Just In
- 1 hr ago
உலர் திராட்சையை தயிரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
- 5 hrs ago
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Don't Miss
- News
மனித உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை... மக்கள் கண்காணிப்பு அமைப்பு இன்று வெளியீடு..!
- Sports
கீழ்த்தரமாக இறங்கிய ஆஸி.. நடராஜன் மீது பிக்ஸிங் புகார்.. கங்குலி என்ன செய்யப் போகிறார்?
- Finance
இரண்டே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. இதே 10 முக்கிய காரணங்கள்..!
- Automobiles
எச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்!! பிப்ரவரியில் அறிமுகமாகுகிறது
- Movies
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்படி இருந்த பரவை முனியம்மா இப்ப என்ன வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்கனு தெரியுமா? ரொம்ப பாவம்...
ஏய் சிங்கம் போல நடந்து வர்றான் செல்லப்பேரான்டி என்ற பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் தான் நம்ம பரவை முனியம்மா. ஆனால் அதற்கு முன்பாகவே ஊர் முழுக்க சென்று நாட்டுப்புறப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். அதன்பின் ஆங்காங்கே மேடைகளில் ஏறி நாட்டுப்புறப் பாடல்களைச் பரவச் செய்தார்.
அவருக்கு இந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது அறிவிக்கப்படுகிறது. அதுகுறித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் இவர். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

நாடு சும்மா கெடந்தாலும்
அப்படி நாட்டுப்புறப் பாடல்களில் தீவிரமாக இருந்த பரவை முனியம்மாள் நாடு சும்மா கெடந்தாலும் கெடக்கும் என்னும் ஒரு சமூக அக்கறை மற்றும் கலாச்சார மாற்றங்களால் ஏற்படும் விஷயங்கள் பற்றியும் பாடிய பாடல்கள் பரவை முனியம்மா அவர்களை உலகம் முழுவதும் அறிமுகம் செய்து வைத்தது.
MOST READ: எப்பவுமே எல்லாருக்கும் இம்சை தரக்கூடிய மூனு ராசிக்காரங்கனா அது இவங்க தான்...

திரைப்பிரவேசம்
நிறைய நாட்டுப் புறப்பாடல்கள் பாடியிருந்தாலும் நாடு சும்மா கெடந்தாலும் கெடக்கும் பாடலை அடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. அப்படி கிடைத்த முதல் வாய்ப்பு தான் தூள் திரைப்படம்.

தூள் திரைப்படம்
நடிகர் விக்ரம், ரீமாசென், ஜோதிகா ஆகியோர் நடித்த தூள் படம் தான் பரவை முனியம்மா அவர்களுடைய முதல் படம். அந்த முதல் வாய்ப்பை ஒரு போதும் அவர் மிஸ் பண்ணிவிடாமல் பயன்படுத்திக் கொண்டார். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமல்லாது ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அந்த பாடல் எஞ்சிய பட்டி தொட்டியெங்கும் பரவை முனியம்மாவை தங்கள் வீட்டு பாட்டியாக ஏற்றுக் கொள்ள வழிசெய்தது.

நடித்த படங்கள்
தூள் படத்தில் இவர் பட்டையைக் கிளப்பத் தொடங்கிய பின், வரிசையாக இவருக்கு வாய்ப்புகள் வந்தன. கிட்டதட்ட 25 படங்கள் நடித்துவிட்டார். அந்த பாடல்கள் என்னென்ன என்று பார்க்கலாம். தூள், காதல் சடுகுடு, தேவதையைக் கண்டேன், ஏய், ஜெய் சூர்யா, கண்ணாடி பூக்கள், தகதிமிதா, நெஞ்சில் ஜில்ஜில், நாகரீகக் கோமாளி, கை வந்த கலை, சுயேட்சை எம்எல்ஏ, பசுபதி c/o ராசக்காபாளையம், சண்டை, பூ. தோரணை, ராஜாதி ராஜா, தமிழ்ப்படம், மகனே என் மருமகனே, போக்கிரி ராஜா (மலையாளம்), பவானி ஐபிஎஸ், வேங்கை, வெளுத்துக்கட்டு, காசேதான் கடவுளடா, வீரம், மான் கராத்தே என அடுக்கிக் கொண்டே போகலாம். சிவகார்த்திகேயன், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
MOST READ: விருச்சிக ராசிக்காரங்ககிட்ட கட்டாயம் இந்த பத்து கொடூரமான குணமும் இருக்குமாம்... ஜாக்கிரதை

விவேக் காமினேஷன்
நகைச்சுவை நடிகர் விவேக்குடன் இணைந்து இவர் கலக்கிய அனைத்து படங்களும் காமெடிகளில் சூப்பர் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். கள்ளிப்பால் காமெடி முதல் இன்னும் நிறைய காமெடிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

கிராமத்து சமையல்
கலைஞர் தொலைக்காட்சியில் ரமேஷ் பிரபா அவர்களால் நடத்தப்பெற்ற சமையல் நிகழ்ச்சிகளில் கிராமத்து சமையல் என்னும் ஒரு பகுதியை தொகுத்து வழங்கியும் அதில் மருத்துவ குணம் மிக்க பாரம்பரிய சமையலை செய்து காட்டியும் அசத்தி வந்தார்.

வெளிநாடுகள்
தொலைக்காட்சி, திரைப்படங்கள், கிராம மேடைகள் மட்டுமில்லாமல் மலேசியா, சிங்கப்பூர், லண்டன் போன்ற நாடுகளுக்கும் சென்று இவர் பிரமாண்ட மேடைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

குடும்பம்
பரவை முனியம்மாவுக்கு மதுரைக்கு அருகில் உள்ள பரவை என்னும் கிராமம். இவர் பிறந்தது 1943 ஆம் ஆண்டு. பரவை முனியம்மாவின் கணவர் மூன்றாண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். பரவை முனியம்மா அவர்களுக்கு 6 குழந்தைகள் இருக்கின்றனர். ஐந்து குழந்தைகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது.
MOST READ: இதய அடைப்பைகூட சரிசெய்துவிடும் மாங்காய் டீ... இந்த சீசன்ல தினமும் இத குடிக்கலாமே

உடல்நிலை குறைபாடு
பெரிதாக தொழில் ஏதும் இல்லாம காரணத்தால் வீட்டிலேயே இருந்த பரவை முனியம்மாவுக்கு சில வருடங்களுக்கு முன்பாக உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவனிப்பதற்கு ஆளின்றி வறுமையில் வாடி வந்தார். அந்த சமயத்தில் எம்ஜிஆர் நலத்திட்டத்தின் வாயிலாக நலிந்த கலைஞர் என்ற முறையில் ஜெயலலிதா பரவை முகியம்மாவின் பெயரில் வங்கியில் 6 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகக் கொடுத்திருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த போது முதலில் முன்வந்து மிகப்பெரிய உதவியைச் செய்தவர் நடிகர் தனுஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனவளர்ச்சி குன்றிய மகன்
வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக உள்ள பணத்தில் இருந்து மாதம் 6000 ரூபாய் வட்டித் தொகை இவருடைய கைக்கு வந்தது. அதை வைத்துத் தான் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இவருடைய கடைசி மகனுக்கு வயது 36 ஆகிறது. இவருக்கு மனவளர்ச்சி குன்றியிருப்பதால் இவரை தன்னுடனே வைத்து பாதுகாத்து வருகிறார். தான் இறந்த பின் தன்னிடம் கொடுக்கும் வைப்புநிதி வட்டிப் பணமும் இந்த வைப்பு நிதியை தன்னுடைய மன வளர்ச்சி குன்றிய மகனுக்குச் சென்று சேருமாறு உதவிட வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.
MOST READ: நீங்க சாப்பிடற சாப்பாட்டுல 5 தோஷம் இருக்கு தெரியுமா? அது என்னென்ன? எப்படி சரிபண்ணலாம்

கலைமாமணி விருது
தன்னுடைய பாடல் பாடும் திறமையாலும் நடிப்புத் திறனாலும் நிரூபித்து பல உச்சங்களைத் தொட்ட காலத்திலேயே தனக்குரிய அங்கீகாரமும் சொல்லிக் கொள்ளும்படியான பெரிய விருதுகளை கிடைக்கவில்லையே என்ற வருத்தம் பரவை முனியம்மாவுக்கு இருந்து வந்தது. அந்த கவலையெல்லாம் போக்கும் விதமாக தற்போது தமிழக அரசால் நாட்டுப்புறக் கலைஞர் பரவை முனியம்மாவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நம்ம பரவை முனியம்மா.