Latest Updates
-
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்..
ஏற்கனவே கோவிட் பேரழிவை கணித்த அதோஸ் சலோமி: 2024 ஆம் ஆண்டிற்கான இவரது குலைநடுங்க வைக்கும் கணிப்புகள்!
'Living Nostradamus' Athos Salome Chilling Predictions For 2024: உலகில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணித்து கூறும் பல்வேறு தீர்க்கதரசிகள் உள்ளனர். அதில் பாபா வாங்கா, நாஸ்ட்ராடாமஸ் போன்றோர் மிகவும் பிரபலமானவர்கள். இவர்களின் பல கணிப்புகள் நடந்துள்ளன.
இதனால் ஒவ்வொரு ஆண்டில் நுழையும் போதும், இந்த ஆண்டிற்காக பாபா வாங்கா, நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் என்னவென்பதை தெரிந்து கொள்ள ஆவல் கொள்வோம். இந்த பட்டியலில் புதிதாக பிரேசிலைச் சேர்ந்த ஒருவரும் இடம் பிடித்துள்ளார்.

"தி லிவிங் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படும் பிரேசிலைச் சேர்ந்த அதோஸ் சலோமி 37 வயதானவர். அதேப் போல் சலோமி கோவிட் பெருந்தொற்று, உலகக் கோப்பை இறுதிப் போட்டி, உக்ரைன் மீதான புட்டின் படையெடுப்பு மற்றும் ராணியின் மரணம் ஆகியவற்றைக் கணித்துள்ளார்.
இதனால் இவர் ஆயிரக்கணக்கான கணிப்புகளை எழுதிய 16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பார்வையாளரான நாஸ்ட்ராடாமஸுடன் ஒப்பிடப்படுகிறார். நாஸ்ட்ராடாமஸ் அடோல்ஃப் ஹிட்லரின் எழுச்சி, ஜான் எஃப். கென்னடியின் படுகொலை மற்றும் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களை முன்கூட்டியே கணித்து கூறி பிரபலமானவர்.
இப்போது பிரேசிலைச் சேர்ந்த அதோஸ் சலோமியின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் என்னவென்பதைக் காண்போம். இதில் சில கணிப்புகள் நிச்சயம் பலருக்கும் அச்சமூட்டும் வகையில் இருக்கும்.
1. மூன்றாம் உலகப்போர்
2024 ஆம் ஆண்டில் தென் சீனக் கடலில் எதிர்பாராத அளவில் பெரிய பதற்றம் ஏற்படலாம் அல்லது ஒரு பெரிய சைபர் தாக்குதல் கூட தூண்டப்படலாம் என்று அதோஸ் சலோமி கணித்துள்ளார். இந்த பதற்றத்தால் உலகளாவிய நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த ஆண்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா இடையே மோதல்கள் ஏற்பட்டு, மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த மோதல் உலகளாவிய மோதலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளார்.
2. ரஷ்யா, உக்ரைன் இடையே பதற்றம் அதிகரிக்கும்
ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்தும் சலோமி கணித்துள்ளார். அதுவும் இந்த 2024 ஆம் ஆண்டில் மோதல்கள் இன்னும் தீவிரமாகும். இந்த மோதலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அமெரிக்காவும் தலையிட்டால், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
3. ஏலியன்களுடன் தொடர்பு
2024 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்வு கொள்வதன் மூலம், முற்றிலும் மாற்றமடையும் ஒரு ஆண்டாக இருக்கும் என்று சலோமி கூறியுள்ளார். அதுவும் இது ஒரு பயங்கரமான படையெடுப்பாக இருப்பதற்குப் பதிலாக, மனிதர்களும் வேற்றுகிரகவாசிகளும் சமிக்ஞைகள் மூலம் தொடர்பு கொள்வார்கள் என்று கணித்துள்ளார்.
4. காலநிலை மாற்றம் பேரழிவை ஏற்படுத்தும்
2024 ஆம் ஆண்டில் நிலவும் காலநிலை குறித்தும் கூறியுள்ளார். அதில் அமெரிக்கா வெள்ளம், எரிமலை வெடிப்பு போன்றவற்றுடன் போராடும் என்றும், சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்கள் மெக்சிகோ வளைகுடா அருகே கொடிய வெள்ளத்தை கொண்டு வரும் என்று கணித்துள்ளார். இது தவிர கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வாஷிங்டன் மேலும் காட்டுத் தீயால் பாதிக்கப்படலாம் என்னும் கணித்துள்ளார்.
5. இறந்தவர்களுடன் பேசுவது
2024 ஆம் ஆண்டில் AI உதவியுடன் மக்கள் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசமுடியும் என்று சலோமி கணித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் ஒரு விஞ்ஞான முன்னேற்றம் மட்டுமல்ல. மர்மங்களை அவிழ்த்து, ஆறுதல் மற்றும் நமது வாழ்க்கைப் பணிகளைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்குகிறது. ஏற்கனவே AI உலகில் உள்ள ரகசியங்களை கண்டுபிடிப்ப பயன்படுத்தப்பட்டு வருவதை நம்புவதாகவும் கூறியுள்ளார்.
6. புதிய தொற்றுநோய்
பல ஆண்டுகளாக அண்டார்டிகாவில் பனியில் புதைந்திருக்கும் கொடிய வைரஸ்களால் ஒரு புதிய கொடிய தொற்றுநோய் 2024-ல் ஏற்படப் போவதாக சலோமி கணித்துள்ளார். அதுவும் இது தென் துருவத்தில் இருந்து, இது விரைவாக பரவி, உலகையே துடைக்கும் என்றும் கூறுகிறார். எனவே இந்த வைரஸை கட்டுப்படுத்தாமல் விட்டால், வரலாற்றில் காணாத அளவில் பெரிய சேதம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











