For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இதெல்லாம் நீங்க இந்தியாவுல மட்டும் தான் பார்க்க முடியும் - கேலிப் புகைப்படத் தொகுப்பு!

  By Staff
  |

  இந்தியாவுக்குன்னு நிறையா ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கு. தாஜ்மஹால், மெரீனா, கோவா, நம்ம கலாச்சாரம், நம்மளோட வாழ்க்கை முறைன்னு உலக மக்கள் இந்தியாவுல மட்டுமே காணப்படும் விஷயங்கள்ன்னு சிலவற்ற வகைப்படுத்தி வெச்சிருக்காங்க.

  ஆனா, இதே தலைப்புல இந்தியாவுல மட்டும் காணப்படும் புகைப்படங்கள்ன்னு தேடு நீங்கன்னா குலுங்கி, குலுங்கி சிரிக்கிற மாதிரியான ஒருசில படங்கள் உங்களுக்கு கூகுல் காட்டும்.

  அதாகப்பட்டது, சிரிச்சே சாகலாம்ன்னுஒரு கேட்டகரி இருக்கு. அப்படி இந்தியன் ஃபன்னி போட்டோஸ்ன்னு நீங்க கூகுல் பண்ணிங்கன்னா ஒருசில படங்கள் எல்லாம் வரும். அதுல இருந்து உங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட ஒரு சின்ன தொகுப்பு தான் இது...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அடுத்து லைசன்ஸ்...

  அடுத்து லைசன்ஸ்...

  ஏற்கனவே ஆதார் கார்டு கொடுத்துப் புட்டாங்க... இனிமேல், நாமளும் மனுஷப்பயலுக கணக்கா நம்பர் போட்டு தான் வாழனும் போல. இனிமே ரோட்டுல சுதந்திரமா மேய முடியுமோ என்னவோ... லைசன்ஸ் கேட்டு பிடிச்சு தொல்லைப் பண்ணாலும் பண்ணுவாங்களோ.. செவ்வாழ... ஹெட்லைட் ப்ரைட்டா போட்டுக்கிட்டு ரைட்டுல இண்டிகேட்டர் போட்டு, லெப்ட்ல எஸ்கேப் ஆயிட வேண்டியதுதான்...

  டிஜிட்டல் இந்தியாப்பு...

  டிஜிட்டல் இந்தியாப்பு...

  என்ன பார்த்து வியப்பா... நாங்க வாழ்றது டிஜிட்டல் இந்தியாப்பு... கக்கூஸ் இருக்காது, பொண்ணுகளுக்கு ஃப்ரீயா நேப்கின் இருக்காது. ஆனா, மத்தப்படி நாங்க டிஜிட்டல் இந்தியா தான் பார்த்திங்களே பழைய பஜாஜ் ஸ்கூட்டர் வெச்சு எப்பிடி விவசாயம் பண்றோம்ன்னு. நகந்து போங்கப்பு... காத்து வரட்டும்...

  டைம் டிராவல்...

  டைம் டிராவல்...

  இந்தியாவுல எந்த ரயில்வே ஸ்டேஷன்லயும் ட்ரைன் நேரத்துக்கு வராதுன்னு தெரியும். ஆனால், நேரம் கூட சரியா இருக்காதுன்னு இப்பதான் தெரியுது. ஒருவேளை பிளாட்பாரம் மூணுல இருக்க மக்கள் எல்லாம் டைம் டிராவல் பண்ண முப்பது நிமிஷம் எதிர்காலத்துல வாந்துட்டு இருக்காங்க போல. ஆமாம்மா... டிஜிட்டல் இந்தியாவுல இதெல்லாம் சகஜமப்பா...

  எல்லாம் கிரைன்

  எல்லாம் கிரைன்

  இத மட்டும் யமஹா கம்பெனி காரன் பார்த்தா சூசைடு பண்ணிக்கிவான் மை சைல்டு. என்ன தான் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானியாக இருந்தாலும், இதெல்லாம் தகுமா? பெட்ரோல் டேன்க் தொலையாம இருக்க சீட்டுக்கு பின்னாடி கட்டி வைக்க தெரிஞ்ச உனக்கு, அதை ஐம்பது, நூறு செலவு பண்ணி முன்னாடி மாட்டணும்னு தெரியாம போச்சே.

  அதென்ன பொம்மை வண்டியா?

  அதென்ன பொம்மை வண்டியா?

  நாம சின்ன குழந்தையா இருந்தப்ப, பொம்மை வண்டி ஒட்டுறதா நெனச்சிக்கிட்டு.. அப்பா, மாமா ஸ்கூட்டர், பைக்குல ஏறி உட்கார்ந்துக்கிட்டு டடுர்ர்ர்.... டுர்ர்ர்ர்....ன்னு ஆக்சலேட்டர் முறுக்கி விளையாடுவோம். அப்பறம் அம்மா நம்மள கொஞ்ச நேரத்துல வந்த அலேக்கா அப்படியே தூக்கிட்டு போயிடுவாங்க. அப்படி தான் இருக்கு இந்த படம்.

  கூல் பியர்!

  கூல் பியர்!

  குடி மகன்களுக்கு மட்டுமே தெரியும், சில்லான பீர் கிடைப்பது எவ்வளவு கடினமான செயல் என்று. அதிலயும், ஒவ்வொரு வெள்ளிகிழமை, சனிக்கிழமை சாயங்காலம் கூல் பீர் கிடைக்கிறதுக்கு ஏலம் புண்ணியம் பண்ணியிருக்கணும். இதோ! இந்த இந்திய அறிவியல் அறிஞரின் கண்டுபிடிப்பு உங்களுக்காகவே! பயன்படுத்தி பயன்பெறவும்!

  என்ன ஒரு சிந்தனை...

  என்ன ஒரு சிந்தனை...

  அய்யா நீங்க ரெக்கார்டு பண்றது எல்லாம் தப்பு இல்லை. இப்படி ஸ்கூல் குழந்தைங்க பிஞ்சு கையில பைக் ஓட்டுறதுக்கு பதிலா, ஏன் நீங்க வாத்தியார்கள படுக்க வெச்சு அவங்க கை மேல ஏத்தியிருக்க கூடாது. என்னவோ, நம்ம ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் பசங்கள படிக்க சொல்லி வற்புறுத்துறதவிட இப்ப எல்லாம் வேற காரியங்களுக்கு வற்புறுத்தவே தனி டிப்பார்ட்மெண்ட் கிளம்பியிருக்கு.

  அப்பறம் மச்சான்...

  அப்பறம் மச்சான்...

  அப்பறம் மச்சான்.. வூட்டுல அக்க, அத்தை எல்லாம் சவுக்கியமா இருக்காங்களா.. மாமா என்ன பன்றார்ன்னு சொந்த காரங்க வீட்டுக்கு போய் சாவுகாசமா உட்கார்ந்து பேசுற மாதிரி பிளாஸ்டிக் நாற்காலி போட்டு ஜம்முன்னு உட்கார்ந்துட்டு இருக்காட் தம்பி. ஆமா, பின்ன மெட்ரோ ட்ரைன்ல எல்லாம் சீட்டு கிடைக்கிறது அம்புட்டு ஈஸியா என்ன? இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் நெக்கல்.

  குருவி, குருவி, குருவி அடிச்சா....

  குருவி, குருவி, குருவி அடிச்சா....

  இதென்னடா கொடுமைய... குருவி வெற்றிவேலு ஓட கார விட பலமடங்கு நிறைய சிறப்பம்சங்கள் கொண்டிருக்கு இந்த தாத்தாவோட காரு. சிங் தாத்தா.. இந்த மாடல் எங்க வாங்கு நீங்க... டோர் லாக் சிஸ்டம் தேவையில்ல, ஏசி அவசியமே இல்லை. அவசரத்துக்கு சூஸ் போட்டு குடிக்க கரும்பு ஜூஸ் மெஷினே இருக்கு. உள்ளக்குள்ள கரும்பு கட்டும் இருக்கு. யார் சாமி நீங்க.. உங்கள இப்பவே பார்க்கணும் போல இருக்கு...

  அசலாட்டு!

  அசலாட்டு!

  நீங்க என்னவோ ஒலிம்பிக்ல கண்ட கேம் எல்லாம் வெச்சு மெடல் கொடுக்கிறீங்க. இந்த கேம் மட்டும் ஒலிம்பிக்ல கொண்டு வந்தா எல்லா மெடலும், எல்லா வருஷ சாம்பியனும் நம்ம ஊரு பொண்ணுகளா தான் இருப்பாங்க. எத்தனை குடம் தண்ணியா இருந்தாலும் அசராம ஒரு சொட்டு கீழ சிந்தாம எடுத்துட்டு போறாங்க பாருங்க. அதுவும் சுட்டெரிக்கிற வெயில்ல.

  ஏலே டிக்கெட்டு கொடு...

  ஏலே டிக்கெட்டு கொடு...

  எங்களுக்கு கவர்மெண்ட்டு ஆதார் கார்டே கொடுத்திருச்சு.. நீ தம்மாதுண்டு டிக்கெட்டு கொடுக்க மாட்டியா. மனுஷ பயலுகள விட நாங்க தான் எங்களுக்கு தான் மவுசு அதிகம். ஒரு சின்ன பொண்ண ரேப் பண்ணிட முடியும், ஆனா, என் மேல யாராச்சும் கை வெச்சிட்டு முடியுமா? டிக்கெட்ட எடுப்பா....

  சர்க்கஸ்!

  சர்க்கஸ்!

  இப்படியான சர்க்கஸ் நாம இந்தியாவுல மட்டும் தான் பார்க்க முடியும், டூவீலர்ல மினிடோர்ல எத்த வேண்டிய சரக்க ஏத்துவாங்க. மினிடோர்ல டெம்போல எத்த வேண்டிய சரக்க ஏத்துவாங்க. டெம்போல ஒரு லாரியில ஏத்த வேண்டிய சரக்க ஏத்துவாங்க. சில சமயம் டிரைவரே சரக்குல தான் வண்டியில ஏறுவாரு.

  இன்பமாய் இருக்குதய்யா...

  இன்பமாய் இருக்குதய்யா...

  எந்த உலக நாடுகள்லயும் இல்லாத ஒரு ஃபெசிலிட்டி நம்ம ஊர் பஸ்ல மட்டும் பார்க்கும் போது அப்படியே சந்தோசமா இன்பமா இருக்குதய்யா... அவங்க எல்லாம் பஸ்குள்ள டாய்லேட் தான் கட்டுறாங்க. ஆனா நாம... பஸ்க்கு படிக்கட்டே கட்டல. இதுவும் கடந்து போகும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Things You Can See in India Only - Funny Pictures Collection!

  Things You Can See in India Only - Funny Pictures Collection!
  Story first published: Saturday, April 21, 2018, 12:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more