For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கௌசல்யாவை கொச்சைப்படுத்தும் மிருகங்களுக்கு இந்த பதிவு!

|
Whats Wrong in Udumalai Kowsalyas Re-Marriage with Parai Musician Sakthi?

தமிழகம் எண்ணற்ற ஆணவக் கொலை வழக்குகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால், உடுமலை ஷங்கர் - கௌசல்யாவின் காதல் திருமணம் மற்றும் ஷங்கரின் ஆணவக் கொலை வழக்கு கொஞ்சம் வித்தியாசமானது. வேறு சாதி ஆணை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஒரே காரணத்தால், தன் குடும்பத்தாரால் காதல் கணவனை ஆணவக் கொலைக்கு பலிக் கொடுத்து தனி ஆளாக நின்றவர் கௌசல்யா.

ஆனால், தன் கணவனோடு அந்த கௌசல்யாவும் இறந்து, ஒரு புது கௌசல்யா பிறக்கிறார். அவர் சமூக நீதிக்காக போராடுகிறார், தன்னை தற்காத்துக் கொள்ள கராத்தே கற்றுக் கொள்கிறார், பறை இசை கற்கிறார், அம்பேத்கர், பெரியாரை ஆழமாக படிக்கிறார். சாதிக் கொடுமை, சாதி எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் மாநாடுகளில் பங்கெடுத்துக் கொண்டு தனது பதிவை வலுவாக பதிவு செய்கிறார்.

தலித் குழந்தைகளின் வளர்ச்சிக்காக போராடுகிறார். அனைத்திற்கும் மேலாக, தன் காதல் கணவனை இழந்த இரண்டே ஆண்டுகளுக்குள் கணவனின் கொலைக்கு காரணமான தன் குடும்பத்தாருக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தருகிறார். ஷங்கரின் காதலியான கௌசல்யா, தமிழ் சமூகத்தில் போராளி கௌசல்யாவாக மாறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதியதா?

புதியதா?

நாம் முன்பு கூறியது போலவே தமிழகத்தில் ஆணவக் கொலை ஒன்றும் புதியது அல்ல. இன்னுமா சாதி எல்லாம் பார்க்குறாங்க என்று மனதிற்குள் ஒரு எண்ணம் துளிர்விடும் போதெல்லாம், நாங்க சாதி பார்க்குறோம், எங்களுக்குள்ள சாதிங்கிற மிருகம் இன்னும் வெறிப்பிடிச்சு அலஞ்சிட்டு இருக்கு என்று பதிவு செய்வதை போல சாதியக் கொடுமைகள் மற்றும் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கான சாட்சியை நாம் கடந்த மாதம் வரையிலும் கண்டிருக்கிறோம்.

புதியவள்!

புதியவள்!

சாதியக் கொடுமைகள், ஆணவக் கொலைகள் தமிழகத்திற்கு புதிதில்லை. ஆனால், கௌசல்யா புதியவள். ஆணவக் கொலைக்கு பிறகு தற்கொலை முயற்சி செய்த கௌசல்யா, அதில் இருந்து உயிர் பிழைத்து புதியதாய் பிறந்தவள். இதுவரை எவ்வளவோ ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. அதில் பாதிக்கப்பட்டு எண்ணற்ற பெண்கள் இறந்துள்ளனர், தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். காதல் கணவனை இழந்து மீளாத்துயர் கொண்டுள்ளனர். ஆனால், கௌசல்யா புதியவள். அவள் கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேங்கையாக சீறிப் பாய்ந்தவள்.

தூக்குத்தண்டனை!

தூக்குத்தண்டனை!

உடுமலை ஷங்கர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நீதிமன்றம் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக கைதான ஆறு பேருக்கு தூக்கு தண்டனை அளிக்கிறது. நீதிமன்ற வாசலில் நிருபர்கள் கௌசல்யாவிடம், உங்கள் தந்தையை குற்றவாளி என்று நீதி அரசர் கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, "குற்றவாளியை, குற்றவாளி என்று தானே கூற வேண்டும்" என்று பளிச்சென பதில் கூறி நகர்கிறார். கௌசல்யா பழைய கௌசல்யா இல்லை என்பதற்கு பெரும் சான்றாக பதிவாகிறது இந்த பதில்.

MOST READ: விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் கடந்து வரும் வெறுக்கத்தக்க அனுபவங்கள்!

இளகிய மனம்!

இளகிய மனம்!

ஒருமுறை உடுமலை ஷங்கரின் ஆணவக் கொலை குறித்து டாக்குமெண்ட்ரி பதிவிற்காக கௌசல்யாவிடம் பேட்டி கண்டனர். அப்போது ஷங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை நீங்கள் கண்டீர்களா என்று கேள்வி கேட்டனர், அதற்கு கௌசல்யா," இல்லை, நான் அந்த காட்சிகளை பார்க்கவில்லை. அதை பார்க்கும் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை", என்று கூறினார். இது கௌசல்யா ஷங்கரை எவ்வளவு காதலித்தார், அவர் மனது எவ்வளவு இளகியது என்பதற்கு சான்று.

ஷங்கர் இருந்திருந்தால்...

ஷங்கர் இருந்திருந்தால்...

ஒருவேளை ஷங்கர் உயிரோடு இருந்திருந்தால், நான் இன்று இந்த சாதியக் கொடுமைகள், சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடி இருந்திருப்பேன். ஆனால், சமூக செயல்பாட்டாளராக மாறி இருக்க மாட்டேன் என்று ஒருமுறை கௌசல்யா கூறி இருந்தார். இன்று, கௌசல்யா ஒரு சாதாரணப் பெண்மணி அல்ல என்பதற்கு இது ஒரு மிக முக்கியமான பதிவாக காணப்படுகிறது.

என்ன தவறு?

என்ன தவறு?

கௌசல்யா கடந்து வந்த இந்த பாதையில் வேறொரு பெண் வந்திருந்தால், இன்று எந்த நிலையில் இருந்திருப்பார், என்னவாகி இருப்பார் என்பது பெரும் கேள்விக்குறி. ஷங்கரின் கொலைக்கான அனைவர்க்கும் தண்டனை வாங்கிக் கொடுத்தது மட்டும் இன்றி, இனி இப்படி ஒரு ஆணவக் கொலை நடக்கக் கூடாது, சாத்திய கொடுமைகள் அழிய வேண்டும் என்று போராடி வருகிறார் கௌசல்யா, அப்படிப்பட்டவர் மீண்டும் மறுமணம் செய்வதில் என்ன தவறு.

எதற்கு இந்த காழ்ப்புணர்ச்சி?

எதற்கு இந்த காழ்ப்புணர்ச்சி?

மேலும், மேலும் ஆதிக்க சாதிகளின் தடைகளை உடைத்தெறிந்து கொண்டே போகிறார் கௌசல்யா என்பது தான் நேற்று ( காதல் மறுமணம் ஆனதில் இருந்து) முதல் கௌசல்யா மீது தொடர்ந்து நடத்தப்படும் காழ்ப்புணர்ச்சிக்கும், கீழ்த்தரமான பதிவுகளுக்கும் காரணமோ என்று என்ன தோன்றுகிறது. அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார் கௌசல்யா?

MOST READ: புராணங்களில் வாழ்ந்த உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத ஆபத்தான வில்லன்கள் இவர்கள்தான்

பறை இசை கலைஞர்!

பறை இசை கலைஞர்!

சக்தி தமிழர் இசையான பறையை மீண்டும் அனைவரும் கற்றறிய வேண்டும் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இங்கே இன்னும் பலருக்கு பறை மீண்டும் ஒலிப்பது பெரும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. பறை தமிழர் இசை. உணர்ச்சிகளை எழுப்ப கூடிய பெரும் இசை. ஆவேசம், மகிழ்ச்சி,உற்சாகத்தை அளிக்க கூடிய தனி இசை. ஒருவேளை, பறையையும் தங்கள் எதிர்பாக காணும் அந்த கூட்டம் கௌசல்யா - சக்தி மறுமணத்தை ஏற்க மறுக்கிறதோ. எதுவாக இருந்தாலும் இந்த கூட்டம் எதிர்க்க தான் போகிறார்கள். அதற்கு இதையும் ஒரு காரணமாக்கி கொள்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

கொச்சையான மீம்கள்!

கொச்சையான மீம்கள்!

கீழ்த்தரமான புத்தி கொண்ட சிலர் கௌசல்யா - சக்தி காதல் மறுமணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மீம்கள் பரப்புவது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது. உங்கள் வீட்டில் ஒரு பெண் திருமணமான மிக விரைவில் கணவனை இழந்து நின்று, ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகு மறுமணம் செய்தால், இப்படி தான் கொச்சையான வார்த்தைகள் பயன்படுத்தி மீம் போடுவீர்களா?

மாற்றம் பிறக்கட்டும்!

மாற்றம் பிறக்கட்டும்!

கௌசல்யா - சக்தி காதல் மறுமணத்தை எதிர்ப்பவர்களில் 99% பேர் சாதியை தூக்கிப்பிடிக்கும் வெறியர்கள். மீத 1% பேர், இன்னும் அறியாமையில் வாழ்ந்து வருவோர். இன்டர்நெட்டில் வருவதை எல்லாம் வேடிக்கையாக ஷேர் செய்து மகிழ்வோர். அந்த பதிவின் தாக்கம் என்ன என்பதை முழுமையாக அறியாதோர்.

இனிமேலாவது ஒரு மாற்றம் பிறக்கட்டும். அந்த மாற்றத்திற்கு உடுமலை கௌசல்யா - பறை இசை கலைஞர் சக்தியின் திருமணம் ஒரு வித்தாக அமையட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What's Wrong in Udumalai Kowsalya's Re-Marriage with Parai Musician Sakthi?

There is Nothing Wrong in Udumalai Kowsalya's Re-Marriage with Parai Musician Sakthi. But, Why set of people Humiliating Kowsalya for her bold move.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more