Latest Updates
-
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
ஜூன் மாசம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Lucky Zodiac Signs In June 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது வாழ்க்கையில் கிரகங்களின் நிலை முக்கிய பங்கை வகிக்கின்றன. நவகிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ராசியை மாற்றும். அப்படி மாற்றுவதால் தான், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பலன்கள் கிடைக்கின்றன.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த ஜூன் மாதத்தில் சில முக்கிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. இப்படி மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது அதிர்ஷ்டமானதாகவும், நிறைய பண பலன்களைத் தரக்கூடியதாகவும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். இப்போது ஜூன் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் சனி பகவான் ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் உள்ளார். மேலும் சூரியனும் சுப ஸ்தானத்தில் இருப்பதால், இந்த மாதத்தில் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
இம்மாதத்தில் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் இம்மாதத்தில் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. ஏனெனில் சனி பகவான் மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் உள்ளார். மேலும் சூரிய பகவானும் நல்ல நிலையில் உள்ளார். இதனால் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம்.
வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது பல நன்மைகளை வழங்கப் போகிறது. ஏனெனில் சனி பகவான் 7 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் இக்காலத்தில் திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காணலாம்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். குடும்ப நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சில முக்கியமான வேலைகள் இந்த மாதத்தில் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வேலையைத் தொடங்க இந்த மாதம் சிறந்ததாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதமானது அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. ஏனெனில் சனி பகவான் 3 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் இந்த மாதத்தில் தனுசு ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு இந்த மாதத்தில் ஒரு நல்ல திருமண வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

