தினமொரு விலைமகனுடன் முதலிரவில் இணையும் இரவுகளின் தேவதை நான் - Her Story!

Written By:
Subscribe to Boldsky

இரவின் முழு அமைதியை விழித்திருந்து நீங்கள் என்றாவது அனுபவித்ததுண்டா? அதிகாலை விடியும் வரை கருமையான இருளில் நீங்கள் என்றாவது உழைத்து சம்பாதித்ததுண்டா? உங்கள் கண்கள் உறக்கத்திற்காக ஏங்கி தவித்து மன்றாடும் நிலையில் கனவுகளை வேண்டி உள்ளீர்களா? சரி! அமைதியான, நிம்மதியான உறக்கம் கிடைத்தமைக்காக என்றாவது கடவுளுக்கு நீங்கள் நன்றி கூறியுள்ளீர்களா?

இந்த அனைத்தும் உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? குறைந்தபட்சம் ஏதேனும் ஒன்றாவது?

பெரிய சந்தோஷங்கள் எல்லாம் சின்ன, சின்ன விஷயங்களில் தான் புதையுண்டு கிடைக்கின்றன. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த பெரிய சந்தோஷங்கள் தன் வாழ்வில் கண்டிராத யாரேனும் ஒருவரின் புலம்பலை கேட்கும் போதுதான் அட, ஆண்டவா... பரவாயில்ல நீ என்ன நல்லா தான் வெச்சிருக்க என்று கையெடுத்து கும்பிடுவோம்.

நமது உலக்கதிற்குள் ஒரு உலகம் இருக்கிறது. உண்மையில் பல உலகம் இருக்கிறது. அனைவரிடமும் அவருக்கென சொந்த உலகம் ஒன்று இருக்கிறது. அது தான் மனம்! அந்த மனதிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்த்தால் அது குறைந்த அளவிலான நிம்மதியே தரும். அதுவே, குறைந்த எதிர்பார்ப்புகளுடன் அதை நெருங்கினால், அது வாழ்நாள் முழுக்க குறையா நிம்மதியும், மகிழ்ச்சியும் கொடுத்து உதவும்.

உங்களுக்கு இன்னும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிய வாய்ப்புகள் மிகவும் குறைவே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இருள் என்றால் பயமா?

இருள் என்றால் பயமா?

மக்கள் இருள் என்றால் பயப்படுவார்கள் என்பதே எனக்கு நீண்ட நாட்கள் கழித்து தான் தெரியும். ஒவ்வொரு நாளும் பகலில் தான் அவர்கள் வேலை செய்கிறார்கள், இரவில் உறங்குகிறார்கள் என்பதையே நான் அறியாமல் இருந்தேன்.

குப்பை கண்களால் நாங்கள் கவர்ச்சி பொருளாக காணப்படுகிறோம். கவர்ச்சிக்கு ஏற்ற அதிக விலைக்கு பேரம் போகும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆறு வயது இருக்கும்!

ஆறு வயது இருக்கும்!

அப்போது எனக்கு ஆறு வயது இருக்கும். நான் எதுவும் அறியாத சிறுமியாக இருந்தேன். அம்மாவை கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும், அவள் அருகே படுத்து உறங்க வேண்டும், அவள் கைகளை பற்றிக் கொண்டும், என் கைகளால் அவளது வயிறைக் கட்டிபிடித்து படுத்துக் கொள்ள வேண்டும். அம்மா என்னருகே இருந்தால் நான் பாதுகாப்பாக உணர்ந்வேன். அவள் தான் பாதுகாப்பு வளையம்!

ஆனால், வறுமை என்னை அந்த பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியே தூக்கி வீசியது!

குடிகார தந்தை!

குடிகார தந்தை!

என் அப்பா ஒரு குடிகாரர். அவர் எதுக்காக குடிக்க ஆரம்பித்தார் என்று எனக்கு தெரியாது. ஏழு வயது இருக்கும் போது அவர் என்னை ஒரு பெண்ணிடம் விற்றார். அவரது வறுமைக்காகவா, நான் நல்ல மகளாக இருக்கவில்லையா? அவர் என்னை விரும்பாமல் போனதாலா? அல்லது அவரது அன்புக்கு நான் உரியவளாக இருக்க வில்லையா? இல்லை, இது என் தலைவிதியா என்று எனக்கு தெரியாது.

சரியான காரணம் இல்லை...

சரியான காரணம் இல்லை...

அவர் என்னை விற்றதற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கட்டும். ஆனால், அது இன்று நான் யார் என்றே தெரியாத நபர்களுடன் இரவை கழிப்பதற்கு ஏற்ற, ஏதுவான காரணம் கிடையாது என்பதை மட்டும் நான் நன்கு அறிவேன்.

ஒவ்வொரு இரவிலும், ஒவ்வொரு வடிவில், நிறத்தில், அளவில் யாரேனும் ஒருவன் வருவான். அவனது உடலை தவிர, அவனை குறித்து எதுவும் எனக்கு தெரியாது.

வருபவர் அனைவரும் என் கண்களை தவிர மற்ற எல்லா இடங்களையும் பார்ப்பார்கள். ஒருவர் கூட என் கண்ணை நேரடியாக நிதானத்தில் பார்த்ததே இல்லை.

சூரிய அஸ்தமனத்தின் போது...

சூரிய அஸ்தமனத்தின் போது...

எனக்கு ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும், அப்பா, அம்மாவை காப்பாற்ற வேண்டும், பெரிய அப்பார்ட்மெண்ட் வாங்க வேண்டும் என எந்த கனவும் இல்லை. ஒரே ஒரு கனவு தான். சூரியன் அஸ்தமனம் ஆகும்போது உறங்கி, அவன் உதயத்தின் போது கண்விழிக்க வேண்டும்.

இதெல்லாம் ஒரு கனவா என்று நீங்கள் கருதலாம். ஆனால், எனக்கு இது கனவு மட்டுமல்ல... இப்படி ஓர் சூழல் எனக்கு அமைந்துவிட்டால் அதை வரம் என்று கூறுவேன்.

ஆனால், ஒரு இரவில் கூட இந்த கனவு நிஜமானதே இல்லை. என்னை சுற்றி உருளும் கைகள் மாறுகின்றனவே தவிர, என கனவு மட்டும் தனியாக மாறாமல் அப்படியே இருக்கிறது.

எல்லாரும் இப்படிதானே...

எல்லாரும் இப்படிதானே...

எனக்கு அப்போது பத்து வயது இருக்கும். என்னை போலவே அனைவரும் அப்படி தான் இருப்பார்கள் என்று நான் எண்ணி வந்தேன். ஒருநாள், எனக்கான இடமாற்றம் அடைந்த போது தான். சிறையில் இருந்து கொஞ்சம் வெளியுலகை காணும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

அப்போது தான், என் வயதொத்த சிறுமிகள் ஓடிப்பிடித்து விளையாடுவதையும், ஊஞ்சலாடி மகிழ்வதையும் கண்டேன். அதே சமயத்தில் தான், ஒருசில சிறுமிகள் ஏதோ பையை தங்கள் தோள்களில் மாட்டி செல்வதையும் கண்டேன்.

என்னுடன் ஒன்றாக இருந்த பத்மாவிடம், அது என்ன பை, அது ஏன் நம்மிடம் இல்லை என்று வினவினேன்.

"நாம அவங்கள மாதிரி இல்ல... அவங்க எல்லாம் இராத்திரி தூங்குறவங்க..." என்று கூறினாள். பத்மா என்னைவிட ஆறு வயது மூத்தவள். எனக்கு எப்படி பதில் கூற வேண்டும் என்ற பக்குவம் அவளுக்கு இருந்தது. என்னை காட்டிலும் அதிக வலிகளை அவள் ஏற்கனவே அனுபவித்திருந்தாள்.

வெறுத்தேன்!

வெறுத்தேன்!

அப்போதிருந்த அந்த இரவுகளை நான் வெறுக்க துவங்கினேன். அனைவருக்கும் ஒரே மாதிரி இல்லாமல், அந்த இரவு பாரபட்சத்துடன் நடந்துக் கொள்வது எனக்கு பிடிக்கவில்லை. அதுவரை நிலா வெளிச்சம் அளிக்கிறது, அது அழகானது என்று எண்ணினேன். ஆனால், அது எனது அழகை, கவர்ச்சியை கூறுப்போட்டு விற்கும் கருவி என்பதை அன்றிலிருந்து தான் நான் அறிந்துக் கொண்டேன்.

எட்டு வருடங்கள்...

எட்டு வருடங்கள்...

அன்றில் இருந்து, எட்டு வருடங்களுடன் பலவித உருவத்தில், நிறத்தில், பல வயதிலான எண்ணற்ற ஆண்களும் என் வாழ்க்கையில் உருண்டோடி கடந்தனர். சில சமயம் சிறுவர்களை எல்லாம் நான் கண்டுள்ளேன்... அவர்களுக்கு என்ன தேவை என்று இங்கே வருகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும்.

சில ஆண்கள் என்னிடம் வரும்போதும் திருமண மோதிரத்துடன் வருவார்கள். அவர்களுக்கு கூச்சமாக இருக்கிறதா? எப்படி துரோகம் செய்கிறார்கள். பெண்ணுக்கு, பெண் வேறுபாடும் அளவிற்கு நான் ஒன்றும் அவர்களுக்கு காதலை அளித்திட போவதில்லை. எல்லாரிடமும் ஒரே மாதிரியான உறுப்பு தான் இருக்கிறது என்று வியப்பேன்.

காதல் என்றால் என்ன?

காதல் என்றால் என்ன?

உண்மையில் காதல் என்றால் என்ன? எதை இவர்கள் விரும்புகிறார்கள். இரண்டு மாறும், ஒரு பிறப்புறுப்பும் தான் காதலா?

இவர்கள் வீட்டில் என்ன காரணம் கூறி இங்கே வருகிறார்கள். நேரதாமதமாக வீட்டுக்கு செல்லும் போது என்ன காரணாம் கூறுவார்கள்? என பல கேள்விகள் என்னுள் எழுவதுண்டு. அதற்கான பதில் என்னவென்று அறியாத போதிலும், கேள்விகள் மட்டும் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஒருவன்!

ஒருவன்!

என் வாழ்விலும் ஒரு உண்மையான காதலை கண்டேன். ஆனால், அது எனக்கானது அல்ல. வேறொரு ஆண், அவன் மனைவி மீது வைத்திருந்த காதல். அவனை ஒருசில மாதங்களுக்கு முன் தான் எனக்கு தெரியும்.

என்னிடம் வரும் நபர்களுக்கு அதிகமாக கைநடுக்கும் வருவது இயல்பு. ஆனால், அவனது நடுக்கும் வேறு மாதிரியாக இருந்தது.

ஓடிவிட்டான்!

ஓடிவிட்டான்!

திடீரென அழத்துவங்கினான். என்னிடம் மன்னிப்பு கேட்டான். அவனது பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்து, என்னை மன்னித்துவிடு... நாம் அப்படி சண்டையிட்டிருக்க கூடாது. இனிமேல், நான் உன்னை திட்ட மாட்டேன் என்று அவளிடமும் அழுதான். உடனே, என்னிடம் மீண்டும் கையெடுத்து மனிப்புக் கேட்டு, என் கண்களை காணமல், கதவை திறந்து ஓடிவிட்டான்.

இது தான் காதலா?

இது தான் காதலா?

ஏதோ ஒரு பிரச்சனை.. யார் கூறி என்னிடம் வந்தான் என்று தெரியாது. ஆனால், தவறு என்று அறிந்து, துரோகம் செய்யக் கூடாது என்பதை உணர்ந்து அவன் மீண்டும் தனது மனைவியை தேடி ஓடிவிட்டான். இதுதான் காதலா என்று எனக்கு தெரியாது.

என்னுடன் இருக்கும் பெண்கள் சிலர் என் மீது அன்பு செலுத்துவார்கள். ஆனால், ஆணிடம் இருந்து கிடைக்கும் காதலானது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. நான் அதை கண்டதே இல்லை. ஒருவேளை இவன் அன்று காட்டியது தான் ஒரு ஆணிடம் இருந்து பெண்ணுக்கு கிடைக்கும் காதலா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

அழகான நிலா...!

அழகான நிலா...!

அன்று ஒரு தினம் மட்டும் நிலா என் கண்களுக்கு அழகாக தெரிந்தது. அவன் ஒருவன் மட்டும் எனக்கு விசித்திரமாக தென்பட்டான். ஒருவேளை முதல் முறையாக ஒரு ஆணின் உடலை காணமல், அவனது மனதை கண்டதால் அப்படி ஒரு உணர்வா என்று தெரியவில்லை.

அன்றைய இரவில் நான் உணர்ந்த அமைதியானது வித்தியாசமாக இருந்தது. அன்று இரவு நான் உறங்கினேன். என்னுள் புதியதாக பல உணர்வுகள் ஊற்றெடுத்தன.

ஒரே ஒரு வேண்டுகோள்...!

ஒரே ஒரு வேண்டுகோள்...!

எனக்கு கடவுளிடம் இருப்பது எல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள் தான். எனக்கு அப்படி ஒரு ஆணை கொடு. என் கண்களை பார்க்கும் ஆடவன் ஒருவன் துணையை எனக்கு வேண்டும்.

எனது வேண்டுகோள் உனக்கு பெரியதாக தெரிகிறதா? ஒருவேளை நான் உன்னதமான காதலுக்கு தகுதியற்றவள் என்பதும் உண்மை தான். ஆனாலும், இங்கே அனைத்தும் தகுதியானவர்களுக்கு தான் கிடைக்கிறதா? தேவை என்பவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கிறது. எனக்கான தேவை ஒரு ஆண் மகனிடம் இருந்து கண்களை கண்டு வரும் காதல்.

என் வலிகளும் பெரியது!

என் வலிகளும் பெரியது!

ஒருவேளை கடவள் இருக்கிறான் என்றால், அவன் நான் வேண்டுவதை கேட்பான் என்றால்.. இதை நன்கு காது கொடுத்து கேட்கட்டும். எனது வேண்டுகோள் பெரியதாக தெரிந்தால்... கடவுளே.. நீயும் இன்னொன்றையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். நான் கடந்து வந்த வலிகளும் மிக பெரியவை தான்.

- டயானா அல்பர்ட் என்ற மருத்துவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

I Was Locked Up in a Building for Long Years. And I Do Not Know That I Am A Prostitute!

I Was Locked Up in a Building for Long Years. And I Do Not Know That I Am A Prostitute!
Story first published: Friday, February 9, 2018, 15:29 [IST]
Subscribe Newsletter