For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணம் பண்ணிக்க பொண்ணு, மாப்புள, தாலி மட்டும் போதாது... வேறென்ன வேண்டும்? இதப்படிங்க!

இங்கே பல்வேறு இந்திய திருமண சட்டங்கள் குறித்த தகவல்கள் மற்றும் உண்மைகள் கூறப்பட்டுள்ளன.

By Staff
|

திருமணம் செய்துக் கொள்ள என்ன தேவை? என்று கேட்டால்.. நக்கலாக பேசுபவர்கள் ஆண், பெண் ஒரு தாலி போதும் என்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் உறவுகள், நல்ல நாள், முகூர்த்தம், மண்டபம், பணம், நகை, புடவை என பெரிய பட்டியலே போடுவார்கள்.

இவை மட்டும் ஒரு திருமணம் நடக்க போதுமானவை என்று நீங்கள் கருதுகிறீர்களா?

Things to Know About Indian Marriage Act

ஆம்! என்று நீங்கள் நினைத்தால்... மன்னித்துக் கொள்ளுங்கள்... ஒரு ஆணும், பெண்ணும் இந்தியாவில் திருமணம் செய்துக் கொள்ள இவை மட்டும் போதாது. நாள், நட்சத்திரம், ராசி, பொருத்தம், உறவினர் சம்மதம், மணமக்கள் சம்மதம் போன்றவற்றுடன்... இந்திய திருமண சட்டம் வகுத்திருக்கும் சில விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். இது ஒவ்வொரு மதம் மற்றும் சுயமரியாதை திருமணம் சார்ந்து சில திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் கொண்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்து மதம்!

இந்து மதம்!

இந்து திருமண சட்டம் 1955ன் படி , இந்த சட்டமானது இந்து, சீக்கியர்கள், பௌத்த மதம் சார்ந்த அனைவருக்கும் பொதுவானது. இந்து மத திருமண சட்டத்தின் படி திருமணம் செய்துக் கொள்ளவிருக்கும் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

திருமணம் செய்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டிருக்கும் உறவில் மணமகன் - மணமகள் இருக்க கூடாது. மணமகன் - மணமகளின் வீட்டு முறைப்படி செய்ய வேண்டிய சம்பிரதாய முறைகளை செய்துக் கொள்ளலாம். ஓமகுண்டம் வளர்த்து தாலி கட்டிக் கொள்வதால் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக ஒப்புக்கொள்ளப் படுகிறது.

பிறகு திருமணத்தை பதிவர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கிறிஸ்தவ மதம்!

கிறிஸ்தவ மதம்!

கிறிஸ்துவ மத திருமணத்திற்கு இரண்டு சட்டங்கள் இருக்கின்றன...

  1. கிறிஸ்துவ மத திருமண சட்டம் 1872 மற்றும்
  2. இந்திய விவாகரத்து சட்டம் 1869

இந்த இரண்டு சட்டங்களும் கிறிஸ்துவ மத திருமணங்களுக்கு பொருந்தக் கூடியதாய் இருக்கின்றன. இந்த சட்டங்களின் படி மணமகன் - மணமகள் இருவரில் யாரேனும் ஒருவர் கிறிஸ்துவ மதத்தினை சேர்ந்தவராக இருந்தால் போதுமானது. சர்ச் அல்லது மண்டபங்களில் திருமணம் செய்துக் கொள்ளலாம்.

திருமணம் பாதிரியார் முன்னிலையில் கிறிஸ்துவ முறைப்படி நடக்க வேண்டும். திருமணத்தின் போது மோதிரம் மாத்திக் கொண்ட பிறகு மாநில அரசு நியமித்த கிறிஸ்துவ திருமண பதிவாளர் முன்னிலையில் திருமணத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம்.

இஸ்லாம் மதம்!

இஸ்லாம் மதம்!

இஸ்லாம் / முஸ்லிம் திருமணங்கள் ஒருவரிடம் ஒருவர் ஒப்புதல் அளிப்பதாக அல்லது ஒப்பந்தம் செய்துக் கொள்வதாக அறியப்படுகிறது. இவர்கள் நிக்கா என்று திருமண சடங்கை அழைக்கிறார்கள். இஸ்லாமியர்கள் தங்கள் திருமணத்தை நிக்காநாமா எனும் படிவத்தில் பதிவு செய்துக் கொள்கிறார்கள்.

இஸ்லாமிய திருமணத்தின் போது ஒரு வீட்டார் முன்மொழிந்து, மற்றொரு வீட்டார் அதை ஒப்புக்கொள் வேண்டும். இது இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

சுய மரியாதை திருமணம்!

சுய மரியாதை திருமணம்!

எந்த ஒரு மதத்தின் தழுவலும் இன்றி, எந்த ஒரு சடங்கு, சம்பிரதாய முறைகளும் இன்றி நடப்பது தான் சுய மரியாதை திருமணம். சுய மரியாதை திருமணத்தை சீர்திருத்த திருமணம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

1967ம் ஆண்டு சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக ஒப்புக்கொள்ள / ஏற்றுக்கொள்ள திருமண சட்டம் 7ல் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த சுய மரியாதை திருமணங்கள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் மணமக்கள் ஒருவரை ஒருவர் இல்வாழ்க்கை துணையாக ஏற்று உறுதி மொழி ஏற்பதாக அமைகிறது. உறுதி மொழி தவிர சுய மரியாதை திருமணங்களில் தாலி கட்டுவதோ, மோதிரம் மாட்டிக் கொள்வதோ போன்ற வழக்கங்கள் பின்பற்றலாகாது.

பெரியாரால் கொண்டுவரப்பட்ட இந்த சுய மரியாதை திருமணமானது தமிழகத்தில் மட்டுமே நடந்து வருகிறது. இவை தமிழகத்தில் மட்டுமே செல்லுப்படி ஆகும்.

சிறப்பு திருமணம்!

சிறப்பு திருமணம்!

ஸ்பெஷல் அல்லது சிறப்பு திருமண சட்டமும் இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு திருமண சட்டத்தின் படி இந்தியாவில் வாழும் எந்த ஒரு நபரும்... எந்த சாதி, மத தடையும் இன்றி தங்கள் சுய விருப்பத்தோடு திருமணம் செய்துக் கொள்ளலாம். இதற்கு அந்த மணமக்களின் பெயர், விலாசம் போன்றவருக்கு ஆதாரங்கள் தேவை. அதில் பெயர், வயது, விலாசம் சரி பார்க்கப்படும்.

இப்படியாக திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவிப்போர் முப்பது நாட்களுக்கு முன் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பம் பதிவாளர் அலுவலகக்தில் ஒட்டப்படும். அந்த திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவிப்போர், அந்த முப்பது நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை எனில், முப்பது நாட்கள் முடிந்த பிறகு பதிவாளர் முன்னிலையில் மணமகன் - மணமகள் மூன்று நபர் சாட்சியத்தோடு கையெழுத்திட்டு திருமணம் செய்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things to Know About Indian Marriage Act

Here we have written about various marriage acts that followed by Indian Constitution.
Desktop Bottom Promotion