Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
புத்தாண்டு தீர்மானத்தில் நாம் ஏன் தோற்கிறோம்? அதற்கான உண்மையான காரணங்கள் என்ன தெரியுமா?
New Year 2024: நம்மில் பலர் புத்தாண்டு அன்று செய்யக் கூடிய விஷயம் என்னவென்றால் புத்தாண்டு தீர்மானம் தான். கடந்த ஆண்டு எதிர்கொண்ட சவால்களை போக்கும் விதத்தில் நிறைய புத்தாண்டு தீர்மானங்களை நாம் எடுப்போம். எல்லாரும் ஒரு வாரம் அந்த புத்தாண்டு தீர்மானங்களை தீவிரமாக பின்பற்றுவதும் உண்டு. ஆனால் அதற்கு அப்புறம் அதை யாரும் பின்பற்றுவதில்லை.
ஏன் புத்தாண்டு தீர்மானங்களை நம்மால் நிறைவேற்ற முடியாமல் போகிறது. நம் முயற்சிகள் தோல்வியடைய என்ன காரணம் என்று என்றாவது யோசித்து இருக்கோமா. சரி வாங்க உங்கள் புத்தாண்டு தீர்மானம் நிறைவேறாமல் போறதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் அறிந்து கொள்வோம்.

புத்தாண்டு தீர்மானங்கள் என்றால் என்ன?
புத்தாண்டு தீர்மானங்கள் என்பது புத்தாண்டின் தொடக்கத்தில் நாம் அனைவரும் நம்மால் முடிகின்ற தீர்மானங்களை நிறைவேற்ற எடுக்கும் உறுதிமொழியாகும். நம்முடைய தனிப்பட்ட கடமைகள், இலக்குகள், சுய முன்னேற்றம் மற்றும் நேர்மறை மாற்றம் இவற்றை அடிப்படையாக கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுகிறது.
மக்கள் முக்கியமாக ஜனவரி 1 ஆம் தேதி தங்களுடைய எடையை குறைக்க, தங்களுடைய உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்த தீர்மானங்களை அதிகமாக எடுக்கின்றனர். தனிப்பட்ட வளர்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த தீர்மானங்களை எடுக்கின்றனர்.
இந்த முதல் தொடக்கம் ஆண்டு முழுவதும் பல நன்மைகளை அளிக்கும் என அவர்கள் நம்புகின்றனர். இந்த புத்தாண்டு தீர்மானங்கள் பழைய பழக்கங்களை உடைத்தல், புதிய திறன்களைப் பெறுதல் அல்லது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துதல் ஆகியவற்றை அளிக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.
புத்தாண்டு தீர்மானங்கள் ஏன் தோல்வியடைகின்றன?
புத்தாண்டு தீர்மானங்கள் தோல்வியடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று லட்சியத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளி ஆகும். மக்கள் பெரும்பாலும் தங்கள் உயர்ந்த இலக்குகளை அடைய தங்களுடைய யதார்த்தத்தை கருத்தில் கொள்ளாமல் தீர்மானங்களை அமைக்கின்றன.
இதனால் தான் தங்களுடைய தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைகின்றனர். பல தீர்மானங்கள் தனிப்பட்ட ஆசைகளை விட சமூக அழுத்தங்களால் எடுக்கப்படுகிறது. இதன் விளைவாக அந்த தீர்மானங்களில் அர்ப்பணிப்பு இல்லாமல் போய் விடுகிறது.
தங்களால் முடியுமா முடியாத என்பதை கணிக்காமல் எடுப்பது, எதிர்பாராத சவால்களை அவர்கள் சந்திக்கும் போது புத்தாண்டு தீர்மானங்களை கைவிடப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
புத்தாண்டு தீர்மானங்கள் தோல்வியடைய காரணங்கள்
யதார்த்தமான இலக்கு அவசியம்
ஒரு தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பு அதில் உள்ள யதார்த்தமான விஷயங்களை அறிந்து எடுப்பது அவசியம். அப்பொழுது தான் இலக்குகளை எளிதாக அடைய முடியும். பல புத்தாண்டு தீர்மானங்கள் தோல்வியடைய தெளிவற்ற நோக்கங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
சுய விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும்
தீர்மானங்களின் தோல்விக்கான காரணங்களைப் பற்றி சிந்திப்பது அதிக சுய விழிப்புணர்வை வளர்க்கும். எனவே உங்கள் தீர்மானங்களின் மீது சுய விழிப்புணர்வு இருப்பது மிகவும் அவசியம். உங்கள் மீதான சுய பரிசோதனை, தனிப்பட்ட உந்துதல்கள், சவால்கள் மற்றும் தீர்மானங்கள் மீதான நுண்ணறிவு இருக்க வேண்டும்.
விடாமுயற்சி இல்லாமல் இருத்தல்
தீர்மானங்கள் தோல்வியடைய விடாமுயற்சியும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. அதிக சதவீத புத்தாண்டு தீர்மானங்கள் பொதுவான தடைகளால் தோல்வியடைகின்றன. எனவே தோல்விகளை முடிவாக எண்ணாமல் படிக்கற்களாக எண்ணி மறுபடியும் இலக்குகளை நோக்கி நகர வேண்டும்.
நீண்ட கால பழக்கம் இல்லாமல் போதல்
உங்கள் தீர்மானங்களை கடைசிவர காப்பாற்ற நீண்ட கால பழக்கங்கள் மிகவும் அவசியம். அப்பொழுது தான் கடைசி வரை தீர்மானங்களை நிறைவேற்ற முடியும். நீண்ட கால தனிப்பட்ட வளர்ச்சி உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும்.
உளவியல் தடைகள்
சில தோல்விகளை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போவதும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பெரும்பாலும், தோல்வி பயம், சுய சந்தேகம் போன்ற உளவியல் பழக்கங்களும் புத்தாண்டு தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைகிறது.
போதுமான திட்டமிடல் இல்லாமல் இருத்தல்
புத்தாண்டு தீர்மானங்களின் தோல்விக்கு பெரும்பாலும் போதிய திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இல்லாமல் இருத்தலும் ஒரு காரணமாக அமைகிறது. எனவே உங்கள் தீர்மானங்களைப் பற்றிய தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும்



Click it and Unblock the Notifications