும், இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்போதாவது மற்றவர்களின் நோக்கங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க மன விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள் அல்லது அவர்களின் நோக்கங்களை அடைய சூழ்நிலையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மனவிளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, June 8, 2024, 12:00 [IST]
Desktop Bottom Promotion