For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரும் புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்க... இப்ப என்ன செய்யணும் தெரியுமா? சீக்கிரம் செய்யுங்க!

கடந்த காலத்தை நீங்கள் நினைவுகூரும்போது, உங்கள் எதிர்காலம் உங்களுக்கு என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி கவலைப்பட்டு, நிகழ்காலத்தை மருந்துவிடாதீர்கள்

|

புதிய ஆண்டு தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ளன. புத்தாண்டு தொடங்கும்போது நம் வாழ்க்கையும் புதிதாக தொடங்க வேண்டும். பழமையான பல விஷயங்களை தவிர்த்து புதிய எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்க்கை அவ்வளவு எளிமையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை எளிதாக்குவதற்கு நீங்கள் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் நேரத்தையும் இடத்தையும் பணத்தையும் எடுக்கும் தேவையற்ற விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து அகற்ற வேண்டும்.

Ideas To Simplify Your Life Before 2023 in tamil

இதைப் பற்றி சொல்ல பல வழிகள் உள்ளன, ஆனால் 2023 தொடங்குவதற்கு முன் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் சில யோசனைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போலி 'நண்பர்களை' அகற்றவும்

போலி 'நண்பர்களை' அகற்றவும்

நம் சமூக ஊடகங்களில் ஒழுக்கமில்லாத நண்பர்கள் பலர் உள்ளனர், மேலும் அவர்களை தனிப்பட்ட முறையில் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நாம் ஒருவருக்கொருவர் படங்களை விரும்பலாம், ஆனால், அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ளாமல் நட்பில் இருப்பது, உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆதலால், இதுவே உங்கள் நேரம், சமூக ஊடகங்களில் இருக்கும் தேவையில்லா நபர்களை நீக்கவும். உங்களுக்குத் தெரிந்தவர்களை அங்கேயே வைத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் யாருடன் தொடர்பில் இருப்பீர்கள் அல்லது கவனிப்பீர்கள் என்று நினைக்கவில்லையோ, அவர்களை அகற்றவும். உண்மையானவர்களுக்கு இடம் கொடுங்கள்.

காகித ஒழுங்கீனத்தை வரிசைப்படுத்தவும்

காகித ஒழுங்கீனத்தை வரிசைப்படுத்தவும்

இதற்கும் ஃபெங் சுய்க்கும் நிறைய தொடர்பு உள்ளது. ஆனால் தர்க்கரீதியாக, உங்களுக்கு ஏன் இவ்வளவு ரசீதுகள் மற்றும் பழைய ஆவணங்கள் தேவை என்பதை யோசிக்க வேண்டும். அது இன்று எந்தப் பயனும் இல்லாதது. குப்பை காகிதங்களை உங்கள் வீட்டில் மற்றும் அலமாரிகளில் இருந்து அகற்றவும். உண்மையில் காகிதம் மட்டுமல்ல, உங்கள் மின்னஞ்சல் கூட சுத்தமாக இருக்க வேண்டும். முடிந்தால், உங்கள் பில்களை மின்னணு முறையில் பெற தேர்வு செய்யவும்.

உங்கள் உணவை எளிதாக்குங்கள்

உங்கள் உணவை எளிதாக்குங்கள்

நீங்கள் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துங்கள். கூடுதலாக சாப்பிடுவதற்கு பதிலாக, அளவாக உங்களுக்கு தேவையான உணவை மட்டும் சாப்பிடுங்கள். அதேபோல, உங்கள் குடும்பத்தினர் எதையாவது வலுக்கட்டாயமாக சாப்பிட்டு அல்லது வீணாக்குவதற்குப் பதிலாக அவர்கள் விரும்புவதைச் சமைக்கவும். மேலும், வீட்டில் அதிக புரோட்டீன் தின்பண்டங்களை வைக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உணவுக்கு இடையில் பசியுடன் இருப்பவர்கள் சிப்ஸ் மற்றும் கோலாவிற்குப் பதிலாக ஆரோக்கியமான ஏதாவது ஒன்றை உட்கொள்வார்கள்.

சுய கவனிப்பில் வேலை செய்யுங்கள்

சுய கவனிப்பில் வேலை செய்யுங்கள்

"சுய பாதுகாப்பு திட்டத்தின்" ஒரு பகுதியாக நீங்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதைப் பற்றி நாங்கள் பேசவில்லை. நடைமுறையில் அது இருக்க வேண்டும், ஆனால் உங்களைப் பற்றியும் சிந்தியுங்கள். உங்களை மகிழ்விக்க நீங்கள் விலையுயர்ந்த தோல் பராமரிப்பு அல்லது விடுமுறை நாட்களில் முதலீடு செய்ய வேண்டியதில்லை. நீங்கள் வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம், எப்சம் உப்புடன் அத்தியாவசிய எண்ணெய் சொட்டுகளை தொட்டியில் ஊற்றி உங்கள் கால்களை அதில் வைக்கலாம். உங்களுக்கு பிடித்த புத்தகத்தையும் படிக்கலாம். வண்ணம், உடற்பயிற்சி அல்லது இசை போன்றவற்றை செய்யலாம்.

எளிய அலமாரி

எளிய அலமாரி

நீங்கள் உடுத்தும் துணியை மட்டுமே வாங்குங்கள். ஏனென்றால் நம்மில் பெரும்பாலோர் நம்மிடம் உள்ளவற்றில் ¼ல் மட்டுமே அணிவார்கள். கடந்த 3-4 ஆண்டுகளாக நீங்கள் அணியாத ஆடைகளையும், இனி உங்களுக்குப் பொருந்தாத ஆடைகளையும் மொத்தமாக களையுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் நீங்கள் அணிவீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்த ஆடைகளை மட்டுமே வாங்கவும்.

மன குழப்பத்தை வரிசைப்படுத்துங்கள்

மன குழப்பத்தை வரிசைப்படுத்துங்கள்

கடந்த காலத்தை நீங்கள் நினைவுகூரும்போது, உங்கள் எதிர்காலம் உங்களுக்கு என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி கவலைப்பட்டு, நிகழ்காலத்தை மருந்துவிடாதீர்கள். ஏனெனில், அதைப் பற்றி சிந்திக்கும்போது, தேவையற்ற மன அழுத்தத்தை நீங்கள் உணரலாம். இதனால், நீங்கள் கவலை மற்றும் கெட்ட எண்ணங்களை உருவாக்கலாம், இது உங்கள் மனதை குழப்புகிறது. ஆதலால், உங்கள் மன அழுத்தத்தை தவிர்த்து, நிகழ்காலத்தை பற்றி சிந்தியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ideas To Simplify Your Life Before 2023 in tamil

Here we are talking about the these antioxidant-rich foods to your diet for glowing skin in tamil.
Story first published: Thursday, December 1, 2022, 19:30 [IST]
Desktop Bottom Promotion