For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சச்சின் தன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் செம ட்ரீட் என்ன தெரியுமா? #HBD_SACHIN

|

இந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட்டின் ரசிகர்களுக்கு கடவுள் என்று சொன்னால் அது சச்சின் தெண்டுல்கர் என்ற ஒற்றை மந்திரச் சொல் மட்டும் தான். கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிலாஸ்டர் என்று உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களாலும் ரசிகர்களாலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் அவர்.

அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுப்பதில் இருப்பதில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் அவருக்கான ரசிகர்கள் அப்படியே அவரைப் பின்பற்றுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சச்சின்

சச்சின்

உலக நாடுகளில் உள்ள பெரிய பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்கள், பௌலர்கள் சச்சினைப் பார்த்து ஆச்சர்யப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று தான் சொல்ல முடியும். அத்தகைய தி காட் ஆஃப் கிரிக்கெட் சச்சினின் 46 ஆவது பிறந்த நாள் இன்று. அவரும் அவருக்காக மற்றவர்களும் யார் யாரெல்லாம் அவருடைய பிறந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்று இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

ஆரம்பகால புகைப்படம்

ஆரம்பகால புகைப்படம்

இந்த படம் சச்சின் கிரைிக்கெட் உலகுக்குள் காலடி எடுத்து வைத்த ஆரம்ப கால கட்டங்களில் எடுத்த படம். இந்த படம் குறிப்பாக ஒரு டெஸ்ட் தொடரின் போது சிறந்த பௌலராகவும் அறியப்பட்ட தருணம். அந்த கண்களில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற துடிப்பும் இப்போது இருக்கிற அதே சாந்தமும் இருப்பதைப் பாருங்கள்.

MOST READ: பொள்ளாச்சி மாதிரி திட்டம்போட்டு மாணவியை ஆபாச படமெடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள்...

பிறந்தது

பிறந்தது

1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் மும்பையில் பிறந்தார். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கிரிக்கெட் மீது இருக்கும் ஆர்வத்தால் விளையாட வந்தார். தன்னுடைய குடும்ப உறவினர் மகளான தன்னை விட வயதில் மூத்த மருத்துவர் அஞ்சலியை சிறுவயது முதலே காதலித்து திருமணம் முடித்துக் கொண்டார். அவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். இதெல்லாம் நம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். அதைத் தாண்டி அவருடைய பிறந்த நாளில் நட்நத சில சுவாரஸ்யங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

விருதுகள்

விருதுகள்

கிரிக்கெட்டில் அவர் வாங்காத அவார்களும் விருதுகளும் ஏதாவது மீதம் இருக்கிறதா என்ன? அவர் குவிக்காத விருதுகளே இல்லை. அதைத் தாண்டி விளையாட்டில் சாதனையாளர்களுக்காக கொடுக்கப்படும் அர்ஜூனா விருதை 1994 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய 20 ஆவது வயதிலேயே தட்டிச் சென்றவர். அதேபோல் 1997 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும் பெற்றார். இவையெல்லாம் விட 1999 மற்றும் 2008 ஆண்டுகளில் பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும் பெற்றார். 2010 இல் உலகில் 100 மோஸ்ட் இன்ஃப்ளூயன்ஸ்டு பர்சனாலிட்டி இன் தி வேர்ல்டு என்னும் பட்டியலில் இடம் பிடித்தார்.

44 நாள் பிறந்த நாள்

44 நாள் பிறந்த நாள்

இந்த புகைப்படம் சச்சினின் 44 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது. எவ்வளவு பெரிய ஆட்டக்காரர்கள். ஒரு கேக்கை முகத்தில் பூசுவதற்கு எப்படி பயப்படுகிறார் பாருங்கள். அதிலும் தன் காதல் மனைவி அஞ்சலியின் கையால் பூசும்போது.

MOST READ: சர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்..

2016 பர்த்டே

2016 பர்த்டே

2016 ஆம் ஆண்டு தன்னுடைய பர்த்டே வை இப்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் மும்பையில் ஐபிஎல் விளையாட்டின் போது தான் படுஜோராக உலக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

2018 ஆம் ஆண்டு

2018 ஆம் ஆண்டு

2016 ஆம் ஆண்டைப் போலவே தான் அதேபோல தான் ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருந்த சமயம் என்பதால் ஐபிஎல் மைதானத்தில் தான் படுஜோராகக் கொண்டாட்ப்பட்டது.

MOST READ: சாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம்? விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

டிஜிட்டல் பர்த்டே கொண்டாட்டம்

டிஜிட்டல் பர்த்டே கொண்டாட்டம்

டிஜிட்டல் உலகில் முன்னணியில் இருக்கும் ஜெட்சிந்ததிஸ் நிறுவனம் வித்தியாசமான முறையில் சச்சினின் இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தது. அதன்காரணமாக உலகிலேயே முதன்முறையாக சச்சினுடன் கலந்துரையாடலும் சச்சின் சகா கேமிங் சாம்பியன்ஸ் என்ற மொபைல் கேமை உருவாக்கி ரசிகர்கள் விளையாட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திக் கொடுத்திருக்கிறது.

பேன்ஸ்களின் கொண்டாட்டம்

பேன்ஸ்களின் கொண்டாட்டம்

சச்சினின் முகமூடி அணிந்து உடலில் படங்கள் வரைந்து கொண்டும், சச்சின் பதாகைகள், பெயர்களை எழுதியும் சச்சினை பிறந்த நாளை குாலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

MOST READ: படுபாவி! கணவர் நைட் ஷிப்ட் வேலைக்கு போனதும் பால்காரன் அந்த பொண்ணை இப்படி பண்ணிட்டானே!

ரசிகர்களுக்காக

ரசிகர்களுக்காக

தன்னுடைய ரசிகர்கள் எப்படி தன்னைக் கொண்டாடுகிறார்களோ அதை ஒருபோதும் தலைக்கணம் இன்றி ஏற்றுக் கொள்பவராகவும் அவர்களின் மீது பேரன்பும் வைத்திருப்பவர் சச்சின். அதனால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நேற்றே ஒரு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்று தெரியுமா?

எப்போதும் என்னுடைய ரசிகர்கள் இல்லாமல் என்னுடைய பிறந்த நாள் முழுமையடையாது. அதனால் என்னுடைய பிறந்த நாளன்று @100MasterBlastr என்னும் மொபைல் ஆப்பின் மூலமாக மதியம் 2.30 மணிக்கு ரசிகர்களுடன் லைவ்வில் பேசப் போகிறேன். அங்கே சந்திக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்க சச்சின் ரசிகரா? உடனே மொபைல எடுங்க. @100MasterBlastr ஆப் டவுன்லுாடு பண்ணுங்க. லைவ்ல சச்சின்கூட பேசுங்க. ஹேப்பி பர்த்டே சொல்லுங்க. என்ஜாய் சச்சின் பேன்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts Of Sachin Tendulkar's Birthday Celebrations 2019

The world loves him, but Sachin Tendulkar's fan base is crazy about their favorite cricketer. On the occasion of his birthday, Sachin Tendulkar's most famous fan, Sudhir Kumar Gautam and Sugumar D met at the Mumbai Press Club and cut the cake. Fondly called as Master Blaster, Tendulkar celebrates his 46th birthday today.
Story first published: Wednesday, April 24, 2019, 14:05 [IST]