For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்து, பின் மோசமான நிலையில் இறந்த நடிகர், நடிகைகள்!

  |

  மனிதனுக்கான மதிப்பு என்பது அவனிடம் புகழ், பணம், ஆதாயம் இருக்கும் வரை தான். இவை யாவும் இழந்த பிறகு தான் தன்னை சுற்றி இருப்பவர்கள் எதற்காக பழகினார்கள், யார் உண்மையானவர்கள் என்பதை ஒரு மனிதனால் உணர முடியும்.

  உதவிக்கு இல்லை என்றாலும் கூட ஆறுதலுக்காகவாவது நல்ல சொந்தங்கள் நம்மை சுற்றி இருக்க வேண்டும். பணம், புகழை தாண்டி ஒரு மனிதன் முக்கியமாக சம்பாதிக்க வேண்டியது இதுதான். இதை பெரும்பாலானோர் தனது மரண படுக்கையில் தான் அறிகிறார்கள்.

  Unlucky Indian Actors Whose Last Days Of Life Were Worst!

  சினிமாவில் பெரும் புகழும், பெயரும் கொண்டிருந்த இவர்கள்... இறக்கும் போது மிகவும் மோசமாக இருந்தவர்கள். இறுதி நாட்களில் இவர்களில் சிலருக்கு பணமும், சிலருக்கு உறவும் நெருக்கடியாக அமைந்தன...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பர்வீன் பாபி!

  பர்வீன் பாபி!

  இந்தி சினிமாவில் மாடர்ன் என்ற வார்த்தையை உட்புகுத்திய நடிகைகளில் இவரும் இவரும். 1970,80 களில் பெரும் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தார் பர்வீன் பாபி. நடிகர் கபீர் பேடி மற்றும் இயக்குனர் மகேஷ் பட் (நடிகை ஆலியா பட்டின் தந்தை) போன்றவர்களுடன் உறவில் இருந்ததாக பேச்சு அடிப்பட்டாலும் இவர் யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இவர் 1971-72 ஆண்டுகளில் மாடலாக இருந்து, பிறகு 1973ம் ஆண்டில் இருந்து பாலிவுட் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

  MOST READ: பில்லி சூன்யத்தில் பயன்படுத்தப்படும் வசிய மருந்து எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

  மிருட்சி சீர்கேடு

  மிருட்சி சீர்கேடு

  இவருக்கு Delusional எனப்படும் மாய பிம்பங்கள் தோன்றுதல் அல்லது மிருட்சி சீர்கேடு எனப்படும் பிரச்சனை இருந்தது. இதன் காரணமாக பர்வீன் பாபி போதை பழக்கத்திற்கு அடிமையானார். 2005ம் ஆண்டு எதிர்பாராத தருணத்தில் இவரது அப்பார்ட்மெண்டில் இறந்த நிலையில் இவர் கண்டெடுக்கப்பட்டார். இவர் கண்டெடுக்கப்பட்ட நாளில் இருந்து மூன்று நாளுக்கு முன்னரே இறந்திருக்க கூடும் என மருத்துவ பரிசோதனைகள் மூலம் அறியப்பட்டது.

  ராமி ரெட்டி!

  ராமி ரெட்டி!

  அம்மன் திரைப்படம் முதல் பல ஆன்மீக மற்றும் பேய் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக திகழ்ந்தவர் ராமி ரெட்டி. இவர் 90களில் இந்திய சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக கருதப்பட்டவர். ஏறத்தாழ பல இந்திய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ராமி ரெட்டி.

  கல்லீரல் பாதிப்பு

  கல்லீரல் பாதிப்பு

  இவர் கல்லீரல் பாதிப்பால் நீண்ட நாளாக பாதிக்கப்பட்டிருந்தார். ராமி ரெட்டி கடந்த 2011 ஏப்ரல் மாதம் 14 நாள் காலை 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். தனது உடல்நல கோளாறுகள் காரணமாக தனது கடைசி காலத்தில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு உருவம் மாறி காணப்பட்டார் ராமி ரெட்டி.

  Most Read:வெளிநாட்டவர்களை திருமணம் செய்துக் கொண்ட இந்திய நடிகைகள் - டாப் 10!

  கவின் பக்கர்ட்!

  கவின் பக்கர்ட்!

  1990-களில் பிரபலமான வில்லன் நடிகராக இந்தி சினிமாவில் காணப்பட்டவர் கவின். இவர் தனது 47வது வயதிலேயே மரணம் அடைந்துவிட்டார். கவின் சுவாவ கோளாறு பிரச்சனைகளால் கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் 18 நாள் மரணம் அடைந்தார்.

  இறுதி சடங்கில்..

  இறுதி சடங்கில்..

  இவரை பாந்த்ராவில் இருக்கும் செயிண்ட் ஆண்ட்ரூவ்ஸ் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். பல முக்கிய படங்களில் நடித்தவர், நீண்ட காலம் இந்தி சினிமாவில் பிரபலமாக இருந்தவர் என்ற போதிலும், இவரது இறுதி சடங்கில் பெரிதாக திரை துறை சார்ந்த பிரபலங்கள் யாரும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.

  MOST READ: குழந்தைகள் பெண்ணின் கருவறையில் எப்படி உருவாகின்றன?

  நிஷா நூர்

  நிஷா நூர்

  1980களில் தென்னிந்திய சினிமா துறையில் பிரபலமான நடிகையாக வலம்வந்தவர் நிஷா. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமலுடன் எல்லாம் ஜோடி சேர்ந்து படங்களில் நடித்திருக்கிறார். இவர் சில பாலிவுட் படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஒருவரால் ஏமாற்றப்பட்டதால் நிஷா விபச்சார தொழிலுக்கு தள்ளப்பட்டார். இதனால், திரை துறையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார் நிஷா.

  எய்ட்ஸ்!

  எய்ட்ஸ்!

  பின்னாட்களில் இவரது நிலை கொஞ்சம், கொஞ்சமாக மோசமானது. ஒரு சமயத்தில் தெருவோரத்தில் கிடந்தார். பிறகு இவரை அருகே இருந்த மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போதுதான். இவர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அறியவந்தது. அது முற்றி எயட்சாக மாற, 2007ம் ஆண்டு மரணம் அடைந்தார் நிஷா நூர்.

  Most Read:ஒரு மாதத்தில் பெண் அதிகபட்சமாக எத்தனை முறை உச்சகட்ட இன்பம் பெறுகிறார்கள்?

  நீரஜ் வோரா

  நீரஜ் வோரா

  மாரடைப்பு ஏற்பட்டதற்கு பிறகு ஏறத்தாழ ஓராண்டு காலம் கோமாவில் இருந்தார் நீரஜ் வோரா. பிறகு 2016ம் ஆண்டு இவருக்கு பிரைன் ஸ்ட்ரோக் ஏற்பட்டது. ஏறத்தாழ தான் இறக்கும் முன்னர் தனது குடும்பத்தையே இழந்தார் நீரஜ். பல்வேறு காரணங்களால் இவரது அம்மா, அப்பா, மனைவி ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இவருக்கு பிள்ளைகளும் இல்லை.

  மரணம்!

  மரணம்!

  இவர் நடிப்பை தாண்டி, இயக்குனராக ஆறு படங்களில் பணியாற்றியுள்ளார். இதுப்போக எழுத்தாளராக நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் நாளில் நீர் வோரா மரணம் அடைந்தார்.

  MOST READ: விந்தணு குறைபாட்டை குணப்படுத்தும் தொப்புள் கொடி முறை பற்றி தெரியுமா...?

  எ.கே ஹங்கல்

  எ.கே ஹங்கல்

  200க்கும் மேற்ப்பட்ட இந்தி படங்களில் பணியாற்றியவர் ஹங்கல். ஏறத்தாழ ஐம்பதாண்டு காலம் திரை திரையில் இவர் பணியாற்றி இருக்கிறார். வயதான காரணத்தாலும் பொருளாதார சிக்கலால் மருத்துவ செலவு செய்ய முடியாமல் போன காரணத்தினாலும் மரணம் அடைந்தார் இவர். இவர் கேமரா மேனாகவும், புகைப்பட கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.

  பொருளாதார நெருக்கடி

  பொருளாதார நெருக்கடி

  2001ம் ஆண்டுக்கு பிறகு ஹங்கலுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து. இதனால் மருத்துவ செலவுகளை செய்ய முடியாமல் மிக மோசமான நிலையில் தனது 98வது வயதில் மரணம் அடைந்தார் ஹங்கல்.

  அச்லா சச்தேவ்!

  அச்லா சச்தேவ்!

  2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டு சமயலறையில் கால் தவறி கீழே விழுந்தார் அச்லா. இதனால் இவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், இதன் பிறகு பலமுறை இவரது மூலையில் இரத்தக்கட்டு அல்லது காற்று வீக்கம் எனப்படும் பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்காக பலமுறை இவர் Embolisms எனும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக இவருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டது மற்றும் கண்பார்வை பறிபோனது.

  கேட்பாரற்று

  கேட்பாரற்று

  அச்லாவிற்கு இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டதை குறித்து பாலிவுட் பிரபலங்களை தொலைப்பேசி மூலம்தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர் இவரது குடும்பத்தார். ஆனால், ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை என்று அச்லாவின் குடும்ப நண்பர் ராஜீவ் நந்தா கூறியுள்ளார்.

  அமெரிக்காவில் வசித்து வரும் இவரது மகனும், மும்பையில் வசித்து வரும் இவரது மகளும் கூட இவரை பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இவர் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் நாள் மரணம் அடைந்தார்.

  ஸ்ரீவல்லபத் வியாஸ்

  ஸ்ரீவல்லபத் வியாஸ்

  இவர் அமீர் கானின் லகான் மற்றும் பல குறிப்பிடத்தக்க இந்தி படங்களில் நடித்தவர் ஆவார். இவர் இந்தாண்டு ஜனவரி 7 அன்று மரணம் அடைந்தார். இவர் இறக்கும் போது வயது 60.

  2008ல் ஒரு பெங்காலி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து பல முறை பிரைன் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவல்லபத் வியாஸ் முடக்கு வாதத்தால் படுக்கையில் விழுந்தார். நடுராத்திரி கீழே விழுந்த இவர், மறுநாள் காலையில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார்.

  MOST READ: ஜப்பானியர்கள் இவ்வளவு மொழு மொழுனு இருக்க என்ன காரணம்னு தெரியுமா...?

  பணப் பிரச்சனை...

  பணப் பிரச்சனை...

  2013ம் ஆண்டு கடைசியாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு இவரது குடும்பத்தார் இவரை சிகிச்சைக்காக ஜோத்பூர் அழைத்து சென்றனர். இவரது மனைவி ஷோபா, இரண்டு வருடத்தில் மூன்று முறை வீடு மாற்றினோம். ஒரு நோயாளிக்கு யாரும் வீடு வாடகைக்கு தர இயலாது என்று கூறிவிட்டனர் என்று வருத்ததுடன் கூறியிருந்தார். தனது கடைசி காலத்தில் பொருளாதார சிக்கலில் தவித்து வந்தார் ஸ்ரீவல்லபத் வியாஸ்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Unlucky Indian Actors Whose Last Days Of Life Were Worst!

  Unlucky Indian Actors Whose Last Days Of Life Were Worst!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more