For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்!

  |

  ஏர் ஹோஸ்டஸ் என்றாலே... லட்டு போல அழகாக இருப்பார்கள். அவர்கள் கவர்ச்சியானவர் என்பது போன்ற பிம்பம் தான் 90% பேரிடம் காணப்படும்.

  ஆனால், அதை எல்லாம் தாண்டி அவர்கள் தங்கள் வேலையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன, அவர்கள் கையாளும் பயணிகள், பயணிகளின் வாழ்க்கையை பாதுகாக்க அவர்கள் என்னென்ன செய்வார்கள், நடுவானில் பறந்துக் கொண்டிருக்கும் போது என்னென்ன அபத்தங்கள் விமானத்திற்குள் நடக்கும் என்று வெளியுலகுக்கு தெரியாத சில பகீர் உண்மைகளை தங்கள் அனுபவத்தில் இருந்து கூறி இருக்கிறார்கள் சில ஏர் ஹோஸ்டஸ். அவற்றில் சிலவன...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  இறந்த பயணிகளின் உடல்!

  இதை யாராலும் எதிர்பார்க்க இயலாது எனிலும், வானில் விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது உடல்நல கோளாறு காரணமாக இறக்கும் வாய்ப்புகளும் உண்டு. அதற்காக தான் நீண்டதூர விமான பயணம் மேற்கொள்ளும் போது பயணிகளின் உடல்நலத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் எதிர்பாராத விதமாக உயிர்பலி ஏற்பட்டுவிடுகிறது.

  அந்த தருணத்தில் அந்த இறந்த உடலை எங்கே வைப்பார்கள். சிலர் கழிவறையில் யாருக்கும் தெரியாமல் பதுக்கிவிடுவார்களா என்று கருதலாம். தற்சமயம் சில விமான சேவைகளில் இறந்த உடல்களை வைப்பதற்கு என்றே தனி இடத்தை ஒதுக்குகிறார்கள். ஆனால், பெரும்பாலும் ஒருவர் இறந்துவிட்டார் என்று அறியவந்தால் அவரது உடலை பத்திரமாக இருக்கையில் அமர்த்தி, அருகே இருக்கும் பயணியிடம் கூறிவிடுவார்கள்.

  ஆனால், இது அனைத்து சமயங்களிலும் ஏற்புடையதாக இருக்காது. மேலும், எந்தவொரு பயணியும் இறந்த உடல் அருகே அமர்ந்து பயணிக்க விரும்ப மாட்டார்கள். ஆகையால், சிலசமயம், கழுத்து வரை ப்ளாங்கட் போர்த்தி, அவர் அதிக போதையில் இருப்பது போல அமைத்து, அருகே இருக்கும் பயணியிடம், அவர் மிதமிஞ்சிய போதையால் மயக்கம் அடைந்துவிட்டார் என்று தெரிவித்துவிடுவார்களாம். இந்த ஐடியாவை பல ஆண்டுகளாக சர்வதேச விமானங்களில் ஏர் ஹோஸ்டஸ் கையாண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

  நிர்வாணமாக உறங்கிய பயணி!

  அதுவொரு இரவு பயணம். முதல் வகுப்பில் ஒரு ஆண் பயணி பயணித்துக் கொண்டிருக்கிறார். இரவு உறங்குவதற்கு மாத்திரைகள் உட்கொள்ளும் பழக்கம் கொண்டிருந்த அந்த பயணி, விமானத்தில் பயணிக்கும் போதும் அதையே பின்பற்றி இருக்கிறார். விமானம் தரை இறங்கிய பிறகும், அந்த ஒரு பயணி மட்டும் எழுந்திருக்காது இருந்ததால், அவரை எழுப்ப சென்ற ஏர் ஹோஸ்டஸ் பெண்ணுக்கு அதிர்ச்சி. காரணம், அவர் போர்வையை எடுத்து எழுப்ப முயன்ற போதுதான், அவர் நிர்வாணமாக உறங்கி கொண்டிருந்ததை அறிந்திருக்கிறார் ஏர் ஹோஸ்டஸ். பிறகு விசாரித்த போது, எப்போதும் வீட்டில் உறங்கும் நினைவில், விமானத்திலும் ஆடைகளை களைத்துவிட்டு அவர் உறங்கியது அறிய வந்துள்ளது.

  MOST READ: இந்த செடிய வீட்ல ஒரு ஓரமா சும்மா வெச்சிருக்கீங்களா?... இது பல நோயை குணப்படுத்துற பொக்கிஷம் தெரியுமா?

  கைவிலங்கு!

  முரட்டுத்தனமாக மற்றும் குடி போதையில் அலப்பறை செய்யும் பயணிகளுக்கு கைவிலங்கு இடுவதற்கு என எப்போதும் விமானத்தில் சில கைவிலங்குகள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் செயல் எல்லை மீறி போகும் பொழுது, கைவிலங்கை பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் கைவிலங்குக்கு வேலை இருக்காது... சிலரை கட்டுக்கு கொண்டு வர முடியவில்லை அல்லது அவர்களால் பிற பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உண்டாகும் போது தான் கைவிலங்கை பயன்படுத்துவோம் என்று ஏர் ஹோஸ்டஸ் கூறுகிறார்கள்.

  அறிவிலி கேள்விகள்!

  சில பயணிகள் தெரிந்தோ, தெரியாமலோ சில அதிபுத்திசாலித்தனமான கேள்விகளாய் கேட்பார்கள். அதற்கு எல்லாம் பதில் சொல்லவே இயலாது. ஜன்னல் ஓர இருக்கையில் பயணித்து வந்த பயணி ஒருவர், எங்கே கோடுகள் காணவில்லை என்றார்... என்ன கோடுகள் என்று கேட்டதற்கு... மேப்பில் தெரிவது போன்ற கோடுகள் கீழே தெரியவில்லையே என்று வினவினார்.

  மற்றொரு பயணி... நான் எப்போது எனது வாட்ச்சில் நேரத்தை மாற்ற வேண்டும். அல்லது அதுவே தானாக நேரத்தை மாற்றிக் கொள்ளுமா என்று வினவினார்.

  மற்றும் சில பயணிகள், விமானத்தில் இறக்கையில் காணப்படும் ஒளி மற்றும் திரும்பும் போது அவற்றில் ஏற்படும் அசைவுகளை கண்டு ஏதோ அசம்பாவிதம் எற்படவிருப்பது போல நம்மை அச்சுறுத்தும் வகையில் ஏதேனும் கூறுவார்கள்.

  ஓசி அப்க்ரேட்!

  சில சமயங்களில் ஏர் ஹோஸ்டஸ் நினைத்தால் உங்களுக்கு ஓசியில் அப்க்ரேட் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதாவது உங்கள் இருக்கையில் இருந்து முதல் வகுப்பு இருக்கைக்கு கூட மாற்றலாம். ஒருவேளை உங்கள் இருக்கை முன் இருக்கும் எண்டர்டெயின்மென்ட் ஸ்க்ரீன் சேதம் அடைந்திருந்தால், இருக்கை பழுதாகிவிட்டது எனில்... அல்லது அருகே இருக்கும் பயணியால் தொந்தரவு ஏற்பட்டால் கூட ஏர் ஹோஸ்டஸ் நினைத்தால் இருக்கைகளை மாற்றி தர இயலும்.

  பாதுகாப்பு!

  ஏர் ஹோஸ்டஸ் அனைத்து இருக்கையிலும் பாதுகாப்பு கருவிகள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்க மாட்டார்கள். சில சமயங்களில் லைப் ஜாக்கெட்ஸ் எனப்படும் உயிரை காக்கும் அந்த மஞ்சள் நிற ஜாக்கெட்டுகள் ஏதேனும் ஓரிரு பயணிகளின் இருக்கையில் இல்லமால் போவதற்கு அல்லது சேதமடைந்து இருப்பதற்கு கூட வாய்ப்புகள் உண்டாம். எனவே, பயணிகள் எதற்கும் இருக்கைக்கு சென்றவுடன் அதை சரி பார்த்துக் கொள்வது நல்லது.

  MOST READ: பாத்ரூம் சிங்கர்களே...! பாட்டு பாடினால் உங்களின் எதிர்ப்பு சக்தி இருமடங்காக கூடுமாம்..!

  கசமுசா!

  சில பயணிகள் விமானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் போது லைட்ஸ் ஆப் ஆனதும் போர்வைக்குள் அல்லது விமான கழிவறைகளில் கசமுசாவில் ஈடுபடுவார்களாம். விமான கழிவறைகளை உள்பக்கம் இருந்தும் திறக்கலாம், வெளி பக்கம் இருந்தும் திறக்கலாம். ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பயணியை காப்பாற்ற இந்த வழிமுறை பின்பற்றப் படும் என்கிறார்கள்.

  அதே போல, விமான கழிவறையில் கசமுசா நடப்பதை அறிந்தாலும் கூட, வெளியே இருந்து கதவை திறந்துக் கொண்டு ஏர் ஹோஸ்டஸ் உள்ளே வர வாய்ப்புகள் உண்டாம். எனவே, விமானத்தில் எந்த இடத்தில் என்ன நடந்தாலும் அதை இவர்களால் கண்டறிய முடியுமாம்.

  உடல் எடை!

  விமானத்தில் வேலை செய்யும் ஏர் ஹோஸ்டஸ் இவ்வளவு தான் எடை இருக்க வேண்டும் என்ற விதிகள் இருக்கிறதாம். உடல் எடையில் இருந்து குறிப்பிட்ட அளவு முன், பின் கூடலாம், குறையலாம். அதை தாண்டி உடல் எடை கூடினாலும், குறைந்தாலும் அவர்கள் வெயிட் மேனேஜ்மென்ட் புரோக்ராமில் பங்கெடுத்துக் கொண்டு, சரியான உடல் எடையில் மீண்டும் சேர வேண்டும்.

  இதர விஷயங்கள்!

  உடல் எடை மட்டுமல்ல, உயரமும் கூட கணக்கில் எடுத்துக் கொள்ள ப்படுகிறது. 5'2ல் இருந்து 6'2 உயரம் இருக்க வேண்டும் (ஷூ அணியாமல்). மேலும், மூக்கு, காது மற்றும் அக்குள், கை, கால்களில் முடிகளை சரியாக ட்ரிம் அல்லது ஷேவ் செய்து பராமரிக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியம் மற்றும் வெண்மை மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

  மைல் ஹை கிளப்!

  விமானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் போது அதில் ஈடுபடுவதை மைல் ஹை கிளப் என்று குறிப்பிடுகிறார்கள். சில ப்ரைவேட் ஜெட் விமானங்களில் வேலைக்காக செல்லும் போது, அந்த செல்வந்தர்கள் ஏர் ஹோஸ்டஸ்களிடம் முறையற்று நடந்துக் கொள்வார்கள். கேள்வி கேட்காமல் அத்துமீறும் நபர்களும் உண்டு என்று ஏர் ஹோஸ்டஸ் சிலர் கூறுகிறார்கள்.

  பிரசவம்!

  சர்வதேச விமானங்களில் பறக்கும் ஏர் ஹோஸ்டஸ்களுக்கு பிரசவம் பார்க்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை வானில் பறந்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக பிரசவ வலி வந்துவிட்டால், அவசர நிலை பாதுகாப்பு ஆட்கள் வருவதற்கு முன் குழந்தையை எப்படி பாதுகாப்பாக பிரசவம் பார்த்து டெலிவரி செய்ய வேண்டும் என்ற முறையை ஏர் ஹோஸ்டஸ்களுக்கு கற்றுக் கொடுத்திருப்பார்களாம்.

  MOST READ: நொடிக்கு 8 குழந்தைகள் மரணிக்கின்றன, எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?

  பிழைப்பு திறன்!

  விமானத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் எப்படி தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்ற திறன் கற்பிக்கப்பட்டிருக்கும். அதாவது ஒருவேளை அசம்பாவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டால். பாலைவனம், காடு, மலை என எந்த இடத்தில் தவறி விழுந்திருந்தாலும், உதவிக்கு ஆட்கள் வரும் வரை எப்படி தங்களை தற்காத்து கொள்ள வேண்டும், உயிர் பிழைக்க என்னென்ன செய்துக் கொள்ள வேண்டும் என்று கற்பித்திருப்பார்களாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Secret Confessions of an Air Hostess!

  You Might Think Air Hostesses are beautiful and hot looking. But Their job is not only serving passengers. More Than that they have to take care and should safe guard them. And More than a job, they have some secrets confessions to share, which is really impossible to imagine.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more