For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  # Talk About It: கற்பழிப்பு நகைச்சுவை அல்ல மிஸ்கின், விளம்பரத்திற்காக எதுவும் பேசலாமா?

  |

  சமீபத்தில் இயக்குனர் ராமின் நான்காவது திரைப்படமான பேரன்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் பல முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

  விழாவுக்கு வந்து பேசிய அனைவரும் இயக்குனர் ராம், நடிகர் மம்மூட்டி, குழந்தை நட்சத்திரம் சாதனா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போன்றவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.

  Talk About It: Rape is Not a Joke Director Mysskin!

  இந்த திரைப்படம் ஏற்கனவே உலக அரங்கில் நல்ல மதிப்பும் பெயரும் பெற்றுவிட்டது என்பது பலரும் அறிந்ததே. கூடிய விரைவில் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ராமின் நண்பர் என்ற பெயரில் பங்கெடுத்துக் கொண்டார் மிஸ்கின்.

  படத்தையும், பணியாற்றிய கலைஞர்களையும் பாராட்டி தள்ளிய இயக்குனர் மிஸ்கின், நகைச்சுவை என்ற பெயரில் சற்றே எல்லை மீறி பேசினார். அது சமூக வலைத் தளங்களில் பெரும் கண்டனத்திற்கு உண்டானது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சர்ச்சைக்குரிய வார்த்தைகள்!

  சர்ச்சைக்குரிய வார்த்தைகள்!

  படத்தையும், நடிகர்களையும் புகழ்ந்து பேசி வந்த இயக்குனர் மிஸ்கின் அவர்கள், நடிகர் மம்மூட்டி பற்றி புகழந்து பேசிய பொழுது, நீங்கள் கொஞ்சம் வயதில் இளையவராக இருந்திருந்தால் நான் உங்களை காதலித்திருப்பேன். இதுவே, நான் பெண்ணாக பிறந்திருந்தால், உங்களை கற்பழித்திருப்பேன் என்று பேசினார். இந்த வார்த்தைகள் தான் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகுந்த கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

  விளம்பரம்!

  விளம்பரம்!

  அதே விழா மேடையில், இயக்குனர் மிஸ்கின் அவர்கள், இந்த படம் நல்ல வெற்றிபெற வேண்டும், இது இயக்குனர் ராமிற்கு நல்ல பணம் பெற்று தரும் படமாகவும் அமைய வேண்டும். அதற்காக இப்படி ஏதாவது சர்ச்சையாக பேசினால் தான் விளம்பரம் தேடிக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டு கூறி இருந்தார். சர்ச்சை ஏற்படுத்த வேண்டும், படத்திற்கு விளம்பரம் தேடிக் கொடுக்க வேண்டும் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாமா? கற்பழிப்பு என்பது என்ன கேலிக்கூத்தாகி விட்டதா என்ன?

  வலி!

  வலி!

  இயக்குனர் மிஸ்கின் பேசிய வார்த்தைகளானது, ஒரு ஆடவன் அழகாக இருந்தால், அவன் திறமையானவனாக இருந்தால் பெண் கற்பழித்துவிடுவாள் (அ) கற்பழிக்கலாம் (அ) கற்பழிக்க முயலலாம் என்று குறிப்பது போன்ற பொருள் கொண்டிருந்தது. ஒரு பெண் கற்பழிக்கும் படும் போதும், அதன் பிறகு இந்த சமூகத்தில் வாழும் ஒவ்வொரு நாளும் எத்தகைய வலியை எதிர்கொள்கிறாள் என்பதை அறியாதவரா மிஸ்கின். உலக அறிஞர்களின் புத்தகங்களும், தத்துவங்களும் மற்றும் படித்து தீர்த்தால் போதுமானதா? பொதுவெளி மேடையில் எந்த வார்த்தையை, எப்படி பிரயோகப்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிட்டார மிஸ்கின்.

  கைக்கொட்டி சிரிப்பு!

  கைக்கொட்டி சிரிப்பு!

  இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை ஹெல்மட் அணிந்து சென்றாவது பார்த்துவிட வேண்டும் என்று ஹவுஸ் புல்லாக்கியவர்கள் அல்லவா நாம். ஆகையால் தான் மிஸ்கின் அவ்வாறு பேசிய போது, முகம்சுளிக்க வேண்டிய இடத்தில் பலரும் கைத்தட்டி, வாயார சிரித்தனர். உணவில் கலவை வந்தவன ஆரோக்கியம் சீர்கெட்டு போனது. கலாச்சாரத்தில் கலவை வந்தது மானம் கெட்டுப் போனது. இது உண்மை, இதை யாராலும் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது.

  ஏன்?

  ஏன்?

  இதெல்லாம் ஒரு விஷயமா? எத்தனையோ பேர், என்னென்னமோ பண்றாங்க... மிஸ்கின் சொன்னது வெறும் ஜோக் தானே.. என்று சிலர் கூறலாம். பிறர் வாழ்வில் நடப்பது எல்லாம் நம் காதுகளை வந்தடையும் வெறும் செய்தி தான். நம் வாழ்வில் நடக்கும் போது தான் அது வலியாக மாறுகிறது.

  கற்பழிப்பு சார்ந்த ஜோக்குகள் ஏராளம் உள்ளன. ஆனால், சமூகத்தில் ஒரு அந்தஸ்தில் இருக்கும் நபர், ஒரு பெரும் கூட்டத்தை தன் பேச்சு சென்றைடையும் என்று நன்கறிந்த ஒரு கலைஞன் இவ்வாறு பேசுவது தான் பெரும் தவறு.

  அந்த கலைஞனுக்கும் அவமானம்!

  அந்த கலைஞனுக்கும் அவமானம்!

  மிஸ்கின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது கற்பழிப்புக்கு ஆளான பெண்களுக்கு மட்டுமல்ல, ஒரு மகா கலைஞனுக்கும் உண்டான அவமானம் என்ற கருத்துக்கள் சமூக தளங்களில் பதிவாகி வருகின்றன.

  3 முறை தேசிய விருதுகள், 13 முறை பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஏராளமான விருதுகள் வென்ற ஒரு பெரும் கலைஞன் மம்மூட்டி. அவரை பாராட்ட, புகழந்து பேச வேறு வார்த்தைகளே மிஸ்கின் அவர்களுக்கு கிடைக்கவில்லையா? படத்திற்கு விளம்பரம் தேட வேண்டும் என்றால்.. வேறு எத்தனையோ வழிகள் இருக்கிறது.

  மேலும், பேரன்பு போன்ற உன்னதமான படைப்புக்கு இப்படி கீழ்த்தரமான விளம்பரம் தேவையே இல்லை என்பதை ஏனோ மிஸ்கின் யோசிக்காமல் போய்விட்டார்.

  அதுவும் நம் நாட்டில்?

  அதுவும் நம் நாட்டில்?

  இன்று தினந்தோறும் காலை எழுந்து செய்தி பார்த்தால்... ஏதோ ராசிபலன் போல தினமும் கற்பழிப்பு செய்திகளாக நிரம்பி வழியும் தற்சமயத்தில் இப்படி கற்பழிப்பு சார்ந்த மோசமான ஜோக் தேவை தானா? காவல் நிலையத்தை வந்தடையும் கற்பழிப்பு குற்றங்கள் மிகவும் சொற்பமான எண்ணிக்கை தான். மானம், மரியாதை, எதிர்காலம் என்று பலவற்றுக்கு கட்டுப்பட்டு வாழ்நாள் முழுக்க வேதனையில் புழுங்கி சாகும் பெண் உயிர்கள் நம் நாட்டில் பல ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

  பேசுங்கள்!

  பேசுங்கள்!

  நம் முன்னாள் யார் பேசுகிறார் என்பதை கவனிப்பதை தவிர்த்து, அவர் என்ன பேசுகிறார் என்று முதலில் கவனியுங்கள். போது மேடை, பல கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பொத்தாம்பொதுவாக கைக்கொட்டி சிரித்து மகிழ்ந்து எழுந்து வந்து விடுகிறோம். அவர் பேசியது தவறு என அந்த அரங்கில் இருந்த ஒருவருக்கு கூடவா தெரியாது?

  சரி! அவர் பெரிய இயக்குனர்... அவர் பேசினால் எல்லாம் சரியாக தான் இருக்கும் என்றும் ஏற்றுக் கொள்ளும் கூட்டமும் இருக்கிறது. எத்தனை பெரிய அறிஞனாக இருப்பினும் குற்றம் குற்றமே!

  வாய் திறந்து பேசுங்கள்... நேரில் இல்லா விட்டாலும் உங்களால் முடிந்த இடங்களில் பேசுங்கள், பதிவிடுங்கள்... இது பாதிக்கப்பட்டவர்களுக்கு.. அந்த வார்த்தை கேட்டு புண்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும், இது போன்ற பேச்சுக்கள் நகைச்சுவைக்காக கூட இனிமேல் பொதுவெளியில் பேசக் கூடாது என்பதை பிறருக்கு கற்பிக்கும் பாடமாகவும் அமையும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Talk About It: Rape is Not a Joke Director Mysskin!

  In Peranbu Audio Launch, Director Ram's Close Friend and Another Prominent Director of Tamil Cinema Mr Mysskin made a bad joke on Rape just for his friend's movie Promotion. Rape is not at all a Joke Director Mysskin. Please dont use this word for joke anymore in future.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more