ஐ.பி.எல் பேக் ஸ்டேஜில் சியர் லீடர்ஸ் அனுபவிக்கும் கொடுமைகள். திடுக்கிடும் உண்மைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

கடந்த 2008ல் இருந்து கிரிக்கெட் போட்டியுடன் நமக்கு அறிமுகம் ஆனது இரண்டு விஷயங்கள். ஒன்று ஐபிஎல். மற்றொன்று அதற்கு முன்பு வரை நாம் எப்போதும் கண்டிராத ஐபிஎல் போட்டிகளில் நான்கு, ஆறு ரன்கள் விளாசும் போதும், விக்கெட்டுகள் சாய்க்கும் போதும் அசத்தலாக ஆட்டம் போட்டு மகிழ்விக்கும் சியர் லீடர்ஸ்.

கிரிக்கெட் போட்டிகளை காண ஒரு பெரும் ரசிகர் கூட்டும் இருக்கும் அதே சமயத்தில், மைதானத்திலும், டிவியிலும் சியர் லீடர்ஸ் ஆட்டத்தைப் பார்பதற்கும் ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. சியர் லீடர்ஸ் பெரும்பாலும் வெளிநாட்டவர்களாகவும், சிறிதளவு நம் நாட்டு ஆண், பெண்களாகவும் இருக்கிறார்கள்.

கவர்ச்சி ஆடை அணிந்து மேடை மேல் அவர்கள் ரசித்து ஆட்டம் போடுவதை மட்டுமே திரையில் காணும் நமக்கு, ஐபிஎல் போட்டிகளின் பேக் ஸ்டேஜில் அவர்கள் துணியை தங்கள் உடல் மேல் போர்த்திக் கொண்டு, கூச்சப்பட்டு அமார்ந்திருப்பதும், அச்சத்துடன் கண்ணீர் சிந்துவதும் தெரிவதில்லை.

சில சியர் லீடர்கள் பகிர்ந்துக் கொண்ட அவர்களது ஐபிஎல் அனுபவங்கள் இங்கே..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமெரிக்கர்கள்!

அமெரிக்கர்கள்!

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில், அதிகம் பங்கேபெற்ற சியர் லீடர்ஸ் அமெரிக்கா, ஐரோப்பியாவை சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கே ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் மற்றும் வீரர்களை ஊக்கவித்து உற்சாக நடனம் ஆடுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியா!

இந்தியா!

இந்தியாவை மிகவும் விரும்புவதாகவும், இங்கே தெருக்களில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது, சாலைகளில் ஆடு, மாடு சர்வ சாதாரணமாக திரிவது, தேநீர் கடைகள், தெருக்களில் பழம், காய்கறி விற்கும் மக்கள் என நிறைய விஷயங்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன என்றும் சில சியர் லீடர்ஸ் கூறியுள்ளனர்.

குறைந்த பணம்!

குறைந்த பணம்!

பலரும் தங்கள் நடன திறமையை வெளிப்படுத்தி சியர் லீடர்ஸ் ஆடுவதற்கு நிறைய பணம் வாங்குவார்கள், அவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். நடனம் மூலமாக நாங்கள் பல புதிய கலாச்சாரத்தை கற்கிறோம், புதிய அனுபவம் பெறுகிறோம். உண்மையில், நாங்கள் இங்கே பெறும் ஊதியமானது குறைவு தான்.

ஆடை!

ஆடை!

எங்களுக்கான பெரிய சவாலே ஆடை தான். சியர் லீடர்ஸ் ஆடும் போது உடையானது சௌகரியமாக இருக்க வேண்டும். பலமுறை எங்களுக்கு அசௌகையரியமான உடைகள் தான் அளிக்கப்படுகின்றன. ஆனால், அந்தந்த அணி அவர்களது ஆடை வடிவமைப்பாளர்கள் எதை கொடுக்கிறார்களோ, அதை தான் அணிந்து ஆட கூறுவார்கள். வாங்கும் ஊதியத்திற்கு நாங்கள் அதை தான் செய்தாக வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்படுகிறது.

உள்நாட்டவர்!

உள்நாட்டவர்!

நடப்பு ஐபிஎல் போட்டிகளிலும் இதை நீங்கள் கூர்ந்து கவனிக்கலாம். பத்தில் ஒருவர் தான் உள்நாட்டு சியர் லீடராக இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் வெளிநாட்டவர்கள் தான். பத்தில் இருவர் இந்தியர்களாக இருக்க வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் வெள்ளையாக இருக்கும் பெண்களை தான் சியர் லீடராக போடுகிறார்கள். இதுவொரு வகையான இன வெறியை தான் குறிக்கிறது. மேலும், இந்திய பெண்கள் என்றால் இப்படியான ஆடைகள் அணிய மாட்டார்கள், இப்படி ஆட மாட்டார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

அறியாமை ஆண்கள்!

அறியாமை ஆண்கள்!

எங்களுக்கான பெரிய சவாலே அறியாமையால் கண்டதை செய்யும் ஆண்கள் தான். சில முறை அவர்களை எதிர்கொள்வது கொஞ்சம் அச்சுறுத்தலாகவும் இருக்கும். மேலும், அவர்கள் எங்களை நோக்கி கூறும் வார்த்தைகள், பார்க்கும் பார்வை போன்றவை பலமுறை வக்கிரமாக இருக்கும். கீழ்த்தரமான வார்த்தைகளால் அழைப்பார்கள், பேசுவார்கள் அது மிகுந்த வருத்தத்தை அளிக்கும்.

கடந்து போகும் பந்துகள்...

கடந்து போகும் பந்துகள்...

சில முறை வீரர்கள் அடிக்கும் சிக்ஸர்கள் எங்களை கடந்து சென்று விழும், ஆனால் முடிந்த வரை அந்த பந்துகளை எடுத்துப் போட நாங்கள் பேக் ஸ்டேஜ் தாண்டி போக முனைவதில்லை. அங்கே ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் சிலரின் செய்கைகளை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களை எதிர்த்து பேசவும் முடியாத சூழல்.

புகைப்படங்கள்!

புகைப்படங்கள்!

நாங்கள் ஆடும் பொழுது எடுக்கப்படும் படங்களை காட்டிலும், பேக் ஸ்டேஜில் இருக்கும் போது எடுக்கப்படும் படங்களே அதிகம். தவறான கோணத்தில், தவறான எண்ணத்தில் எங்களை படம் எடுத்து ரசிப்பார்கள். சிலர் எங்களை அழைத்து நாங்கள் அவர்கள் படம் எடுப்பதை அறியும் படி அடுப்பார்கள். அதெல்லாம் வக்கிரம் நிறைந்தவை.

போர்வை!

போர்வை!

பல சமயம் சிறிய போர்வை ஒன்றை போர்த்தி தான் அமர்ந்திருப்போம். ஃபோர், சிக்ஸர்கள், விக்கெட்டின் போது போர்வையை விலக்கிவிட்டு நடனம் ஆடிய பிறகு மீண்டும் போர்வை போர்த்திக் கொள்வோம். இது மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும் நிகழ்வாகும். எல்லா போட்டிகளின் போதும் இத்தகைய நிகழ்வுகள் நடக்கும். அதை கடந்து தான் நாங்கள் ஆடி வருகிறோம்.

மிக சிலரே..

மிக சிலரே..

எங்கள் நடன திறமையை மனதார பாராட்டி பேசும் நபர்கள், ரசிகர்கள் மிகவும் குறைவு. அவர்கள் எங்களை காணும் பார்வையிலும், அவர்களது சிரிப்பிலுமே அதை நன்கு அறிந்துவிட முடியும். ஆனால், 90% மோசமான பார்வை அலை வீசுவதால் நாங்கள் யாரையும் கண்ணெடுத்து பார்ப்பதில்லை. மிக மிக அரிதாக எங்களை நோக்கி சிரிக்கும் நபர்களை கண்டு நாங்கள் பதிலுக்கு சிரிப்போம்.

ஸ்வச் பாரத்!

ஸ்வச் பாரத்!

இந்தியாவில் ஸ்வச் பாரத் பெயரளவில் தான் இயங்கி வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் இதை நன்கு அறியலாம். மைதானம், மைதானத்தில் எங்களுக்கென ஒதுக்கப்படும் கழிவறைகள், உடை மாற்றும் அறைகள் என எதுவும் தகுந்த சுகாதாரத்துடன் இருப்பதில்லை. எங்களுக்கான ஹோட்டல் அறைகளும் கூட சுத்தமாக இருக்காது. எங்களுடன் விருந்தாளியாக கரப்பான்பூச்சிகளும் தங்கி இருக்கும்.

மேனேஜர்கள்!

மேனேஜர்கள்!

நாங்கள் மேனேஜர்கள் மூலமாக தான் எங்கு செல்ல வேண்டுமானாலும் செல்ல வேண்டும். அவர்கள் தான் எங்களுக்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுப்பார்கள். ஆனால், அவர்கள் எதற்காக இப்படியான தரமற்ற இடங்களை தேர்வு செய்கிறார்கள். இவை எல்லாம் அணி உரிமையாளர்களுக்கு தெரியுமா? என்று என்று எங்களுக்கு தெரியாது.

செக்ஸ் பொருளல்ல...

செக்ஸ் பொருளல்ல...

நான் அமெரிக்காவில் சியர் லீடராக இருக்கும் போது ஒரு பாஸ் போல உணர்வேன். என்னை எனக்கான மதிப்பளித்து காண்பார்கள். ஆனால், இங்கே ஒரு செக்ஸ் பொருள் போல காண்கிறார்கள். நான் ஒரு பெண்ணுரிமை ஆர்வலரும் கூட. இப்படியான நிகழ்வுகள், அனுபவங்கள் எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. நாங்கள் அணியும் உடை வைத்து தான் எங்களை எடை போடுகிறார்கள். எங்களை ஒரு செக்ஸ் கருவியாக கருதுகிறார்கள். இது ஏன்? என்று எனக்கு புரியவில்லை.

வேலை!

வேலை!

சியர் லீடர் என்பது டைம்பாஸ் அல்லது பார்ட் டைம் வேலை அல்ல. இது ஒரு நடனம் சார்ந்த துறை, தொழில். இங்கே முறையாக நடனம் கற்றவர்கள், பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வருகிறார்கள். நடனம் மூலம் பல வேலைகள் செய்ய முடியும். உங்களுக்கு நடனம் தெரிந்தால், நீங்கள் தகுந்த பயிற்சி பெற்றால், நீங்களும் ஒரு சியர் லீடராக ஆகலாம். இந்த வேலையை தரக்குறைவாக காணாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Whats Happening on Backstage? IPL Cheer Leaders Reveals Shocking Truth!

We all Love to See the Dance moves of Cheer Leaders on Every Six and Wicket. But Do You Know Whats Happening on Backstage? IPL Cheer Leaders Reveals Shocking Truth!