Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மேஷ ராசியில் புதன் உதயமாவதால் மே 10 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறப் போகுது...
Mercury Rise In Aries: ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் தற்போது செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
அதுவும் அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். அஸ்தமன நிலையில் கிரகங்கள் வலுவிழந்து, அதனால் கிடைக்கும் நற்பலன்கள் கிடைக்காமல் தாமதமாகும். இந்நிலையில் புதன் மேஷ ராசியில் உதயமாகவுள்ளார்.

அதுவும் மே 10 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இதுவரை புதனால் கிடைக்கவிருந்த நற்பலன்களில் ஏற்பட்ட தடைகள் விலகி, இனிமேல் நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இப்போது மேஷ ராசியில் உதயமாகும் புதனால் எந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து சில நன்மைகளைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணியிடத்தில் நீங்கள் தீட்டும் புதிய திட்டத்தால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தம்பதிகளுக்கு இடையே காதல் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட பிரகாசிக்கப் போகிறது. உங்களின் செலவுகள் அதிகரித்தாலும், நல்ல பண வரவும் இருக்கும். உங்கள் தந்தையின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மூலம், புதிய வேலையைத் தொடங்குவீர்கள். நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல பெயர் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் உங்கள் பேச்சுத்திறன் சிறப்பாக இருக்கும். எழுத்து தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலகட்டத்தில் பேச்சாலேயே பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
