Just In
- 2 hrs ago
பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா? அப்ப இந்த சாக்லேட் ஃபேஸ் பேக்கை போடுங்க..
- 3 hrs ago
பெண்களே! உங்க முன்னாள் காதலன் மீண்டும் உங்கள காதலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 4 hrs ago
இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமாம் தெரியுமா?
- 4 hrs ago
வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கணுமா? அப்ப குரு பூர்ணிமா அன்னிக்கு இத தானம் பண்ணுங்க..
Don't Miss
- Movies
காளி பிரச்சனை ஒருபுறம்.. சுசி கணேசன் மறுபுறம்.. லீனா மணிமேகலைக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!
- News
ஆப்பரேசன் தாமரை! திமுகவில் முதல் ‘விக்கெட்’ - தாவலுக்கு தயாராகும் ரிசார்ட் அரசியல் புகழ் ‘எம்எல்ஏ’
- Automobiles
சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா
- Finance
இன்ஸ்டன்ட் ஆப் மூலம் கடன் வாங்குபவரா நீங்க.. ரொம்ப உஷாரா இருங்க?
- Technology
108எம்பி மெயின் கேமரா: மாஸ் காட்டும் Infinix நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்: எப்போது அறிமுகம்?
- Sports
மீண்டும் டெஸ்டில் இந்தியா தோல்வி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா?
- Travel
ஸ்டார்கேஸிங் செய்து இரவை இனிமையாக கழிக்க வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா...ஷாக் ஆகாதீங்க... நீங்க இந்த வழியில வாழ்க்கையை வாழ போறீங்களாம்!
ஆன்மீகம் என்பது தினமும் கோயிலுக்கு செல்வது கடவுளை பூஜை செய்து வணங்குவது மட்டுமல்ல. அது ஒரு ஆழ்கடல் சிந்தனை. இது ஒரு மனிதனை மிகவும் நற்குணம் உடையவனாக மாற்றும். ஆன்மீக நிலையை அடைவது அவ்வளவு எளிதானல்ல. உங்களுடைய தீய எண்ணங்கள் மற்றும் கெட்ட பழக்கங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஒட்டுமொத்தமாக உங்களை நல்ல குணநலன் மற்றும் பண்புகள் உடையவராக மாற்றும். ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட மன அமைதியை அடையும்போது ஆன்மீகம் அவருக்குள் எழுகிறது. அவர்கள் தங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவுடன் ஒன்றாக மாறுகிறார்கள். எதுவுமே அவர்களைப் பயமுறுத்தாதபோது அல்லது ஈர்க்காதபோது, அல்லது அவர்கள் மனித உணர்வுகளால் எளிதில் விலகிச் செல்லாதபோது, ஒரு நபர் ஆன்மீகத்தை அடைகிறார்.
ஆன்மீக மனநிலை மிகவும் நிதானமாக இருக்கும். இது ஒரு நபரை அதிக மகிழ்ச்சியை நோக்கி வழிநடத்தும். நீங்கள் ஆன்மீக நபராக இருந்தால், உங்களிடமும் மற்றவர்களிடமும் அன்பாக இருப்பதற்கு அதிக முன்னுரிமை அளிப்பீர்கள். ஆன்மீக நபர் என்பதைக் குறிக்கும் அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

எதுவும் உங்களை பயமுறுத்தவில்லை
நீங்கள் எதற்கும் பயப்படாமல், சவால்களையும் தடைகளையும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். நிராகரிப்பு, தனிமை, தோல்வி போன்ற உங்களைப் பயமுறுத்தும் விஷயங்களை விட்டுவிட்டு, மகிழ்ச்சியான பகுதியைப் பற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தினால், நீங்கள் ஆன்மீகத்தை அடைவதற்கான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம்.

வதந்திகளைத் தவிர்க்கிறீர்கள்
கிசுகிசுப்பது அல்லது மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது உங்களைத் தொந்தரவு செய்தால், நீங்கள் ஒரு உயர்ந்த மனநிலையை அடைந்துவிட்டீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அங்கு எதிர்மறைக்கு உங்கள் வாழ்க்கையில் இடமில்லை. நீங்கள் எப்பொழுதும் மக்களில் சிறந்தவர்களைக் காண முயற்சிக்கிறீர்கள். மற்றவர்களுடன் தீர்ப்புகள், விமர்சனங்கள் மற்றும் வதந்திகளில் ஈடுபடுவது உங்களை கோபப்படுத்துகிறது.

அறிவைப் பெற விரும்புகிறீர்கள்
அறிவைப் பெறுவதற்கான ஏக்கம் மற்றும் உங்கள் இலக்குகளை அடைய முயற்சிப்பது நீங்கள் ஒரு ஆன்மீக நபர் என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் ஆர்வமாக இருப்பது பண அறிவு பற்றி அல்ல, உலகம் பற்றிய விஷயங்கள், உணர்ச்சிகள், ஆன்மீக செயல்முறைகள் போன்றவை உங்களுக்கு மிகவும் ஆர்வமாக உள்ளன. ஒரு வழக்கமான அடிப்படையில் உங்களை சுயபரிசோதனை செய்துகொள்வது உங்களை ஆன்மீக பக்கத்துடன் தொடர்பு கொள்ள உதவுகிறது.

கருணை என்பது நீங்கள் முன்னுரிமை அளிக்கும் ஒன்று
ஒரு ஆன்மீக நபரின் முக்கிய அடையாளம் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும் மற்றவர்களிடம் அன்பாகவும் இருப்பதே ஆகும். மக்களை இழிவுபடுத்தவோ விமர்சிக்கவோ அவர்கள் விரும்புவதில்லை. மாறாக, உலகை சிறந்த இடமாக மாற்றும் நம்பிக்கையில், அவர்கள் எப்போதும் ஊக்கமளிக்கும் மற்றும் அன்பான வார்த்தைகளையே மற்றவர்களிடம் பேசுவார்கள். நீங்களும் இவ்வாறே நடந்துகொண்டால், ஆம், நீங்கள் ஒரு ஆன்மீக நபராக மாறுகிறீர்கள் என்று அர்த்தம்.

தியானம் உள் அமைதியைப் பெற உதவுகிறது
ஒரு சிலருக்கு மட்டுமே பொறுமை மற்றும் அமைதியான மனநிலையுடன் தியானம் செய்யும் திறன் உள்ளது. சிலர் கவனச்சிதறல் அடைகிறார்கள் மற்றும் அவர்களின் தியான நேரத்தை ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே வைத்திருப்பார்கள். அதேசமயம் ஒருவர் குறைந்தது 5 முதல் 10 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் ஆன்மீகத்தை அடையும்போது, நீங்கள் உள் அமைதியைக் காண்பீர்கள். தியானம் செய்யும்போது - அது உங்களை உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், உயர்ந்ததாகவும் உணர வைக்கும்.

ஒரு ஆன்மீக நபரின் பண்புகள் என்ன?
ஒரு நபர் ஆன்மிக நிலையை அடையும் போது, அவர்களின் ஒட்டுமொத்த குணநலன்கள் மற்றும் பண்புகள் மாறும். அவை, நேர்மறை சிந்தனை, உள் அமைதி, அகங்காரமற்ற குணம், நிபந்தனையற்ற அன்பு, நம்பிக்கை, நல்லிணக்கம், பணிவு, பொறுப்பு, இரக்கம், நீதி, எளிமை மற்றும் பரஸ்பரம் ஆகியவை ஆகும்.