Latest Updates
-
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது!
யாருப்பா இந்த லிடியன்... ஏ.ஆர்.ரகுமானையே வாவ் என வாய்பிளக்க வைத்த சென்னை பையன்
உலகின் அதிக திறமைசாலி என்னும் விருதை வென்று ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகை பெற்ற சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரத்தைப் பற்றி இங்கே பார்க்கப் போகிறோம்.
The World's Best என்னும் உலகின் அதிக திறமைசாலிக்கான போட்டி உலக அளவில் நடத்தப்பெற்றது. அதில் தன்னுடைய அபாரமான பியானோ வாசிக்கும் கலையால் ஒட்டுமொத்த பிரம்மாண்ட அரங்கத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சென்னையை சேர்ந்த சிறுவன் தான் லிடியன் நாதஸ்வரம்.
இந்த போட்டிக்கான பரிசு 7 கோடி ரூபாய். இவருடைய இசையை அங்கீகாரம் செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாராட்டு விழாவும் நடத்துகிறார். இப்படி ஏ.ஆர்.ரகுமானையே வாவ் என வாய்பிளக்க வைத்த இந்த லிடியன் நாதஸ்வரம் யார், பின்னணி என்ன, என்ன செய்கிறார் என்பது பற்றிய விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லிடியன் நாதஸ்வரம்
உலகமே உச்சி முகர்ந்து பெருமையாகப் பார்க்கும் இந்த சிறுவன் அமெரிக்கா போன்ற வெளிநாட்டு சிறுவன் கிடையாது. நம்ம தமிழ் சிங்கம் இவன். உலக மேடையில் இவன் கம்பீரமாக நின்றது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பெருமையைத் தேடி தந்தது. இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து அனைவரையும் மகிழ்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியிருக்கிறான்.

அதென்ன பேரு லிடியன் நாதஸ்வரம்?
அதென்னப்பா பேரு லிடியன் நாதஸ்வரம் என்று எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது. அதற்கு அர்த்தம் தெரிந்தாலும் ஆச்சர்யப்படுவீர்கள். ஆம். கல்யாணி ராகத்திற்கு ஆங்கிலத்தில் லிடியன் என்ற பெயர் இருக்கிறதாம். நாதஸ்வரம் நம்முடைய பாரம்பரிய இசைக்கருவி என்பதால் இரண்டையும் சேர்த்து லிடியன் நாதஸ்வரம் என இவருடைய தந்தை பெயர் வைத்திருக்கிறார்.

குடும்பம்
நம்முடைய தமிழகத்தில் உள்ள இசையமைப்பாளரான வர்ஷன் சதீஸ் என்பவரின் மகன் தான் லிடியன். லிடியனுக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். அப்பாவும் இசையமைப்பாளர். இசைக் குடும்பத்தில் பிறந்ததால் இயல்பாகவே இவருடைய ரத்தத்தில் அந்த ஆர்வம் கலந்து விட்டது.

எப்படி ஆர்வம் வந்தது?
தன்னுடைய இரண்டாவது வயதிலேயே லிடியன் வீட்டில் உள்ள சைலபோனை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். அதைப் பார்த்த சதீஸ் இவருக்கு ட்ரம்ஸ் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவருக்கு தொடக்கத்தில் டிரம்ஸில் தான் ஆர்வம். ஆனால் தன்னுடைய அக்கா அமிர்தவர்ஷினி பியானோ வாசிப்பதைப் பார்த்து தான் லிடியனுக்கு பியோனோ மீது ஆசை வந்திருக்கிறது.

பயிற்சி
ஆரம்ப காலத்தில் சென்னை இசை சங்கத்தில் சேர்ந்து அங்குள்ள சிறந்த பிரபல பியானோ இசைக்கலைஞரான அகஸ்டின் பாலிடிடம் முறையாகப் பயிற்சி பெற்றிருக்கிறார். அவருடைய பயிற்சியும் இயற்கையாக இருக்கும் திறமையும் சேர்ந்து தன் பதிமூன்று வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறான் இந்த சிறுவன். இவருக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பள்ளியில் ஸ்காலர்ஜிப்போடு படிக்க வாய்ப்பு கிடைத்தது.

The World's Best
The World's Best என்னும் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 7 கோடி) பரிசுத் தொகையை வென்று உலக இசை ரசிகர்கள் அத்தனை பேரையும் தன்னை நோக்கித் திருப்பியிருக்கிறார். இந்த போட்டிக்கான நடுவர்கள் வெறுமனே அமெரிக்காவை சுர்ந்தவர்கள் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்திருந்தனர். ஆனால் அத்தனை பேரையும் கட்டிப் போட்டவன் இவன்.

ரகுமானின் இசை நிறுவனம்
ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் நடத்திக் கொண்டிருக்கும் இசைப்பள்ளியான கே.எம்.காலேஜ் ஆஃப் மியூசிக்ஸ் என்னும் இசை நிறுவனத்தில் தான் ஒரு ஸ்காலர்சிப் பெற்றுக் கொண்டு அங்கு இசை பயின்று வருகிறார் லிடியன். அதனால் இப்படியொரு பரிசை வென்றிருக்கும் லிடியனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக லிடியனுக்காக பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ரகுமான்.

இசையின் உலகத் தூதுவர்
ஏ.ஆர்.ரகுமான் லிடியன் நாதஸ்வரத்துக்காக ஒரு பாராட்டு நிகழ்ச்சியையும் சென்னையில் ஏற்பாடு செய்திருந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் ரகுமானிடம் இந்த சிறுவன் வருங்காலத்தில் பெரிய பெரிய இசையமைப்பாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பாரா என்று கேட்டதற்கு, ரகுமானோ அது சிறிய அளவிலான வேலை தான். அதையெல்லாம் கடந்து இசைக்கான உலகத் தூதுவராக லிடியன் வரவேண்டும். அதற்கான தகுதி அவனுக்கு இருக்கிறது என்று பெருமை பொங்க கூறினார்.



Click it and Unblock the Notifications

