Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
நாக பஞ்சமியான இன்று மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்ல பாம்பின் கோபத்துக்கு ஆளாவீங்க..
Nag Panchami 2023: ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத வளர்பிறை சுக்ல பஞ்சமி திதியில் நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பாம்புகளான நாகங்களானது கடவுளுடன் ஒப்பிட்டு பழங்காலத்தில் இருந்தே வழிபடப்பட்டு வருகிறது.
நாக தோஷம் உள்ளவர்கள், அந்த தோஷத்தில் இருந்து விடபடவும், அதன் தாக்கத்தைக் குறைக்கவும் நாக பஞ்சமி நாளில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால், நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

நாக பஞ்சமி நாளில் நாகங்கள் மட்டுமின்றி, சிவபெருமானையும் மக்கள் வழிபடுவார்கள். ஏனெனில் நாகங்களானது சிவபெருமானின் அலங்கார ஆபரணங்களுள் ஒன்று. ஆகவே சிவபெருமான் மற்றும் நாக தேவதைகளின் ஆசியைப் பெற விரும்புபவர்கள், நாக பஞ்சமி நாளில் விரதம் இருந்து, சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்தால் பரிபூர்ண அருளைப் பெறலாம்.
இந்த ஆண்டு நாக பஞ்சமியானது ஆகஸ்ட் 21 ஆம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. நாக பஞ்சமி திதியானது ஆகஸ்ட் 21 ஆம் தேதி நள்ளிரவு 12:21 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 22 ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த நன்னாளில் ஒருசில விஷயங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நாக தேவதைகளின் கோபத்திற்கு ஆளாகி, நாக தோஷத்தை சந்திக்கக்கூடும். இப்போது நாக பஞ்சமி நாளில் எந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.
* நாக பஞ்சமி நாளில் சிவபெருமானுக்கும், நாக தேவதைகளுக்கும் பால் அபிஷேகம் செய்வதாக இருந்தால், செம்பு பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் நீர் அபிஷேகம் செய்வதாக இருந்தால், அதை காப்பர்/செம்பு பாத்திரத்திலும், பால் அபிஷேகம் செய்வதாக இருந்தால் பித்தளை பாத்திரங்களையும் தான் பயன்படுத்த வேண்டும்.
* நாக பஞ்சமி நாளில் பாம்புகளுக்கு எந்த ஒரு தொல்லைகளையும் தரக்கூடாது. உயிருள்ள பாம்புகளை வழிபடுகிறேன் என்று அவற்றை துன்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பாவத்திற்கு ஆளாகக்கூடும். முக்கியமாக பாம்புகளுக்கு பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பால் பாம்புகளுக்கு விஷம் போன்று செயல்படக்கூடியது.
* நாக பஞ்சமி நாளில் கூர்மையான கத்தி, கத்தரிக்கால், ஊசி போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்நாளில் இவற்றை பயன்படுத்துவது அசுபமாக கருதப்படுகிறது.
* நாக பஞ்சமி நாளில் நிலத்தை தோண்டுவது அல்லது வயவை உழுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. அப்படி செய்வது அசுபமாக கருதப்படுகிறது. ஏனெனில் பாம்புகளானது தரையில் துளையிட்டு அடியில் தான் வாழ்கின்றன. இந்நிலையில் நாகங்களை வழிபடும் தினத்தில் நிலத்தை தோண்டினால், நிலத்திற்கு அடியில் வாழும் பாம்புகளுக்கு காயங்களை ஏற்படுத்தும். இதன் விளைவாக நாக தோஷத்திற்கு அல்லது பாவத்திற்கு ஆளாகக்கூடும்.
* நாக பஞ்சமி நாளில் யாரையும் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் சண்டையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* முக்கியமாக நாக பஞ்சமி நாளில் இரும்பு பாத்திரம் மற்றும் தவாவை பயன்படுத்தி சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படி செய்வது, நாக தேவதையை துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications