4 புள்ள பெத்து என்ன பிரயோசனம், சோறு சாப்பிட்டு 2 நாள் ஆச்சு சாமி - பசியில் வாடும் முதிய தம்பதி!

Posted By:
Subscribe to Boldsky

வாழ்க்கை எத்தனை கொடுமையானது என்பதை எப்போது அறிந்துக் கொள்ள முடியும்...

வயிறு நிறைய பசி நிறையும் போது... சிரித்து பேச இல்லாவிட்டாலும், அழுது புலம்புவதை கூட பகிர்ந்துக் கொள்ள உடன் உறவுகள் இல்லாத போது... வயதான காலத்தில் உதவ ஆளின்றி தனிமையில் வாடும் போது... தூக்கிக் கொஞ்ச வேண்டிய பேரனை, வீட்டு வேலைக்கு அனுப்பும் போது... உடுத்த உடையில்லாமல், மற்றவர்கள் பயன்படுத்திய பழைய ஆடையை உடுத்தும் போது... பிச்சை எடுத்து சாப்பிடும் போது... அடுத்த வேலை உணவு எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் இல்லாத போது...

இதில் ஏதாவது ஒருநிலை வந்தாலும் நாம் திண்டாடி போய்விடுவோம். இந்த முதிய தம்பதிக்கு வயது 80, 70. நீங்கள் மேல படித்த அனைத்து சூழல்களையும் அனுதினமும் கடந்து வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள்.

கல்லாலான கண்களுக்கு கூட கண்ணீர் வரும் இவர்களை நிலையை கண்டால்....

Cover Image Courtesy: GMB Akash / Facebook

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எத்தனை நாட்கள்?

எத்தனை நாட்கள்?

எத்தனை நாட்கள் நாங்கள் சோறு சாப்பிடாமல் இருக்க முடியும்? ஒரு நாள்? இரண்டு நாள்? மூன்று நாட்கள்? எத்தனை நாட்கள் இருப்பீர்கள். எங்கள் வீட்டில் உணவில்லை. எங்களிடம் பணமும் இல்லை, எதுவுமில்லை. எங்களுக்கு நான்கு மகன்கள், ஆனால், நால்வரில் ஒருவர் கூட எங்களை வந்து பார்த்து செல்வதில்லை. ஒரே ஒரு மகன் மட்டும் வாரத்திற்கு 120 டக்கா? (வங்காள தேச பணம்). இதன் இந்திய ரூபாய் மதிப்பு வெறும் 92 ரூபாய் 43 காசுகள். இந்த முதிய தம்பதியினர் உயிர் வாழ வாரத்திற்கு இந்த 92 ரூபாய் போதுமா?

120 போதுமா?

120 போதுமா?

கண்டிப்பாக இந்த 120 டக்கா எங்களுக்கு பத்தாது. நான் கொஞ்ச நாட்கள் செங்கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தேன். ஐம்பது செங்கல் உடைத்தால் 20 டக்கா கிடைக்கும். ஆனால், இப்போது இந்த தள்ளாடும் வயதில் என்னால் செங்கல் உடைக்கும் பணிக்கு போக முடிவதில்லை. சில சமயம் நான் வீட்டு வேலைகளுக்கும் சென்று வந்ததுண்டு. ஆனால், எனது உடல் வலு அதற்கு ஒத்துழைக்க மாட்டேங்கிறது.

பழைய துணி!

பழைய துணி!

எங்கள் இருவராலும், சரியாக ஒருவரை காண முடியாது. எங்கள் கண் பார்வை மந்தமாகிக் கொண்டே போகிறது. வேறு ஒரு நபரின் உதவி இல்லாமல் எங்களால் வெளியே நடந்து செல்லவும் முடியாது. சில சமயம் அக்கம்பக்கத்து வீட்டார்கள், தெரிந்தவர்கள் என யாரேனும், எங்களுக்கு உதவுவார்கள். அவர்கள் கொடுக்கும் பழைய துணியை தான் நாங்கள் உடுத்திக் கொள்கிறோம்.

ரமலான் நோம்பு!

ரமலான் நோம்பு!

சென்ற ஆண்டு ரமலான் நோம்பு போது ஒரு பெண்மணி எனக்கு இரண்டு புடவை கொடுத்தார். அதை உடுத்தி தான் நான் அல்லாவை பிரார்த்தனை செய்துக் கொண்டேன். இன்றும், நான் அதே புடவையை உடுத்தி தான் எனது பிரார்த்தனையை செய்து வருகிறேன்.

பிச்சைக்கும் வழியில்லை!

பிச்சைக்கும் வழியில்லை!

கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் பிச்சை எடுத்து தான் பிழைத்து வருகிறோம். இப்போதெல்லாம் எங்கள் கிராமத்தில் நாங்கள் யாரேனும் வீட்டு கதவு முன் சென்று நின்றால் பயந்து ஓடுகிறார்கள். எத்தனை நாட்கள் தான் அவர்கள் எங்களுக்கு உதவுவார்கள் கூறுங்கள்... அவர்களும் பெரும் வசதி படைத்தவர்கள் எல்லாம் இல்லை. அவர்களும் கஷ்ட்டப்பட்டு வாழும் மக்கள் தான். ஆகையால், பிச்சை எடுத்து வாழ்வதற்கு கூட கொடுப்பினை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

பேரன்!

பேரன்!

எங்களுக்கு ஒரு மகளும் இருந்தாள், அவள் திடீரென இறந்து போக, எங்கள் பேரனையும் வளர்க்க வேண்டிய சூழலில் நாங்கள் தள்ளப்பட்டோம். எங்கள் இவரையே பார்த்துக் கொள்ள இயலாத நிலையில், வெறும் ஏழு வயது சிறுவனான அவனை நாங்கள் எப்படி பார்த்துக் கொள்வது. சென்ற வாரம் தான் அவனை ஒரு வீட்டுக்கு வேலைக்கு அனுப்பினோம்.

அடிமை வாழ்க்கை!

அடிமை வாழ்க்கை!

அவனுக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. ஆனால், தங்க இடமும், மூன்று வேலை சாப்பிட உணவும், உடுத்திக் கொள்ள உடையும் கிடைக்கும். கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை தான். அவன் வாழ்வாவது பசி இல்லாமல் கொஞ்சம் நிம்மதியாக போகட்டும் என்ற எண்ணத்தில் அவனை எங்கே சேர்த்துவிட்டோம். எங்களுக்கு துணையாக இருந்த ஒரே ஜீவன் அவன் தான்.

தனிமை!

தனிமை!

ஆனால், இப்போதும் அவன் இல்லாமல் எங்கள் வாழ்க்கை மேலும் இருளில் மூழ்கிவிட்டது. அவன் தான் எனது கணவரை நாள் தவறாமல் ஐந்து வேலை மசூதிக்கு அழைத்து சென்று வருவான். தனிமை எங்களை வாட்டி எடுக்கிறது. இப்போது என் கணவர் மசூதிக்கு சென்று வர வேண்டும் என்றால், அவரை அழைத்து சென்று, மீண்டும் வீட்டில் வந்து விட ஒரு ஆள் துணை தேவைப்படுகிறது. சாலைகளில் செல்லும் நபர்களே அவருக்கு இப்போது உதவி வருகிறார்கள்!

கொடியது!

கொடியது!

வாழ்க்கை எவ்வளவு கொடியது, பசி எவ்வளவு பெரிய வலி என்பதை முழுமையாக அறிந்தவர்கள் நாங்கள். எத்தனை நாட்கள் நாங்கள் உயிர் வாழ்வோம் என்று தெரியாது. ஆனால், உயிர் வாழும் வரை சாப்பிட்டாக வேண்டுமே, அதற்கு சோறு வேண்டுமே? எங்களுக்கு எங்கிருந்து உணவு கிடைக்கும்.? யார் எங்களுக்கு மருந்து வாங்கி தருவார்கள். நாளுக்கு,நாள் எங்கள் உடல்நலம் பலவீனம் அடைந்து வருகிறது.

ரெண்டு நாள் ஆச்சு...

ரெண்டு நாள் ஆச்சு...

நாங்கள் கடைசியாக சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. இன்று நான் ஒரு முள்ளங்கி விளைநிலத்திற்கு வேலைக்கு சென்றேன். அதுக்கு கூலியாக அந்த உரிமையாளர் எனக்கு அரைக்கிலோ அரிசியும், கொஞ்சம் முள்ளங்கியும் கொடுத்து உதவினார். இது ஒரு மூன்று நாளுக்கு வரும். அதன் பிறகு மீண்டும் எங்களுக்கு எப்போது உணவு கிடைக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

எதற்காக?

அனைத்திற்கும் மேலாக, நாங்கள் எதற்காக காத்திருக்கிறோம், உயிர் வாழ்கிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை. வயதாக, வயதாக வாழ்க்கை ரணமாகும் என்பதை மட்டும் அறிவோம். யாரும் வயதான பெறோர் மீது அக்கறை செலுத்த மாட்டார்கள் என்பது புரிகிறது.

- ஜக்மாரா (70) மற்றும் அப்துல் குடோஸ் (80)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Pain of Helpless of This Old Couple is Big Lesson for Careless Children!

This Old Couple Have Four Sons, But No One is Feeding Them Now. Do You Want To Know, How Harsh is Life, Read this Story.
Story first published: Wednesday, February 7, 2018, 16:11 [IST]
Subscribe Newsletter