For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடித்து, கூத்தடிக்கும் பப் கழிவறையில் இந்து கடவுள்களின் படங்கள் வரைந்து அத்துமீறல்!

|
Shocking! In One of US Night Club That Used Hindu Gods Portraits in its Washroom!

Image Source: Ankita Mishra

வெளிநாடுகள் என்று மட்டுமின்றி நீங்கள் இந்தியாவிலேயே தனித்துவமான அலங்காரம், தீம் பேஸ்டு பப்கள், நைட் அவுட் பார்ட்டி கிளப்கள் காணலாம்.

ஒவ்வொரு கிளப்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்தன்மை வாய்ந்த அனுபவத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக அலங்கார வேலைகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பெங்களூரு, மும்பை போன்ற நகர்களில் இப்படியான தீம் பேஸ்டு பப்கள், பார்டி கிளப்கள் நீங்கள் காண இயலும்.

அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்த இந்திய பாரம்பரியத்தை சேர்ந்த அங்கிதா எனும் இளம்பெண் ஒருவர், சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் ஒரு நைட் கிளப் கழிவறையில் இந்து மத கடவுள்களின் படங்களை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 

ஆனால், அங்கிதா அந்த அதிர்ச்சியை மனதிற்குள் மட்டும் வைத்துக் கொள்ளாமல், அதை சரியான முறையில் எடுத்து சென்று தீர்வு கண்டிருக்கிறார்... இந்த சம்பவம் குறித்து அங்கிதா கூறிய முழு விபரம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அங்கிதா!

அங்கிதா!

என் பெயர் அங்கிதா மிஸ்ரா. நான் ஓஹயோ மாகணத்தில் பிறந்து, நியூ ஜெர்ஸியில் வளர்ந்தவள். நான் ஒரு ஆர்டிஸ்ட். ஆயினும், எனது அன்றாட செலவுகள் மற்றும் பணத் தேவைக்காக பார்களில் மதுபானம் பரிமாறும் பகுதி நேர வேலையை செய்து வருகிறேன்.

அமெரிக்கவாழ் இந்தியர்!

அமெரிக்கவாழ் இந்தியர்!

என் பெற்றோர் 70களில் படிப்பதற்காக அமெரிக்க வந்தவர்கள். நான் இந்த பார்ட் டைம் ஜாப் பார்ப்பதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை தான். ஏன் என்றால் அவர்கள் எனக்கு நிறைய கற்பித்துள்ளனர். பிஹாரி, இந்து மத பின்னணி, இயற்பியல், உலக மதங்கள், சமையல், கலை என்று நிறைய கற்றுள்ளேன்.

அனைத்திற்கும் மேலாக, என் பெற்றோர் எந்த இடமாக இருந்தாலும், என்ன சூழலாக இருந்தாலும் வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்காமல், வாய் திறந்து பேச கற்பித்துள்ளனர்.

அக்டோபர் மாதம்!

அக்டோபர் மாதம்!

கடந்த மாதம் என் தோழர், தோழிகளுடன் நைட் அவுட் சென்றிருந்தேன். ஆனால், அந்த இடத்தில் என்னால் என் உணர்ச்சிகளை அடிக்கி வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அங்கே, அலங்காரம் செய்யப்பட்டிருந்த வி.ஐ.பி கழிவறையில் இந்து மத கடவுள்களின் புகைப்படங்கள், ஓவியங்கள் இருந்தன. விநாயகர், சரஸ்வதி, காளி மற்றும் சிவன் போன்றவர்களின் படங்கள் அங்கே இடம் பெற்றிருந்தன.

Image Source: Ankita Mishra

பாதிப்பு!

பாதிப்பு!

இது என்னை மனதளவில் பாதித்தது. என்ன தான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், நான் பிறந்த நாடு மற்றும் மதத்தின் மீதான உரிமை, பெருமை எனக்கு இருக்கிறது. சிலர் இதன் விளைவுகள் அறியாமல் செய்திருக்கலாம்.

ஆனால், அவர்களுக்கு இதன் விளைவுகள் என்ன என்பதை நான் புகட்டியே ஆக வேண்டும். என் மொபைலை எடுத்து, அந்த நைட் அவுட் கிளப் அதிகாரியின் மின்னஞ்சலுக்கு ஈ-மெயில் அனுப்பினேன்.

ஈ-மெயில்

ஈ-மெயில்

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துக் கொள்ளுங்கள்,

அக்டோபர் 3, 2018 (மெயில் அனுப்பிய தேதி)

ஹவுஸ் ஆப் எஸ் (அங்கிதா சென்ற நைட் அவுட் கிளப் பெயர்) வந்து சென்ற என் அனுபவத்தை பற்றி உங்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கிராம் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறேன். ஆனால், உங்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கிளப்!

கிளப்!

நான் ப்ரூக்லினில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவாதால் என் பகுதி நேர வேலை முடிந்த பிறகு, நேரம் கிடைக்கும் போது ஹவுஸ் ஆப் எஸ்'க்கு வந்து சென்றிருக்கிறேன். எனக்கு இங்கே நிறைய அழகான தருணங்கள் அமைந்திருக்கின்றன.

என் நண்பர்களுடன் நிறைய பொழுதுகள் இங்கே கழிந்துள்ளன. நடனமாடி மகிழ்ந்திருக்கிறேன். ஹவுஸ் ஆப் எஸ் எப்படி வளர்ந்தது என்பதை கண்கூட பார்த்தவள் நான். என் மனதிற்கு நெருக்கமான கிளப்களில் இதுவும் ஒன்று.

அசௌகரியம்!

அசௌகரியம்!

ஆனால், கடந்த சனிக்கிழமை நான் எதிர்கொண்ட சம்பவம், எனக்கு மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கியது. அதிக விலைக் கொடுத்து பானங்கள் வாங்கிய காரணத்தால், டி.ஜே பூத் ஸ்டேஜ்க்கு பின் இருந்த ப்ரிவிலேஜ் பாத்ரூம் பயன்படுத்த அனுமதி கிடைத்தது. அங்கே தான் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Image Source: Ankita Mishra

இந்து மத கடவுள் படங்கள்!

இந்து மத கடவுள் படங்கள்!

நான் டாய்லெட் பேப்பர் எடுக்கும் இடத்தில் சிவனின் படத்தை கண்டேன். பிறகு தான் கண்களில் நன்கு திறந்து, கழிவறை சுற்றியும் பார்த்த போது, சரஸ்வதி, விநாயகர், பிரம்மா, ராதா, கிருஷ்ணன், லக்ஷ்மி, காளியின் படங்களை கண்டேன். இவர்கள் எல்லாம் இந்து மத கடவுள்கள்.

இந்த படங்கள் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுபவை. கோவிலுக்கும் செருப்புப் போட்டுக்கொண்டு போகும் வழக்கம் கூட எங்களுக்கு இல்லை.

அவமதிப்பு!

அவமதிப்பு!

இங்கே இந்து மத கடவுள் படங்களை சிறுநீர், மலம் கழிக்கும் இடத்தில் அலங்கார பொருள் போல வைத்திருக்கிறீர்கள்.

எங்களுக்கு என்று ஒரு பெரும் கலாச்சாரம், மத வழிபாடுகள் இருக்கின்ற. நான் ஒரு அமெரிக்கவாழ் இந்தியராக இருந்தாலும், என் பெற்றோரால் இவை எல்லாம் கற்பிக்கப்பட்டு வளர்ந்தவள்.

தூய்மை!

தூய்மை!

தூய்மையும், சுத்தமும் எங்கள் வீடுகளில் கற்பிக்கப்படும் முதல் பாடம். சிறு குழந்தையாக இருக்கும் போதிருந்தே இது எங்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்தியாவில் மதிப்பளித்து பேச வேண்டும் என்பது குழந்தைகளுக்கு கற்பித்து வளர்க்கிறார்கள்.

கடவுள்களுக்கு பூக்கள் வைத்து பூஜிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறோம். கோவில்களுக்கு நாங்கள் செருப்பு, ஷூ அணிந்து செல்வதையே தவிர்ப்போம். ஆனால், இங்க உங்கள் நைட் க்ளப்பில் சுத்தமே இல்லாத கழிவறையில் இந்து மத கடவுள்களின் படங்கள் இடம்பெற செய்திருக்கிறீர்கள்.

மூன்று நாள்!

மூன்று நாள்!

கடந்த மூன்று நாட்களாக நிறைய யோசித்த பிறகு நான் நீங்கள் செய்த தவறு குறித்து அறிய வேண்டும். அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இவற்றை எல்லாம் கூறிக் கொண்டிருக்கிறேன். அனைவரது கலாச்சாரமும் மதிக்கப்பட வேண்டும். உங்கள் கழிவறையில் இருக்கும் அந்த படங்கள் உடனே அகற்றப்பட வேண்டும்.

இப்படிக்கு, அங்கிதா மிஸ்ரா

பதில்!

பதில்!

வணக்கம் அங்கிதா,

என் பெயர் கே புர்கே, நான் ஹவுஸ் ஆப் எஸ்'ன் இணை நிறுவனர் மற்றும் கிரியேட்டிவ் ஹெட். நான் இதற்கு முழு பொறுப்பு ஏற்கிறேன். நான் தான் அதை செய்தேன். அதை வெறும் படங்களாக கருதி, அதுக்குறித்து ஆழமான ஆராய்ச்சி எதுவும் செய்யாமல் நான் அவற்றை ஒரு அலங்கார பொருளாக கழிவறையில் வைத்துவிட்டேன். இது மிகவும் மோசமான காரியம் தான். உங்கள் கலாச்சாரத்திற்கு மரியாதை குறைவான செயல் செய்துவிட்டேன்.

கூடிய விரைவில்!

கூடிய விரைவில்!

கூடிய விரைவில் அந்த படங்களை கழிவறையில் இருந்து அகற்றிவிடுகிறேன். ஹாலோவன் கொண்டாட்டம் வருவாதற்குள் அவை எல்லாம் மாற்றப்பட்டிருக்கும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நீங்கள் உடனடியாக மாற்ற விரும்பினால், நான் அதன் மீது வேறு பெயிண்ட் மாட்டிவிடுகிறேன்.

Image Source: Ankita Mishra

நன்றி!

நன்றி!

உங்கள் மின்னஞ்சலை இரண்டு முறை முழுமையாக படித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நீங்கள் இத்தனை நேரம் எடுத்துக் கொண்டு, தெளிவான, தைரியமான வார்த்தைகள் பகிர்ந்தமைக்கு நன்றி. மேலும், எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வீணாக்க மாட்டோம்.

இதுக்குறித்து மேலும் ஏதாவது பேச விரும்பினால்.. நீங்கள் என் அலைப்பேசி எண்ணுக்கு தொடர்புக் கொள்ளலாம்.

மீண்டும், எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

- கே.

துணிவு!

துணிவு!

எதுவாக இருந்தாலும் துணிந்து வாய் திறந்து பேச வேண்டும். அப்போது தான் தீர்வுக் கிடைக்கும். உண்மை, நியாயம் உங்கள் பக்கம் இருக்கும் போது நீங்கள் எதற்கும் அச்சப்பட தேவை இல்லை. எந்த மதமாக இருந்தாலும், அது எந்த இடமாக இருந்தாலும், அதற்கு அவமதிப்பு செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

அனைவரது மதமும், கலாச்சாரமும் வரலாற்று சிறப்புடையது. என் சிறுவயதில் இருந்தே அம்மா, எதுவாக இருந்தாலும் வாய் திறந்து தைரியமாக பேச வேண்டும் என்று கூறுவார். அது தான் என்னை ஒரு தைரியமான பெண்ணாக இன்று வாழ வழிவகுத்திருக்கிறது என்று அங்கிதா மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

Image Source: Ankita Mishra

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking! In One of US Night Club That Used Hindu Gods Portraits in its Washroom!

Let it be whatever religion. You have to respect their culture. Insulting their culture or God is subject to offence. And this is what happened in one of the US night club. They used Hindu gods portraits in its washroom.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more