Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் பள்ளி மாணவர்கள் தற்கொலை... தற்கொலை எண்ணத்தை எவ்வாறு தெரிந்துகொள்வது?
தற்கொலை எண்ணம் மக்களுக்கு திடீரென்று வருவதில்லை. ஒரு நபர் தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையையும், உயிருடன் இருப்பதற்கான விருப்பத்தையும் இழக்கும்போது, வாழ்க்கை என்று அழைக்கப்படும் இந்த பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பெற்றோர்களிடையே அச்சத்தைஏற்படுத்தியுள்ளது. ஜூலை 13ம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஸ்ரீமதி, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் போராட்டம் மற்றும் வன்முறை வெடித்தது. திருவள்ளூர், விருத்தாச்சலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழகத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் இதுவரை 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த தற்கொலை சம்பவங்கள் நாடு முழுவதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது? ஏன் நமது குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை? இந்தக் கடுமையான முடிவை எடுக்க அவர்களைத் தூண்டுவது எது? மாணவர்களின் தற்கொலை எண்ணத்திற்கு காரணம் மற்றும் அவற்றிற்கான அறிகுறிகளை இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை
பெரும்பாலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது. நாட்டில் நடக்கும் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த மத்திய அரசின் தகவல்கள் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 42 நிமிடங்களுக்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார். இது தோராயமாக ஒரு நாளைக்கு 34 மாணவர் இறப்புகளைக் கணக்கிடுகிறது.

தற்கொலை தடுப்பு
தற்கொலை விகிதம் வளராமல் தடுக்க ஒரே வழி மாணவர்களின் தற்கொலை நிகழ்வைத் தடுப்பதுதான். தற்கொலையைத் தடுக்க ஒரே வழி அதற்கான அறிகுறிகளைக் கவனிப்பதுதான். ஒரு சமூகத்தில், நம்மைக் கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சக மனிதர்களின் மேலும் கவனம் செலுத்துவதும் முக்கியம். மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

விரக்தி உணர்வு
தற்கொலை எண்ணம் மக்களுக்கு திடீரென்று வருவதில்லை. ஒரு நபர் தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையையும், உயிருடன் இருப்பதற்கான விருப்பத்தையும் இழக்கும்போது, வாழ்க்கை என்று அழைக்கப்படும் இந்த பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் முடிவு செய்கிறார்கள். நீடித்த மனச்சோர்வு தற்கொலைகளுக்கு வழிவகுக்கும் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். விரக்தி உணர்வு, எல்லாவற்றிலும் மனச்சோர்வு அணுகுமுறை மற்றும் நம்பிக்கையான செயல் இல்லாதது ஒரு நபரை தற்கொலைக்கு தூண்டும் சில விஷயங்கள்.

குழந்தை- பெற்றோர் ஆரோக்கியமான தொடர்பு
ஒரு குழந்தையின் இந்த நடத்தை பண்புகளை கவனிக்க வேண்டியது அவசியம். பல சமயங்களில் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கலாம் என்ற உண்மையை மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் தங்கள் பெற்றோரையே நம்பியிருக்கும் அப்பாவி குழந்தைகளால், தங்களைத் தொந்தரவு செய்வது எது என்பதை வேறுபடுத்திப் பார்க்க தெரியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில், பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே தொடர்பு இடைவெளி இருந்தால், குழந்தை விரக்தியிலிருந்து விடுபட தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. ஆதலால், எப்போதும் பிள்ளைகளிடம் பெற்றோர் நட்பு ரீதியான தொடர்பை கொண்டிருக்க வேண்டும்.

எச்சரிக்கை அறிகுறிகள்
பின்வரும் எச்சரிக்கை அறிகுறிகளை பெற்றோர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.
பொழுதுபோக்குகளில் ஆர்வமின்மை
நண்பர்கள் மற்றும் சிறந்த நண்பர்களுடன் நட்புறவு இல்லாதது
தற்கொலை அல்லது மரணம் பற்றி அடிக்கடி பேசுவது
நம்பிக்கையற்ற உணர்வு
அவநம்பிக்கை
உயிருக்கு ஆபத்தான செயல்களைச் செய்ய முயற்சிக்கிறது
மனம் அலைபாயிகிறது
சுய தீங்கு விளைவித்தல்
தனிப்பட்ட உடைமைகளில் விருப்பமின்மை
போதைப்பொருளின் மீதான நாட்டம்

காரணம் என்னவாக இருந்திருக்கும்?
உங்கள் பிள்ளைக்கு மனச்சோர்வைத் தூண்டும் பல காரணங்கள் உள்ளன. குழந்தைகளில் மனக் குழப்பத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான காரணிகளை இங்கு காணலாம்.
பாலியல் தொல்லை: குழந்தைகளால் பாலியல் தொல்லை பற்றி பெற்றோரிடம் பேச முடியாது. அதுவும் பாலியல் தொல்லை தருபவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவராக அல்லது தெரிந்த நபராக இருக்கும்போது இது மோசமாகிறது. கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. படிக்கும் மாணவர்களிடமும் இந்த பிரச்சனை அதிகரித்து வருவதால், சில நேரங்களில் இது தற்கொலைக்கு அவர்களை தூண்டுகிறது.

தோல்வி உணர்வு
கல்வியறிவு, செயல்திறன், தோற்றம், படிப்பு அல்லது வேறு எந்த விஷயத்திலும் மாணவர்கள் தொடர்ந்து மோசமாக உணரவைக்கப்பட்டால் மற்றும் அவர் அல்லது அவள் யாரையும் நம்பவில்லை என்றால், அது குழந்தையின் மன ஆரோக்கியத்தை மோசமாக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை, தேர்வில் தோல்வியடைவதும் அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும்.

மனரீதியாக துன்புறுத்துவது
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குழந்தைகளை கொடுமைப்படுத்துபவர்கள் எப்போதும் மோசமானவர்கள். அவர்கள் ஒரு குழந்தையை தீவிர நிலைக்கு தள்ளலாம். மாணவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை இழக்க நேரிடலாம். மேலும் உயிர்வாழ்வதற்கான எந்த நம்பிக்கையும் இல்லாமல், தற்கொலையை நோக்கி அவர்கள் செல்லலாம்.

அன்பானவரின் இழப்பு
நெருங்கியவர்கள் இழப்பை நம்மால் எதை வைத்தும் ஈடுமுடியாது. காலம் தான் அதை ஏற்றுக்கொள்வதற்கான மனநிலையை நமக்கு கொடுக்கும். இந்த கசப்பான உண்மையை குழந்தைகள் புரிந்துகொள்வதில்லை. பல சமயங்களில் குடும்ப உறுப்பினரின் இழப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல், மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.



Click it and Unblock the Notifications











