For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தியா படத்துல இதெல்லாம் நீங்க கவனிச்சிங்களா?

இங்கே சமீபத்தில் வெளியான தியா எனும் தமிழ் படத்தில் இருந்து மகள் - அம்மா உறவு குறித்தும், கருகலைப்பு குறித்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

|

தியா, சாய் பல்லவி வெரோனிகா அரோரா நடிப்பில், லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் இயக்குனர் எ. எல். விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்.

ஹாரர், திரில்லர் வகையில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் உண்மையில் பேசியிருப்பது, காட்சிப் படுத்தியிருப்பது ஹாரரான விஷயம் தான். ஆனால், அது பேய் என்ற வகையில் அல்ல. மனிதம் என்ற வகையில். இன்றைய தினத்தில் கலாச்சார வளர்ச்சி என்ற பெயரில் இந்த இளைய சமூகம் மதிப்பு வாய்ந்த ஒன்றை மிகவும் உதாசீனப்படுத்தி வருகிறது. அது தான் கற்பு.

கருக்கலைப்பு செய்யும் இடத்தில் தான் இன்றைய சமூகம் திசை மாறுகிறது என்று நீங்கள் கருதினால் அது தவறு. தன் உடல் சார்ந்த கூச்சம் மரத்து போன இடத்திலேயே இந்த சமூகம் திசை மாறிவிட்டது. இதற்கு, சிறு வயதில் அந்த குழந்தைகளுக்கு தொப்புள் தெரிய, தொடை தெரிய உடை உடுத்தி அழகு பார்த்த பெற்றோர் தான் காரணம்.

என் உடை, அதை நான் எப்படி உடுத்தினால் என்ன என்று கேள்விக் கேட்பது நியாயமானது தான். கற்பழிப்புக்கும், உடைக்கும் சம்மந்தமே இல்லை தான். அப்படி சம்மந்தம் இருந்திருந்தால் நம் நாட்டில் பிறந்து நான்கு மாதமே ஆன குழந்தையும், பதின் வயதை கூட எட்டிடாத பல சிறுமிகளும் கற்பழிப்புக்கு இரையாகி இருக்க மாட்டார்கள்.

சரி! தியா கூறுவது என்ன? தியா இழந்தது என்ன? நம் நாட்டில் எண்ணற்ற தியாக்கள் இழந்தவை என்னென்ன...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1971

1971

பிரிட்டிஷ் ஆட்சியின் போதே இந்தியாவில் கருக்கலைப்பு சட்ட விரோதமான செயல் என அறிவிக்கப்பட்டு விட்டது. தெரிந்தே, தூண்டுதலின் பெயரில் செய்யப்படும் கருக்கலைப்புக்கு மூன்று ஆண்டுகளில் இருந்து ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டம் இயற்றப்பட்டிருந்தது. ஒருவேளை, அந்த பெண்ணின் உயிரை காக்க கருவை கலைக்க வேண்டும் என்றால் கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

1964ல் மத்திய அமைச்சகம் கருக்கலைப்பு மூலமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என்று கருதியது. இதன் மூலமாக இந்திய அமைச்சகம் ஒரு கமிட்டி அமைத்து அதன் மூலம் மருத்துவ ரீதியாக கருக்கலைப்பை லீகலாக மாற்றியது. அதன் கீழ் சிலர் தார்மீக நிலைப்பாடுகளை உருவாக்கியது.

எம்.டி.பி

எம்.டி.பி

பிறகு மெடிக்கல் டெர்மினேஷன் ஆப் பிரகனன்சி எனப்படும் எம்.டி.பி சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு குறித்து சில சட்டத்திருத்தங்கள் கொண்டு வர பட்டன. 1971க்கு பிறகு 12 - 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் அரசு மூலமாக சான்றிதழ் அளிக்கப்பட்ட தக்க நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் மூலமாக மட்டும் கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், அதில் சில குறிப்புகள் வகுக்கப்பட்டிருந்தன.

எதற்காக?

எதற்காக?

இந்த பிரசவத்தின் மூலம் அந்த பெண்ணின் உடல் அல்லது மன ரீதியான ஆரோக்கியம் ஆபத்துக்குள்ளாகும் என்றால்...

அந்த பெண்ணின் கரு ஊனமாகவோ அல்லது தவறான வடிவிலோ வளர்ந்து வருகிறது எனில்...

கற்பழிப்பு மூலம் கருவுற்று இருந்தால்...

18வயது நிறைவடையாத, திருமணமாகாத பெண் கருவுற்று இருந்தால்.. பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதலுடன்...

மனநிலை சரியில்லாத போது கருவுற்று இருந்தால்.. அதன் மூலம் பாதிப்பு ஏற்படும் எனில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதலுடன்...

கருத்தடை உபயோகித்தும் கரு உண்டாகியிருந்தால்...

என சில காரணங்கள் மூலம் கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம் என்று அரசு சட்டம் வகுத்தது.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும்...

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும்...

கடந்த 2013ம் ஆண்டு வெளியான சர்வே கணக்கின் படி இந்தியாவில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறையால் ஒரு பெண் மரணம் அடைகிறாள் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது வருடத்திற்கு இதன் காரணமாக மட்டும் நான்காயிரம் பெண்கள் மரணம் அடைகிறார்கள்.

ஒழுங்கற்ற முறையில்...

ஒழுங்கற்ற முறையில்...

2007ல் வெளியான கணக்கின் படி இந்தியாவில் வருடத்திற்கு 64 இலட்சம் கருக்கலைப்பு நடக்கிறது. அதில் 36 இலட்சம் கருக்கலைப்பு அதாவது 56% கருக்கலைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் நடக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சில சமயங்களில் தவிர்க்க முடியாமல் போவதால் ஒழுங்கற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன என்றும் ஆய்வறிக்கைகள் மூலம் அறியப்படுகின்றன.

விதை!

விதை!

பெண்கள் என்றாலே பாவம், குடும்பத்திற்கு பாரம் என்ற கண்ணோட்டம் இன்றளவிலும் நமது சமூகத்தில் பல இடங்களில் வேரூன்றி பரவிக் கிடப்பதை நம்மால் காண இயலும். பாரமாக பெண் சிசுவை தவிர்ப்போர் சிலர். தான் அனுபவித்த, இந்த சமூகத்தில் கண்ட கொடுமைகளை என் பிள்ளையும் அனுபவித்துவிட கூடாது என்ற அச்சத்தால் பெண் சிசுவை தவிர்ப்போர் சிலர்.

உண்மையில் பெண் என்பவள் விதை. அந்த விதைகளை நாம் இழந்துவிட்டால், இன்று மரபணு மாற்றப்பட்ட விஷத்தன்மை வாய்ந்த காய்கறி, பழங்களை உண்பது போல அடுத்த தலைமுறை செக்ஸ் பொம்மைகளுடன் உறவுக் கொள்ளும். அதற்கு அடுத்த தலைமுறை என்று கூற யாருமே இருக்க மாட்டார்கள்.

ஆண்கள் கற்பழிக்கப்பட்டால்?

ஆண்கள் கற்பழிக்கப்பட்டால்?

நினைத்துப் பாருங்களேன்... ஓட ஓட விரட்டி ஒரு ஆணை நிர்வாணப்படுத்தி... நான்கைந்து பெண்கள் அவனை கதற கதற கற்பழித்து, பிறப்புறுப்பில் இரத்தம் ஒழுக முற்காட்டில் வீசிவிட்டு... எங்கே தடம் தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு இரும்பு ராடு எடுத்து பிறப்புறுப்பை சிதைத்து குத்துயிரும், கொலை உயிருமாய் விட்டு சென்றால் அதன் வலி எப்படி இருக்கும்...?

நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது அல்லவா?

இங்கே நம் நாட்டில் பல பெண்கள் இப்படியான நிலையில் தான் தினம், தினம் மடிந்துப் போகிறார்கள். பல பெண்கள் வாழ்நாள் முழுக்க அந்த தழும்புகளை, உடலில் ஏற்பட்ட வடுக்களை, மனதில் தீராத சுமையாக நீடிக்கும் வலியை சுமந்துக் கொண்டே உயிர் வாழ்ந்து வருகிறார்கள். இதுப் போன்ற காரணங்களால் தான் பெண் சிசுக்களை நாம் இழந்து வருகிறோம்.

அழகானவள்

அழகானவள்

உண்மையில் பெண் அழகானவள்... ஆணை காட்டிலும் அழகா? என்று யாராவது கேள்வி கேட்கலாம். அழகிற்கு ஆண் உவமை என்றால்... பெண் உருவகம். அக்கா, தங்கையுடன் பிறந்த ஆணுக்கே தெரியும் பெண்மையும், பெண்களும் எத்தனை அழகானவர்கள் என்று. வயதில் மூத்தவளோ, இளையவளோ... எத்தனை சண்டையிட்டுக் கொண்டாலும் சகோதரனுக்கு இன்னொரு தாயாக இருப்பவள் சகோதரி மட்டுமே.

காப்போம்!

காப்போம்!

முறையற்ற கருக்கலைப்பு தியாக்களை மட்டுமல்ல சில சமயம் துளசிகளையும் கொன்றுவிடுகிறது. இன்று நாம் அரசியலில் மாற்றம் வேண்டும் என பல போராட்டங்கள் செய்து வருகிறோம்.

அதே அளவு நமது உணவுக் கலாச்சாரத்தில் இருந்து உணவு கலாச்சாரம் வரை பலவற்றில் நல்ல மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். இதற்கும் போராட்டம் நடத்த தான் வேண்டும். வீதியில் அல்ல, வீடுகளில்.

தியக்களை காப்போம்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things to Learn From Tamil Movie Diya!

Here We have pointed some tips that we can learn some mother daughter relationship tips and facts about abortion from Diya Movie.
Desktop Bottom Promotion