Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
மகரம் செல்லும் புதன்: பிப்ரவரியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கப் போகுது...
Mercury Transit 2024 In Capricorn: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஜோதிடத்தின் படி, புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது புதன் குரு பகவானின் ராசியான தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் தனது நண்பனான சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த புதன் பெயர்ச்சியானது பிப்ரவரி 01 ஆம் தேதி நிகழவுள்ளது.

இதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் தொழிலில் திடீர் பண வரவையும், முன்னேற்றத்தையும், வெற்றியையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். காதலித்து வந்தால், உங்கள் காதல் வெற்றியடையும். ஆராய்ச்சி தொடர்பான வேலைகளை செய்பவராக இருந்தால், இக்காலத்தில் நல்ல முடிவுகளுடன், பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் மற்றும் வியாபாரத்தை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறக்கூடும்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், இந்த புதன் பெயர்ச்சிக்கு பின் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால், தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் வேலையில் சிறப்பாக செயல்படுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
