நிர்வாணமாய் கிடப்பதையும் மறந்து யாராவது என்னப் பாருங்களேன் என்று உளறினேன்! My story #174

Posted By:
Subscribe to Boldsky

கண்களைக்கூட சரியாக திறக்க முடியவில்லை. கேட்கிற சத்தம் மற்றும் வெளிச்சத்தை வைத்து அது ஒரு நெடுஞ்சாலையோரம் என்று யூகிக்க முடிந்தது. எந்திரி.... எந்திருச்சு போ என்று யாரோ என்னை இயக்கிக் கொண்டிருந்தார்கள். அம்மா.... அம்ம்ம்மா என்று அழுது கொண்டே தலையை நிமிர்த்தி உடலைப் பார்த்தேன். உடைகள் ஏதுமின்றி நிர்வாணமாக ரத்தச் சகதியில் கிடந்தது.

இங்கிருந்து எப்படிச் செல்ல, இப்படி ஒரு உயிர் இங்கே துடித்துக் கொண்டிருக்கிறது என்று இவர்களுக்கு எப்படி தெரியும்? என்னை இந்நேரம் தேட ஆரம்பித்திருப்பார்களா? இது எந்த இடம்? நான் எங்கே இருக்கிறேன் அதை விட இன்னும் எவ்வளவு மணித்துளிகள் நான் உயிருடன் இருக்கப்போகிறேன் என்று எதுவும் தெரியாது.

இப்போதைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கிடைத்தால் போதும் நடந்ததையும் நடக்கப்போவதையும் பிறகு பேசிக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விடியல் :

விடியல் :

இப்போது நன்றாக விடித்திருந்தது. லேசாக முழிப்பு வந்தது, உண்மையிலேயே நான் தான் விழித்திருக்கிறேனா? இன்னும் நான் சாகவில்லையா என்று ஒரு முறை உறுதி செய்து கொண்டேன்.

அடக் கொடுமை தார்ரோட்டுக்கு இரண்டு அடி தள்ளிதான் கிடக்கிறேனா? என்னுடல் நிர்வாணமாய் கிடப்பதையும் மறந்து யாராவது என்னப் பாருங்களேன் என்று உளர ஆரம்பித்தேன்.

Image Courtesy

கொன்னுட்டாய்ங்க :

கொன்னுட்டாய்ங்க :

எதற்காக இன்னும் இந்த உயிரை கையில் பிடித்து வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லை. இப்போது முணுகலும் நின்று போனது. மூச்சு மட்டும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. முன்பை விட இப்போது வெயில் சுளீரென்று அடித்தது.

லாரி ஓட்டுநர் ஒருவர் எதார்த்தமாக வண்டியை நிப்பாட்டிவிட்டு ஒதுங்குவதற்காக என்னருகில் வந்திருப்பார் போல என்னைப் பார்த்த மாத்திரத்தில் அலறி கத்தி சற்று பின்வாங்கினார்.... ஐயயோ பொம்பளப்புள்ளை கொன்னு வீசிருக்கானுக வாங்க.... வாங்க என்று கத்தினார்.

Image Courtesy

மருத்துவமனை :

மருத்துவமனை :

லாரியில் வைத்திருந்த லுங்கியை என் உடலுக்கு போர்த்தியிருந்தார். ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லப்பட்டது. போலீஸ், பொதுமக்கள் என ஓரளவுக்கு ஜனம் கூடியிருந்தது. என்னைத்தூக்க வலது கால் வழக்கத்திற்கு மாறாக எதிர்திசையில் திரும்பி தொங்கிக் கொண்டிருந்தது.

உசுரு இருக்கு.... கால் போச்சு போல... கண்டிப்பா ஆக்ஸிடண்ட்டா இருக்காது.... எவ்ளோ நேரமா இங்க கிடக்கோ.... ரேப்பா இருக்கும் போல உடம்பு பூரா காயம்.

Image Courtesy

தீவிர சிகிச்சை :

தீவிர சிகிச்சை :

மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டேன். பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் நாள் கண் விழிக்கிறேன். அம்மாவைக் காணவில்லை அப்பா மட்டும் ஓரத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். வாயிலும் மூக்கிலும் ட்யூப் சொருகப்பட்டிருந்தது.

சொல்லும்மா என்ன ஆச்சு எந்த வண்டி இடிச்சது? என்று வந்து நின்றார் காக்கிச் சட்டை அணிந்த ஒருவர்.

எந்த வண்டியும் இடிக்கல.... என்னைய ரெண்டு பேர் ரேப் பண்ணினாங்க அவங்க யாருன்னும் எனக்கு தெரியும்.

Image Courtesy

உளராத :

உளராத :

என்னம்மா கனவு எதாவது கண்டியா? ஹைவேஸ்ல ஆக்ஸிடண்ட் ஆகி கிடந்த, உன்னைய ஒரு லாரிக்காரன் அடிச்சு தூக்கிப் போட்டு போய்ட்டான். அப்பறம் ஹைவே போலீஸ் தான் பாத்து உன்னைய இங்க சேத்துருக்கு புரிஞ்சதா?

என்ன சொல்றீங்க.... என்னைய மொதோ ஸ்பாட்ல பாத்தது ஒரு லாரி டிரைவர். ஒரு நைட் முழுக்க நான் அதே இடத்துல நிர்வாணமா கிடந்தேன். இது ஆக்ஸிடண்ட் கிடையாது. உறுதியாக சொன்னேன்.

என்ன சார் இது..... நீயே பேசிக்கோ என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

Image Courtesy

மானத்த வாங்காதா :

மானத்த வாங்காதா :

ஏய்.... ஏண்டி இப்டி என் மானத்த வாங்குற அங்கயே செத்து தொலச்சிருக்க வேண்டியது தான வாய முடிட்டு இருக்க மாட்ட.... ரேப் பண்ணாங்களாம் இவ பாத்தாலாம். இப்போ ரேப் பண்ணான்னு சொன்னா மட்டும் என்ன ஆகப்போது ரேப் பண்ணது இந்த பொண்ணத்தான் இது தான் அவன் அப்பன், அவ ஆத்தா கூட படிச்சவகன்னு உன் ஜாதகத்தையே ஏலம் வுடுவான்.

அப்பறம் என்ன நடந்தது... அன்னக்கி என்ன ஆச்சுன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கன்னு ஒவ்வொருதனும் மைக்க நீட்டுவான் நீ எங்க தடவுனான்னு வெக்கமே இல்லாம சொல்லிட்டு இருப்பியா.

Image Courtesy

ஒழுங்கா இரு :

ஒழுங்கா இரு :

இங்க கைல கால்ல விழுந்து படிக்கிற பொண்ணு வெளிய தெரிஞ்சா அசிங்கம்னு சொல்லி ஆக்ஸிடண்ட்னு முடிக்க சொல்லிருக்கேன் எல்லாம் சரியா முடியுற நேரத்துல நீ பைத்தியம் மாதிரி ரேப்... ரேப்னு சொன்னதையே சொல்லிட்டு இருக்க...

அப்பா.... இதுல என் தப்பு எதுவும் இல்லப்பா

உன் தப்போ அவன் தப்போ இப்போ பாதிப்பு யாருக்கு உனக்கு தானா?

அப்போ அவனுங்க ஒரு பொண்ண ரேப் பண்ணது, கொலை பண்ண ட்ரை பண்ணது எதுவும் தப்பில்லையா

Image Courtesy

 வீட்டுச் சிறையில் :

வீட்டுச் சிறையில் :

பத்து நாட்கள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். டியூசன் முடிச்சிட்டு வர்ற வழில லாரிகாரன் இடிச்சுப்போட்டு போய்ட்டான். அப்பறம் அங்க இருக்குறவங்க காப்பாத்தி ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போனாங்க என்று எல்லாரிடமும் வாய்க்கூசாமல் பொய்யுரைத்துக் கொண்டிருந்தார்கள் குடும்பத்தினர்.

அவ்வளவு தானா? இப்படி ஒருவன் தப்பு செய்திருக்கிறான் என்று சொல்லக்கூட நாம் பயந்தால் தவறுகள் அதிகரிக்காமல் என்ன செய்யும்.

Image Courtesy

 ஆக்ஸிடண்ட்னு நம்புறியா :

ஆக்ஸிடண்ட்னு நம்புறியா :

இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, என்ன நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.... இரவு கைகளிலும் கழுத்திலும் உள்ள சிராய்ப்பிற்கு களிம்பு தடவிக் கொண்டிருந்த அம்மாவிடம் பேச ஆரம்பித்தேன்.

ம்ம்மா..... இத ஆக்ஸிடண்ட்னு நம்புறியா நீ?

பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

சொல்லும்மா

Image Courtesy

யார காப்பாத்தனும்? :

யார காப்பாத்தனும்? :

என் கலங்கிய கண்களைப் பார்த்து விட்டு எல்லாம் தெரியும். அமைதியா அப்பா சொல்றத கேளு. அப்பா உன் நல்லதுக்கு தான் எல்லாம் செய்றாரு.

இதுல என்னம்மா நல்லது இருக்கு. இப்டி பொய் சொல்லி யார காப்பாத்த போறீங்க. ஏன்ம்மா யாரும் புரிஞ்சுக்க மாட்றீங்க நீயாவது அப்பாட்ட சொல்லலாம்ல.

Image Courtesy

 எல்லாம் தெரிந்தவர்கள் :

எல்லாம் தெரிந்தவர்கள் :

இப்ப உனக்கு என்ன வேணும்?

என்னம்மா இவ்ளோ ஈஸியா கேக்குற என்னைய இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி ஜாலியா சுத்திட்டு இருக்கான் இப்டி நம்ம பண்ணது தப்புன்னு ஒரு நிமிஷம் கூட அவன யோசிக்க விடாம. அப்டியே ஆக்ஸிடண்ட்னு ப்ளேட்ட மாத்தீட்டீங்க வெளியயிருந்து சொன்னாக்கூட பராவால்ல... ஆனால் எல்லாம் தெரிஞ்சுட்டு நீங்களே இப்டி சொன்னா .... எப்டிம்மா

Image Courtesy

வெளிய சொல்லிடலாம் :

வெளிய சொல்லிடலாம் :

சரி.... என் பொண்ண ரேப் பண்ணாங்கன்னு நான் போய் சொல்றேன். நீயும் அன்னைக்கி என நடந்துச்சுன்னு விளாவரிய ஒவ்வொருதர்ட்டையா ஒவ்வொருதடவ விசாரணைக்கு கூப்டும் போதும் அதே கதைய இன்னும் நுணுக்கமா நுணுக்கமா கேப்பாங்க....

உன்ன சுத்தி இருக்குறவங்க எல்லாம் உன்னைய பரிதாபமா பாப்பாங்க இல்லன்ன கேவலமா பாப்பாங்க.

Image Courtesy

அதுக்கப்பறம் :

அதுக்கப்பறம் :

எல்லாரும்..... இது தான் அந்த ரேப் பண்ண பொண்ணாம்ன்னு போற இடத்துல எல்லாம் உன்னையவே கை காட்டுவாங்க சாப்டுற இடத்துல, படிக்கிற இடத்துல, ஷாப்பிங் பண்ற இடத்துலன்னு எல்லா இடத்துலயும் உன்னைய ஒரு விக்டிமாவே பாத்தா எப்டியிருக்கும்.

இதத்தாண்டி இது உனக்கு மட்டுமில்ல உன்னோட ஃபேமிலிக்கும் தான். இன்னும் சொல்லப்போன அது உன்னோட அடையாளமாவே மாறிப்போகும். அப்படிப்பட்ட ஒரு அடையாளம் உனக்கு வேணாம்னு நாங்க நினைக்கிறோம்.

Image Courtesy

மறந்துரு :

மறந்துரு :

இது ஒரு ஆக்ஸிடண்ட்டா நினச்சு மறக்கப்பாரு. தப்பு பண்ணிட்டோம்னு அவன் ஃபீல் பண்ணவே இல்லன்னு சொன்னியே நீ வெளிய சொன்னா மட்டும் அவன் ஃபீல் பண்ணுவான்னு நினைக்கிறியா?

அப்டியே அவன் தான் தப்பு பண்ணான்னு சொல்லி அத ப்ரூஃப் பண்ணி ஜெயில்ல தள்ளின ஆறே மாசம் தான் ஜம்முனு வெளிய வந்து உன் வீட்டு வாசல் முன்னாடி நிப்பான். ஆனா அவன் தான் குற்றவாளின்னு நிரூபிக்கிறதுல ஆரம்பிச்சு லைஃப் லாங் நீ தான் கஷ்டப்படுவ.

Image Courtesy

யாரு சப்போர்ட் :

யாரு சப்போர்ட் :

செய்யாத குற்றத்திற்கு ஏண்டா இந்த தண்டனை எனக்கு என்று அடக்க முடியாமல் அழுதேன். இப்போ வெளிய நம்மல சுத்தியிருக்குற யாருக்குமே இந்த விஷயம் தெரியாது. அப்டி வெளிய தெரிஞ்சா எத்தன பேரு உனக்கு சப்போர்ட் பண்ணுவாங்கன்னு நினைக்கிற....

எல்லாரும் சப்போர்ட் பண்ணுவாங்க நான் தான் எந்த தப்புமே பண்ணலயே..... இதுல என் தப்பு என்ன இருக்கு.

கிடையவே கிடையாது. இந்த விஷயத்த பொறுத்தவரைக்கும், பாதிக்கப்படுறதும் நீ தான், ப்ளேம் பண்றதும் உன்னத்தான். இருட்டுனதுக்கு அப்பறம் ஏன் தனியா வெளிய போணும், அன்னக்கி ஏன் அந்த கலர்ல டிரஸ் போட்டுட்டு போனா, இவ தான் வர சொல்லிருப்பா, வளத்த விதம் சரியில்ல, பொண்ணு கேரக்ட்ர கொஞ்சம் மோசமாம்ப்பான்னு இஷ்டத்துக்கு பேசுவாங்க

Image Courtesy

இப்போ சொல்லு :

இப்போ சொல்லு :

இதையெல்லாம் நீ கேட்டுட்டு எப்டி எடுத்துப்பன்னு தெரியல.ஆனா எங்களால தாங்க முடியாது. இவ்ளோ பிரச்சனைய ஃபேஸ் பண்றதுக்கு என் பொண்ணுக்கு ஆக்ஸிடண்ட்னு சொல்லிட்டு போய்டலாம்ல. இப்போ சொல்லு அப்பா பண்ணது சரி தான.

அம்மா முடிக்கும் போது எனக்கு வார்த்தைகள் எழவில்லை. சரி என்று சொல்வதா இல்லை என்பதா தெரியவில்லை....

வேற வழி :

வேற வழி :

அவ்ளோ தானா..... வேற வழியே இல்லையாம்மா இவ்ளோ ஈஸியா ஒரு பொண்ண ரேப் பண்ணிட்டு இப்டி ஒரு விஷயம் நடந்துருக்குன்னு கூட வெளிய தெரியாம மூடி மறச்சிடலாமா?

மௌனம்.

இத மாத்தவே முடியாதாம்மா....

பிப்ரவரி 14 :

பிப்ரவரி 14 :

தெரில.... உன்கிட்ட என்ன சொல்லி எப்டி புரியவைக்கன்னு தெரில நீ மட்டுமோ இல்ல நாலஞ்சு பேரு நினச்சா மட்டும் இங்க ஒண்ணும் கிழிக்க முடியாது. ஒவ்வொருதரும் யோசிக்கணும் பிரச்சனை நடந்து முடிஞ்சதுக்கு அப்றம் இதுக்கு நீ தான் காரணம்னு அலசி ஆராயாம முன்னாடியே இந்த பிரச்சன எழாம பாத்துக்குறது தான் ஒரே வழி.

அந்த வேலையப் பாருங்கடான்னா கலாச்சாரத்த காப்பாத்துறேன்னு பிப்ரவரி 14 மட்டும் முழிச்சிட்டு கிடப்பானுக. ஏன் அன்னக்கி மட்டும் தான் ஊர்ல ரேப் நடக்குதா?

ஒவ்வொரு பொண்ணும் :

ஒவ்வொரு பொண்ணும் :

உலகம் போற வேகத்துக்கு ஈடு கொடுக்கவும் முடியாம, பசங்கள பாதுகாக்கவும் முடியாம இந்த தலைமுறைள வாழ்ற அம்மா அப்பாதான் ரொம்ப தவிச்சிட்டு இருக்காங்க.... இந்த தலவலியும் வயித்து வலியும் தனக்கு வந்தா தான் தெரியும்னு சொல்ற மாதிரி அவனவன் வீட்டுல இப்டி எதாவது ஒரு பிரச்சனை நடந்த பிறகு தான் கண்ணத் தொறந்து பாப்பாங்க போல....

இதுக்கும் பலிகடா பொண்ணுங்க தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life, women, my story
English summary

Terrible Rape Survivor Case Story

Terrible Rape Survivor Case Story
Story first published: Thursday, February 15, 2018, 16:30 [IST]
Subscribe Newsletter