For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காந்தியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்கள் பாலியல் வன்முறையின் போது என்ன செய்ய வேண்டும்?

|

இந்தியாவின் வரலாற்றை பொறுத்தவரை அதில் ஒருவரின் பெயரை மட்டும் எந்த காலத்திலும், எவராலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது, அவர்தான் மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆவார். அவர் இந்தியாவிற்காக செய்த போராட்டங்களுக்காகவும், தியாகங்களுக்காகவும்தான் அவர் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

கிட்டதட்ட 70 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு குச்சியைக் கூட உயர்த்தாமல் அகிம்சை போராட்டத்தின் மூலம் மட்டுமே இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் சென்றார் மகாத்மா காந்தி. ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் நம்மால் அகிம்சை வழியில் போராட முடியுமா?. இந்த கேள்விக்கு காந்தி கூறியுள்ள பதில் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியாவில் பெண்களுக்கான துன்புறுத்தல்

இந்தியாவில் பெண்களுக்கான துன்புறுத்தல்

சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் அரங்கேறியது. வருடம் முழுவதுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதை நினைத்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். இதனை நம்மால் தடுக்க முடிந்ததா?

காந்தியின் அறிவுரை

காந்தியின் அறிவுரை

காந்தியைப் பற்றி உலகமே நன்கு அறிவோம். அகிம்சையின் வடிவமாகவே மகாத்மா காந்தி உருவகப்படுத்தப்படுகிறார். ஆனால் அவரின் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தும். காந்திஜி பெண்களை சண்டையிடக் கூறினாரா என்றால் ஆம் அவர் சொன்னார் என்பதே உண்மை.

 சபர்மதி ஆசிரமத்திற்கு அருகே பாலியல் வன்கொடுமை சம்பவம்

சபர்மதி ஆசிரமத்திற்கு அருகே பாலியல் வன்கொடுமை சம்பவம்

இந்த சம்பவம் காந்தியின் புத்தகங்களில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் கூறியுள்ளபடி ஆண்கள் எந்தவித தயக்கமும் பெண்கள் மீது வன்முறைகளை நிகழ்த்துவதை அவர் கண்டார். முதலில், அவர் அவர்களைத் தடுக்க முயன்றார், பின்னர் மற்றவர்கள் முன் வந்து அதைத் தடுக்கும்படி கேட்டுக்கொண்டார், ஆனால் பின்னர் பெண்களை சண்டையிடச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காந்திஜியின் சபர்மதி ஆசிரமம் ஆதரவற்றவர்களுக்கு ஒரு தங்குமிடம் மட்டுமல்ல, அவருடைய உதவியை நாடி வருபவர்களும் அவருடன் ஆண்களும், பெண்களும் உட்பட அவரைப் பின்பற்றுபவர்கள் பலர் இருந்தனர். ஒருநாள் இரவு மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் இருந்த பெண்கள் சிலர் மாலை தாமதமாக திரும்பி வந்தனர்.

MOST READ: உலகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த உளவு அமைப்புகள்... இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

காந்தியின் கோபம்

காந்தியின் கோபம்

தாமதமாக வந்ததற்கான காரணத்தை அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் திரும்பி வருகையில் சில ஆண்கள் மது போதையில் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்ததாகவும் அவர்கள் காந்தியிடம் கூறி அழுதார்கள். காந்திஜி அவர்களை சமாதானப்படுத்துவதற்கு பதிலாக ஓடிவந்ததற்காக அவர்களை திட்டினார்.

தவறை எதிர்த்து நிற்க வேண்டும்

தவறை எதிர்த்து நிற்க வேண்டும்

அவர்களை பார்த்து வருத்தமுற்ற காந்திஜி, " நீங்கள் ஏன் ஓடி வந்தீர்கள்? " என்று கேட்டார், மேலும் " நீங்கள் ஏன் அவர்களுடன் சண்டையிடவில்லை? " என்று அவர் கோபமாக கேட்டார். அவருடைய வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எந்தவொரு வன்முறையும், ஆயுதமும் இன்றி இந்தியாவை சுதந்திரம் பெற வைத்தவர் பெண்களை சண்டையிட சொல்கிறாரே என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலியல் துன்புறுத்தலின் உண்மை

பாலியல் துன்புறுத்தலின் உண்மை

காந்தி அவர்களிடம் கூறினார், " பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு அசாதாரண சூழ்நிலை, இதில் ஈடுபடுபவர் ஒருபோதும் நல்ல மனிதனாக இருக்க முடியாது. எனவே யாரும் உங்களுக்கு உதவ முன்வரமாட்டார்கள். உங்களின் முதல் ஆயுதம் நீங்கள்தான். அங்கிருந்து ஓடிப்போவதோ அல்லது உதவிக்காக அழுவதோ கூடாது, அந்த நாசக்காரர்களை எதிர்த்து நீங்கள் போராடி சண்டையில் ஈடுபடலாம் " என்று கூறினார்.

MOST READ: மாபெரும் சோழ சாம்ராஜ்ஜியம் எப்படி அழிவை சந்தித்தது தெரியுமா? உங்களுக்கு தெரியாத வரலாறு...!

சமுதாயத்தை கடுமையாக்கும் நேரம்

சமுதாயத்தை கடுமையாக்கும் நேரம்

ஒரு பெண் அவரிடம், " எங்களின் கண்ணியம் ஆபத்தில் இருந்தால் என்ன செய்வது? அவர்கள் எங்களை விட பலசாலிகளாக இருந்தால் என்ன செய்வது? " என்று கேட்டார். அதற்கு காந்திஜி " இதுதான் உங்கள் ஆயுதத்தை கட்டவிழ்த்து விட வேண்டிய நேரம். அவர்களின் பெற்றோர்களும் சமுதாயமும் அவர்களை ஒழுங்காக வளர்க்கத் தவறும் போது, அவர்களுக்கான தக்க பாடத்தை கற்றுத்தர வேண்டியது உங்கள் கடமையாகும்" என்று கூறினார்.

 பாலியல் வன்முறைக்கு எதிராக அகிம்சையை எப்படி பயன்படுத்துவது?

பாலியல் வன்முறைக்கு எதிராக அகிம்சையை எப்படி பயன்படுத்துவது?

காந்தி கூறுகையில், " அகிம்சை) துணிச்சலானவர்களின் ஆயுதம்", அது பயன்படுத்தப்படும் வரை யாரும் அதை உணரவில்லை. காந்தி மேலும் விளக்கினார் " ஒரு பெண் தனது வலிமையை அகிம்சைக்கு பின்னால் எப்பொழுதும் மறைத்து வைக்கக்கூடாது, அது கோழைத்தனம். நீங்கள் அவர்களுக்கு எதிராக அனைத்து தைரியத்துடனும் நிற்க வேண்டும், அவர்களைத் தடுக்கவோ, எதிர்க்கவோ வேண்டாம், அவர்கள் நம் கண்களில் தைரியத்தைக் காணட்டும். " என்றும் கூறினார்.

MOST READ: இந்த ராசிக்கராங்க மாதிரி பொண்ணுங்ககிட்ட கடலை போட யாராலும் முடியாதாம் தெரியுமா?

 பயம்

பயம்

மகாதமா காந்தியின் கூற்றுப்படி, சமூகத்தின் இந்த தவறான கூறுகள் நமக்கு கற்றுத்தருவது இந்த பயத்தை மட்டும்தான். நமது பயம், உதவியற்ற தன்மை மற்றும் செயலற்ற தன்மை ஆகியவைதான் அவர்களின் வளர்ச்சிக்கான உணவாகும். இந்த உணவை நாம் நிறுத்தினாலே அவர்கள் அழிந்து விடுவார்கள் என்று கூறினார். ஆனால் இது இந்த காலகட்டத்திற்கு பொருந்துமா என்பது சந்தேகத்திற்கு உரியதுதான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Gandhi Wants Woman To Do If someone Tries To Molest Her

Read to know what Gandhi wants every Woman to do if someone tries to molest her.
Story first published: Wednesday, January 8, 2020, 15:21 [IST]