Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
12 ஆயிரத்துக்கு பதிலாக தவறுதலாக 12 லட்சத்தை டொனேஷனாக அனுப்பிய இளைஞர்... க்ளைமாக்ஸில் வந்த ட்விஸ்ட்...!
தொண்டு செய்வது அல்லது டொனேஷன் கொடுப்பது என்பது நல்ல காரியம்தான். ஆனால் தங்கள் தகுதிக்கு ,மீறி தானம் செய்வது எப்போதும் தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் "அளவிற்க்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்று கூறியுள்ளார்கள். இதேபோல தற்போது இந்தியாவில் நடந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் மும்பையில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது, மைக்கேல் என்ற நபர் தற்செயலாக பங்களாதேஷை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்திற்கு ரூ.12,435க்கு பதிலாக ரூ.12 லட்சத்திற்கும் மேலான பணத்தை நன்கொடையாக அளித்துள்ளார். மைக்கேல் அந்த பணத்தை பங்களாதேஷில் உள்ள ஏழ்மையான மக்களுக்காக ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிறது. மைக்கேல் தான் செய்த தவறை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திய பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
தனியார் செய்தி நிறுவனத்தில் வெளிவந்து செய்தியின்படி, பங்களாதேஷத்தில் உள்ள ஒரு சமூகத்திற்காக அவர் நடத்தும் தொண்டு பற்றி தனது பக்கத்து வீட்டுக்காரர் ஜோ சொன்னதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக மைக்கேல் கூறினார். GoFundMe பக்கத்திற்குச் சென்று USD 150 நன்கொடையாக வழங்கியதாக மைக்கேல் கூறினார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவருக்கு ஒரு செய்தி வந்தது, அது அவரது கிரெடிட் கார்டில் வழக்கத்திற்கு மாறாக பெரிய பரிவர்த்தனை செய்துள்ளதாக எச்சரித்தது.
அவர் அந்த மெசேஜை திறந்தபோது, அவர் GoFundMe க்கு USD 15,041 செலுத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது தவறை உணர்ந்த மைக்கேல், அடுத்த 10-15 நிமிடங்களை தனது பணத்தைத் திரும்பப் பெறச் செலவிட்டார், மேலும் அவரது கிரெடிட் கார்டு எண்கள் 4 மற்றும் 1-ல் தொடங்குகிறது என்பதை உணர்ந்தார். ரூ. 12,435 அதாவது USD 150 நன்கொடை அளிக்க முயன்றபோது, தவறுதலாக தனது கிரெடிட் கார்டு எண் 41ஐ டைப் செய்தார், இது USD 150 பதிலாக 15,041 வரை என்று டைப் செய்துவிட்டார்.
அவர் தான் செய்த பிழையை உணர்ந்த பிறகு, மைக்கேல் GoFundMe-இன் கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்டார், இதுபோன்ற தவறுகள் பொதுவானது என்று அவர்கள் கூறினார்கள். மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திரும்ப அளிப்பதாக கஸ்டமர் கேர் நிர்வாகி மைக்கேலிடம் கூறினார். இருப்பினும், நன்கொடைத் தொகை தோன்றுவதையும் பின்னர் நிதியிலிருந்து மறைந்து போவதையும் தொண்டு நிறுவனம் இன்னும் காண முடியும் என்றும் மைக்கேலிடம் கூறப்பட்டது.
இருப்பினும், நன்கொடைத் தொகை தோன்றுவதையும் பின்னர் நிதியிலிருந்து மறைந்து போவதையும் தொண்டு நிறுவனம் இன்னும் காண முடியும் என்றும் மைக்கேலிடம் கூறப்பட்டது.
அவர் ஜோவிடம் பேசத் திட்டமிட்டார், ஆனால் அடுத்த நாள், தாராளமான நன்கொடைக்கு நன்றி தெரிவித்து மக்களிடமிருந்து பல செய்திகளைப் பெற்றார். இதையடுத்து, ரூ.12,46,991க்கு பதிலாக ரூ.82,906 வழங்க முடிவு செய்தார். இந்த முழு அனுபவமும் வின்-வின் சூழ்நிலை என்றும் அவர் கூறினார். ஆனால் அவருக்கு பணம் திரும்ப கிடைத்ததா என்பதைப் பற்றி எந்த தகவலும் இல்லை.



Click it and Unblock the Notifications
