Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
செவ்வாய் பெயர்ச்சி: அக்டோபர் 3 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப்போகுது..
Mars Transit In Libra On October 2023: கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார்.
இந்த செவ்வாய் தைரியம், வீரம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். செவ்வாய் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 03 ஆம் தேதி செவ்வாய் சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்கு செல்கிறார்.

செவ்வாய் துலாம் ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக இந்த செவ்வாய் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் அபரிமிதமான நிதி நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். அதோடு மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இதனால் செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேற வாய்ப்புள்ளது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அதேப் போல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் அக்டோபர் 3 முதல் மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் அக்டோபரில் நல்ல லாபத்துடன், வியாபாரத்தை விரிவாக்கவும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான நன்மைகளைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகள் நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்தால், அது இக்காலத்தில் முடிவுக்கு வரும். அதுவும் தீர்ப்புகள் உங்கள் சாதகமாக வரும். பணத்தைப் பொறுத்தவரை, இந்த ராசிக்காரர்கள் நிறைய பண வரவைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications