குணத்தில் இந்த ராசிகாரர்களை அடிச்சுக்க ஆளே இல்ல தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குணங்கள் இருப்பது இயல்பான ஒன்றாகும். அதே போல ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் இந்த குணம் இருக்கும் என்பது கணிக்கப்படுகிறது. இவர்களது வெளியுல வாழ்க்கை எப்படி இருக்கும். அவர்களது முக்கியமான குணம் என்ன? மற்றவர்களது உறவினை மேம்படுத்திக் கொள்ள இவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மனிதர்கள் அனைவருமே ஒரு விதத்தில் நல்லவர்கள். சில சூழ்நிலைகளால் தான் அவர்கள் தங்களை தவறாக வெளிப்படுத்திக் காட்ட வேண்டியுள்ளது. இந்த பகுதியில் ஒவ்வொரு ராசிக்காரர்களையும் அவர்களது சிறந்த குணம் என்ன என்பது பற்றியும் இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மிகவும் சிறந்த முறையில் தங்களது உறவுகளை பேணி காக்க கூடியவர்கள். நீங்கள் சூழ்நிலைக்கு தகுந்தது போல உங்களை மாற்றிக் கொள்ள கூடியவர்கள். இவர்கள் எப்பொழுதும் முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் இருப்பார்கள். இவர்களுக்கு வெளியிடங்களில் செல்வாக்கு அதிகமாக இருக்கும். இந்த செல்வாக்கு தான் உங்களது வலிமையாகவும், குறையாகவும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மிகுந்த ஈடுபாடுடன் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த விஷயத்திற்காகவும் தாங்கள் ஈடுபட்ட ஒரு காரியத்தை மற்றவற்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களை எளிதாக ஈர்க்க கூடியவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த ஒரு சூழ்நிலைக்கும் தங்களை மாற்றிக் கொள்ள கூடியவர்கள். இதற்கு காரணம் என்னவென்றால் இவர்களுக்கு வித்தியாசமான நட்பு வட்டாரங்கள் இருக்கும். இவர்கள் நண்பர்களிடம் எதையும் எதிர் பார்க்க மாட்டார்கள். சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு கற்பனை திறன் அதிகமாக இருக்கும். அதிசயமான ஐடியாக்களை அள்ளி தருவதில் முன்னோடியாக இருப்பார்கள்.. இவர்கள் போரடிக்க கூடிய நபர்களாக என்றைக்கும் இருக்க மாட்டார்கள். பலருக்கும் பிடிக்கும் ஒரு முக்கியமான நண்பர்களாக இவர்கள் இருப்பார்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் தாராள மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய உதவி செய்யும் திறன் மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கும். இந்த திறன் இவர்களை உண்மையிலேயே சிறந்த நண்பர்களாக்குகிறது.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் உண்மையிலேயே மற்றவர்களது உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள். லாஜிக்கலாக சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். பிரச்சனைகளுக்கு சுமூகமான முறையில் சிறந்த முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் அறிவுரை சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் கூறும் அறிவுரைகள் பெரும்பாலும் ஏற்க தக்கதாக தான் இருக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மிகவும் அமைதியான நண்பர்களாக இருப்பார்கள். இவர்கள் ராஜதந்திர சிந்தனைகளுக்கு சொந்த காரார்களாக இருப்பார்கள். இரகசியங்களை காக்கும் நண்பர்களாக இருப்பார்கள். பிரச்சனைகளை சந்திக்கும் திறன் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கார்கள் தங்களது பேச்சினாலும், குறும்புத்தனத்தாலும் பல நண்பர்களை பெற்றுவிடுவார்கள். நம்பிக்கையை எந்த ஒரு சூழ்நிலையிலும் தவற விடாதவர்களாக இருப்பார்கள். மிகச்சிறந்த போட்டியாளர்களாக இருப்பார்கள். இவர்களை வெல்வது யாருக்கும் சற்று கடினமானதாக தான் இருக்கும். இவர்கள் முயற்சி செய்தால் முடியாதது என்பது எதுவும் இல்லை.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கு மதிப்பளிக்க கூடிய மிகச் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். நிறைய திறமைகளை தன்னுள்ளே கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரை எளிதாக கவரும் குணம் இவர்களிடம் அதிகமாக உள்ளது. இவர்களுடைய மிகப்பெரிய உயர்ந்த குணம் என்ன என்றால் எப்போதும் இருக்கும் நம்பிக்கை தான்.

மகரம்

மகரம்

மகர ராசிக்கார்கள் மிகச்சிறந்த பொருமைசாலிகளாக இருப்பார்கள். இவர்களது பொருமையை யாராலும் சீண்டி பார்க்க முடியாது. இவர்கள் எல்லா விஷயத்திலும் மற்றவர்களை விட ஒரு படி உயரமாக இருப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் பொருமை மற்றும் நிதானத்தை கடைப்பிடிப்பார்கள். இவர்களது பொருமையானது இவர்களை சிறந்த ஆசிரியர்களாக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மிக சிறந்தவர்கள். இவர்களது குணம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். இவர்களது நட்பை பெற்றவர்கள் மிகுந்த அதிஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் எந்த நிலையிலும் தன் நண்பனை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தன் நட்பிற்காக எப்போதும் நிலை நிற்பார்கள். நகைச்சுவை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மீனம்

மீனம்

இவர்கள் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய சிந்தனை திறனானது நம்பமுடியாதது ஆகும். இவர்களது நட்பு வட்டம் சற்று பெரியது ஆகும். புகழ் பெற்ற நபர்களும் இவர்களது நட்பு வட்டத்தில் அடங்குவார்கள். இவர்கள் காரியசாலிகளாக இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: ஜோதிடம் astrology
English summary

Which zodizc Sign Have Great Charcter

Which zodizc Sign Have Great Charcter
Story first published: Saturday, January 13, 2018, 12:01 [IST]