For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தளபதி விஜய்... உருவாகி வரும் தலைவனா? உருவாக்கப்படும் தலைவரா?

  |

  இன்று தமிழ் சினிமாவின் தளபதி, ரசிகர்களின் இதய தளபதி நடிகர் விஜயின் 45வது பிறந்தநாள். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்கள் மற்றும் பலர் பாதிப்பட்டதன் காரணத்தால் இவ்வருடம் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்று கூறப்படுகிறது.

  தந்தை ஒரு இயக்குனர் அதனால் தான் விஜய் எல்லாம் நடிகர் ஆக முடிந்தது. இல்லையேல் காணாமல் போயிருப்பார் என்று பலர் இன்று வரையிலும் கூறி வருகிறார்கள். விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு மட்டுமே தந்தையின் உதவி கிடைத்தது. ஆனால், ஒரு நடிகராகவும், சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெறுவதற்கும் அவரது கடின உழைப்பே காரணம்.

  Vijay Birthday Special: Unforgettable Moments of Vijay in Social Life!

  தொடர்ந்து பல தோல்விகளுக்கு பிறகே வெற்றியை ருசித்த விஜய்க்கு, தோல்வியை கண்டு அச்சமில்லை. ஆனால், இன்று நடிகர் விஜய் செய்யும் ஒவ்வொரு பொதுவாழ்க்கை விஷயங்களும், படத்தில் பேசும் அரசியம் வசனங்களும் பலருக்கு அச்சம் ஊட்டுகிறது. 1996ல் நடிகர் ரஜினிகாந்த்க்கு இருந்த மக்கள் பேராதரவு, இன்று நடிகர் விஜய்க்கு இருக்கிறது.

  திரையில் மட்டுமின்றி, நிஜ வாழ்விலும் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் விஜய். ஆனால், திரையில் மட்டுமே இவர் மாஸ் ஹீரோ. தரையில் எளிமையான ஹீரோவாக இருக்கிறார். பெரும் நட்சத்திரங்களுக்கு தனது எளிமையான பாணியால் பாடம் கற்பிக்கிறார்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஜல்லிக்கட்டு போராட்டம்!

  ஜல்லிக்கட்டு போராட்டம்!

  பீட்டாவின் இடையூறு காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைப்பட்டு போனது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சார, பாரம்பரிய வீர விளையாட்டு. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தினார்கள்.

  அது முழுக்க, முழுக்க அரசியல் தலையீடு இல்லாத ஒரு பெரும் புரட்சி போராட்டமாக அமைந்திருந்தது. நடிகர்கள், அரசியல் தலைவர்கள் யாரும் எங்கள் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறிய மாணவர்கள். சில சமூக ஆர்வலர்களை மட்டுமே இணைத்துக் கொண்டனர்.

  அடையாளம் மறைத்து!

  அடையாளம் மறைத்து!

  மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளித்த விஜய். அதில் ஒரு தமிழனாக, தமிழ்நாட்டின் சாதாரண பிரஜையாக மட்டும் பங்கெடுத்துக் கொள்ள எண்ணினார். ஆகையால், யாருக்கும் தெரியாமல் தனது முகத்தை மூடிக் கொண்டு கண்ணாடி அணிந்துக் கொண்டு தனது நண்பர்கள் சிலருடன் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து வந்த மெரீனா கடற்கரைக்கு சென்று இரவில் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.

  தன்னால் போராட்டம் திசை மாறிவிட கூடாது. அந்த போராட்டத்தின் வெற்றியானது முழுமையாக மாணவர்களையே சென்றடைய வேண்டும் என்று விஜய் செய்த அந்த காரியம் பெருவாரியாக மக்களால் பாராட்டப்பட்டது.

  அனிதா மரணம்!

  அனிதா மரணம்!

  நீட்! தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துவிடுமோ என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்திய மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொது மருத்துவ நுழைவு தேர்வு. நீட்டில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால்... நாடு முழுக்க ஒரே பாடத்திட்டம் இல்லாத சூழலில், பொது தேர்வு மட்டும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது தான்.

  அதாவது, யானை, புலி, குரங்கு, குதிரை போல வெவ்வேறு பாடத்திட்டங்கள், பயிற்சிகள் வைத்துக் கொண்டு. இருபது அடி சுவரை எல்லாரும் தாண்டி குதித்தால் தான் தகுதி பெற இயலும் என்பது போல இருக்கிறது இந்த நீட் பொது நுழைவு தேர்வு.

  எளிமையாக!

  எளிமையாக!

  மருத்துவராகும் கனவை தனது சிறு வயதில் இருந்து மூச்சில் அடைக்காத்து வைத்திருந்த ஒரு மாணவியின் உயிரை பலிவாங்கியது. நீட்டுக்காக தமிழகம் இழந்த முதல் உயிர் டாக்டர் அனிதா. அனிதா இறந்ததை அரசியல் ஆகியவர்கள் பலர். அனிதாவின் பெயரை மேடை பேச்சுகளில் பயன்படுத்திக் கொண்டவர்கள் பலர்.

  ஆனால், நேரடியாக அனிதாவின் வீட்டுக்கு சென்று, அவரது உறவினர்களுடன் அவர்தம் சோகத்தை பகிர்ந்து கொண்டு ஆறுதல் கூறி வந்த ஒரே நபர் விஜய். அந்த ஒரு கூட்டமும் கூட்டாமல், தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளாமல்... மிக எளிமையக யாரும் அறியாதவண்ணம் அனிதாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி திரும்பினார் விஜய். இது பொதுமக்கள் மத்தியில் விஜய்க்கு நற்பெயர் பெற்றுக் கொடுத்தது.

  தூத்துக்குடி போராட்டம்!

  தூத்துக்குடி போராட்டம்!

  99 நாள் காந்திய வழியில் அமைதியாக சென்ற போராட்டம்.. நூறாவது நாள் கலவரமாக மாறியது. யாரால், எவரால் எந்த நேரத்தில் அது கலவரமாக மாறியது. தொடர்ந்து அந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் என்று குறிப்பிடப்படும் சிலர் குறிவைத்து சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

  அரசு அறிக்கை படி 13 பேர். வாட்ஸ்-அப் போன்ற சமூக தளங்களில் வெளியான பரபரப்பு ஆடியோ பதிவுகள் மற்றும் தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது பலி எண்ணிக்கை இதைவிட அதிகம் என்றே கூறப்படுகிறது.

  இரவோடு இரவாக..

  இரவோடு இரவாக..

  கமல், ரஜினி போன்ற நடிகர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அடிப்பட்டவர்களை பார்த்து வந்தனர். ஆறுதல் கூறினார்கள். கலவரத்தில் நடந்த அசம்பாவிதத்தின் போது படப்பிடிப்பில் இருந்த விஜய். வேலை முடிந்த கையுடன்... தூத்துக்குடி விரைந்தார்.

  ஆனால், அவருடன் கேமராக்கள் இல்லை, ஊடகங்கள் இல்லை. இரவில் பைக்கில் சென்று யாருக்கும் தெரியாமல் இறந்தவர்களின் உறவினர்களை, குடும்பத்தாரை கண்டு ஆறுதல் கூறி திரும்பினார்.

  மற்றவர்கள் வந்து எங்களை பார்த்து சென்றனர், ஆனால், எங்கள் துக்கத்தை, சோகத்தை பகிர்ந்து சென்றவர் விஜய் தான் என்று சிலர் வெளிப்படையாக கூறி விஜய்க்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

  அச்சம் தவிர், நெஞ்சம் நிமிர்!

  அச்சம் தவிர், நெஞ்சம் நிமிர்!

  யார் இந்த விஜய்... ஒரு சாதாரண நடிகர்... திருமலை என்ற படத்தில் இருந்து மாஸ் ஹீரோ என்ற அரிதாரம் பூசிக் கொண்டார். இவர் எப்படி மக்களின் ஹீரோ ஆனார்?

  விஜய் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாறியது தான் இன்று இவரது நிலைக்கு காரணமா? இல்லை. தலைவன் உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறான். விஜய் இன்று ஒரு தலைவனாய் முழுமையாக உருவாகவில்லை. ஆனால், உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன.

  தேவையில்லாத சர்ச்சைகள், தடைகள், தனிநபர் தாக்குதல்கள் தான் ஒருவனை தலைவனாக்குகிறது. அப்படி விஜய் கடந்து வந்த சர்ச்சைகளும் சிலவன இருக்கின்றன.

  சர்ச்சை #1: இஸ்லாமி தீவிரவாதம்?

  சர்ச்சை #1: இஸ்லாமி தீவிரவாதம்?

  துப்பாக்கி படமானது தீவிரவாத இயக்கங்களின் ஒரு பிரிவாக காணப்படும், பலரும் அறியாத ஸ்லீப்பர் செல் எனப்படும் பிரிவை குறித்த படமாக அமைந்திருந்தது. ஆனால், இந்த படத்தில் இஸ்லாம் மதத்தை புண்படுத்துவதாகவும். உணர்சிகளை, நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாகவும் வேண்டுமென்ற விஜய்க்கு எதிராகவும், துப்பாக்கி படத்திற்கு எதிராகவும் எதிர்ப்பு குரல்கள் மற்றும் தடை கோரி கோஷாங்கள் எழுந்தன.

  சர்ச்சை #2: அரசியல் அச்சம்

  சர்ச்சை #2: அரசியல் அச்சம்

  டைம் டூ லீட்.... அண்ணாவின் மகன்... படத்தில் இடம்பெற்ற இந்த இரண்டே விஷயங்களுக்காக ஒரு நடிகரின் படம் திரையிடப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. விஜய் மனிப்பு கேட்டாக வேண்டும் என்ற சூழல். அரசே நேரடியாக இதில் ஒரு தனி நபருக்கு எதிராக தான் இருந்தது. அடையாளம் இல்லாத புரட்சியாளர்கள் எதிர்ப்பு. ஆனால், டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்ட பிறகு படம் எந்த பிரச்சனை இன்றி வெளியானது. இது விஜய் மீதிருந்த அரசியல் ரீதியான அச்சத்தை வெளிப்படுத்தியது.

  சர்ச்சை #3: இலங்கை எதிர்ப்பு குரல்

  சர்ச்சை #3: இலங்கை எதிர்ப்பு குரல்

  முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த இரண்டாவது படம். விவசாய பிரச்சனைகள் மற்றும் கார்பரேட் அரசியல், பவர் பொலிட்டிக்ஸ் போன்றவை குறித்து வெளியான திரைப்படம் கத்தி. இந்த படத்தை தயாரித்த நிறுவனம் இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவிற்கு நெருக்கமானவர் என்ற காரணத்தால் இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று போராட்டம் செய்தனர் சிலர்.

  ஆனால், இன்று அதே நிறுவனம் நிறைய படங்களை வெளியிட்டுள்ளது, தயாரித்து வருகிறது. ஆனால், அப்போதெல்லாம் அந்த போராளிகள் எங்கே சென்றனர் என்பது தான் மர்மமாக இருக்கிறது.

  சர்ச்சை #4: ஜி.எஸ்.டி

  சர்ச்சை #4: ஜி.எஸ்.டி

  ஒரு நடிகர் திரைப்படத்தில் பேசிய வசனத்திற்கு நாட்டை ஆளும் தேசிய கட்சியில் இருந்து எதிர்ப்பு. மற்றொருபுறம் ராகுல் காந்தி முதல் பல தலைவர்கள் ஆதரவும் அளித்தனர்.

  நமது நாட்டில் அரசாங்க மருத்துவமனைகள் எந்த திறனில் இயங்குகிறது. அங்கே என்ன வசதி இருக்கிறது என்பதை.. அரசியல் தலைவர்கள் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆவதை வைத்தே நாம் அறிந்துக் கொள்ளலாம்.

  வாக்களித்த ஒரே காரணத்திற்காக மக்கள் மட்டும் அவதிக்குள்ளாக வேண்டும். அவர்களுக்கு வந்தால் ரத்தம், மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. இதை பளீர் வசனங்கள் மூலம் பேசியதன் காரணத்திற்காக தடை கோரி போர்க்கொடி தூக்கினார்கள்.

  அரசியலுக்காக இல்லை...

  அரசியலுக்காக இல்லை...

  நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தீர்க்கமான விஷயம் என்று கூறப்பட்டாலும். இதுவரை தனது நற்பணி மன்றங்கள் மூலம் செய்யப்படும் உதவிகள், தானாக முன்வந்து செய்யும் உதவிகள். பொது மக்கள் சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டது என எதையுமே அரசியலாகவோ, அரசியலுக்காகவோ விஜய் செய்யவில்லை என்பது தான் உண்மை.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Vijay Birthday Special: Unforgettable Moments of Vijay in Social Life!

  Today June 22nd, South Indian Cinema Superstar Actor Celebrates his 45th birthday. Here for his Diehard fans We have listed out Unforgettable Moments of Vijay in Social Life.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more