Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
12 வருடங்கள் போராடி, கோமாவில் இருந்த மகனை மீட்ட 75 வயது தாய்! #SuperMother #WonderWoman
12 வருடங்கள் போராடி, கோமாவில் இருந்த மகனை மீட்ட 75 வயது தாய்! #SuperMother #WonderWoman
தாயை சிறந்ததொரு கோவிலும் இல்லை என யாரும் வெறுமென பாடி வைக்கவில்லை. கட்டிய மனைவியோ, பெற்ற மகளோ கூட செய்ய மறுக்கும் விஷயங்களையும் முகம் சுளிக்காமல் செய்வாள் தாய். அதனால் தான் பெண்மையின் அடையாளம் தாய்மை என்று புகழ்கிறார்கள்.

Image Source: Beijing News / Google
அதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக மண்மேலே உயிருடன் திகழ்ந்து கொண்டிருக்கிறார் 75 வயது நிரம்பிய தாய். கடந்த 12 வருடங்களாக கோமாவில் இருந்த தன் மகனை இரவு, பகல் பாராமல் பராமரித்து வந்து, சேவகம் செய்து இன்று கண்விழிக்க வைத்திருக்கிறார்.
இவர் தான் உண்மையான Wonder Woman....

கார் விபத்து!
12 ஆண்டுகளுக்கு முன்.... கோரமான கார் விபத்தில் சிக்கி ஒரு ஆண் கோமாவில் வீழ்ந்தார். அவர் கோமாவில் வீழ்ந்தாலும், அவரது தாய் தன் நம்பிக்கையில் வீழவில்லை. என்றேனும் ஒரு நாள் தன் மகன் கண்விழிப்பான் என்று இரவு, பகல் பாராமல் தொடர்ந்து கண்காணித்து, பாதுகாத்து வந்தார்.

வாங் ஷுபோ!
கார் விபத்தில் சிக்கி கோமாவில் விழுந்த அந்நபரின் பெயர் வாங் ஷுபோ. ஏறத்தாழ ஒரு தசாப்தத்தை கடந்து கண்விழித்த போது, வாங் ஷுபோ கண்ட முதல் காட்சி. தன் வயதான தாய் முகத்தில் கண்ணீர் வழிய ஆச்சரியத்துடன் இருந்ததை தான்.

மொத்த சேமிப்பு!
வெய் மிங்க்யிங் (75) எனும் அந்த தாய், தன் மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று, தன் வாழ்நாளில் சேமித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் செலவு செய்தார். அதுமட்டுமின்றி, 23,000 டாலர்களுக்கு மேல் கடனாளியானார்.

பட்டினி!
ஒரு கட்டத்தில் மகனின் மருத்துவத்திற்கு பணம் வேண்டும் என்பதால், தான் உண்பதை நிறுத்திக் கொண்டு, மகனுக்காக உழைத்து வந்திருக்கிறார். செய்தியாளர்களிடம் இதுக்குறித்து கூறிய போது, "ஒரு கட்டத்தில் கையில் சுத்தமாக பணம் இல்லை. இருப்பதை வைத்து மகனுக்கு மருத்துவ செலவு செய்து வந்தேன். ஆகையால், ஒரு மாத காலம் உணவு எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தேன். அந்த காலக்கட்டத்தில் நான் மிகவும் உடல் இளைத்து வெறும் 28 கிலோ உடல் எடைக்கு ஆளானேன்" என்று கூறி இருந்தார்.

36 வயதினிலே...
தன் மகன் கார் விபத்தில் சிக்கிய போது மகனின் 36. சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தின் ஷூக்உவாங் எனும் இடத்தில் 2006ம் ஆண்டு அந்த கார் விபத்து நடந்தது என்று வெய் கூறி இருக்கிறார். வாங் குழந்தையாக இருந்த காலத்திலேயே தன் கணவர் இறந்துவிட்டார். சிறு வயதில் இருந்தே, நான் தான் தனியாளாக அவனை வளர்த்து வந்தேன் என்று வெய் பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.

அதிகாலை 5 மணி!
தினமும் அதிகாலை 5 மணி அளவில் எழுந்து, முகம் கழுவிய பிறகு, மகனை குளிப்பாட்டி, சோறூட்டி, மசாஜ் செய்து விடுவேன். மசாஜ் செய்யாமல் விட்டுவிட்டால் அவன் உடல் முழுக்க புண் வந்துவிடும். நான் பட்டினியாக இருந்த காலக்கட்டத்தில் வாய் வறண்டு, நாக்கு வறட்சியான நிலையம் உண்டு. வெறுமென நீர் மட்டுமே அருந்திக் கொண்டு அந்த காலத்தில் வாழ்ந்து அவந்தேன் என்று வெய் கூறிய போது, செய்தியாளர்கள் மனமே உடைந்துப் போனது.

சிறு புன்னகை!
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஒருமுறை தன் மகனின் முகத்தில் சிறிய புன்னகை தென்பட்டது. அப்போது தான் அவன் கோமாவில் இருந்து குணமாகி வந்துவிடுவான் என்ற என் நம்பிக்கை அதிகரிக்க துவங்கியது. இப்போது கோமாவில் இருந்து திரும்பி விட்டாலும், தன் மகனால் எழுந்திருக்கவோ, பேசவோ முடியவில்லை. வாங் இப்போது தன் தாயின் பேச்சு மற்றும் சிரிப்பை மட்டும் கேட்ட படி, அவரது அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

மகிழ்ச்சி!
இத்தனை கோமாவில் இருந்த மகன், நினைவு திரும்பி இருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. நிச்சயம், என் மகன் பூரண குணமடைய நான் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வேன். நான் ஒருபோதும் இந்த முயற்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன். ஒரு நாள் நிச்சயம் என் மகன் மறுபடியும் என்னை அம்மா என்று அழைப்பான். அதற்காக தான் காத்திருக்கிறேன் என்று வெய் கூறிய போது, கேட்டவர் கண்களில் எல்லாம் கண்ணீர் தேங்கி நின்றது.
இந்த அற்புதமான தாயின் தன்னம்பிக்கைக்கு பலனாக நிச்சயம் ஒரு நாள் அவர் மகன் பூரண குணமடைந்து, அவரை அம்மா என்று வாய் நிறைய அழைப்பார்.



Click it and Unblock the Notifications