இத்தன வருசம் வாழ்ந்து என்ன பண்ணனு யாரும் கேக்க முடியாது! WonderWomen #005

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய நவீன வாழ்க்கை முறையினால் இளவயதுக்காரர்களுக்கு ஏரளமான பிரச்சனைகள், குறிப்பாக உடல் உபாதைகள் வருகின்றன. இவற்றில் உடல் எடை அதிகரிப்பு, மாரடைப்பு,சர்க்கரை நோய் என்று வரிசைகட்டி வந்து நிற்கின்ற நோய்களினால் இன்றைக்கு வாழ்பவர்களின் சராசரி வயது ஐம்பதைக் கூட நெருங்க மறுக்கிறது.

நாற்பது வயதானாலே வயதாகிவிட்டது. கொலஸ்ட்ரால் குறைக்க வேண்டும். ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது என்று ஏதேதோ சாக்கு போக்கு சொல்ல ஆரம்பித்து மூன்று வேலை உணவுகளுடன் மூன்று வேலை மருந்துகள் சேர்ந்து கொள்கிறது.

ஆனால் இங்கே உங்களையெல்லாம் ஆச்சரியப்படுத்தும் விதமாக 98 வயதிலும் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் பாட்டியைப் பற்றித் தான் இன்றைய வண்டர் வுமனில் பார்க்கப் போகிறீர்கள்.

Padma shree Yoga paaty

Image Courtesy

100 வயதை நெருங்கிடும் பாட்டி என்றதும் ஏதோ சைனாவிலோ ஜப்பானிலோ இருக்கக்கூடிய பாட்டி என்று நினைத்து விடாதீர்கள். இந்தப் பாட்டி தமிழகத்தில் பிறந்தவர். இன்றளவும் தமிழகத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பத்ம ஸ்ரீ :

பத்ம ஸ்ரீ :

மத்திய அரசின் 2018 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.அதில் கோவையைச் சேர்ந்த நானாம்மாள் பாட்டிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

98 வயதாகும் நானாம்மாள் பாட்டி யோகாவில் செய்த சாதனைகளை பாராட்டும் வகையில் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

பிறப்பு :

பிறப்பு :

பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கிற ஜமீன் காளியாபுரம் என்ற ஊரில் 1920 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் நானம்மாள். நானாம்மாள் குடும்பத்தில் தொடர்ந்து ஐந்து தலைமுறைகளாக யோகா செய்தும் கற்றுக் கொடுத்தும் வந்திருக்கிறார்கள்.

தாத்தா மன்னார்சாமி யோகா செய்யும் போது பார்த்து யோகாவில் நானாம்மாளுக்கு ஆர்வம் மேலோங்கியிருக்கிறது. அன்றிலிருந்து தொடர்ந்து யோகா பயிற்சியை தொடர ஆரம்பித்திருக்கிறார். அப்போது அவருக்கு ஆறு அல்லது எட்டு வயதிருக்கும் என்றும் நினைவு கூர்கிறார். அவர் கூற்றுப் படி பார்த்தால் அவருக்கு தற்போது யோகாவில் 90 வருடத்திற்கும் அதிகமான அனுபவம் இருக்கிறது.

Image Courtesy

திருமணம் :

திருமணம் :

திருமணம் செய்து போகும் வரை தொடர்ந்து யோகா செய்து கொண்டே இருந்திருக்கிறார். திருமணமான பின் புகுந்த வீட்டில் பிறர் முன்னிலையில் செய கூச்சப்பட்டு, தனியறையில் மறைவாக செய்திருக்கிறார் நானாம்மாள்.

Image Courtesy

மாமியார் மறுப்பு :

மாமியார் மறுப்பு :

இந்நிலையில் அப்படி ஒரு நாள் நானாம்மாள் மறைந்து மறைந்து யோகா பயிற்சி செய்வதை நானாம்மாள் பாட்டியின் மாமியார் பார்த்துவிடுகிறார்.

உடனே நானாம்மாளின் கணவரிடத்தில், யாராவது பார்த்தா தப்பா நினைக்க போறாங்க இதெல்லாம் பண்ண வேண்டாம்னு அவ கிட்ட சொல்லு என்று கணவரிடம் சொல்லி யோகா செய்ய தடை விதிக்கிறார்.

Image Courtesy

வலி :

வலி :

நல்ல மருமகளாக சில நாட்கள் யோக பயிற்சி செய்யாமலிருந்திருக்கிறார் நானாம்மாள். ஒரு நாள் மாமியார் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, வழுக்கி விழுந்து கால் சுளுக்கு பிடித்துக் கொண்டிருக்கிறது.

பல்வேறு வைத்திய முறைகளை கையாண்டும் எதுவும் பலனளிக்கவில்லை. வலியால் மாமியார் துடித்துக் கொண்டிருந்தார்.

Image Courtesy

சமரசம் :

சமரசம் :

அப்போது நான் வேணாலும் முயற்சிக்கட்டுமா என்று சொல்லி நானாம்மாள் சென்றிருக்கிறார். ஆரம்பத்தில் தயங்கிய அவர், பின்னர் சரி எப்படியோ இந்த வலி குறைந்தால் போதும் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இவர் யோகாவில் கற்றதை வைத்து, சுளுக்கு என்றால் எங்கே பிடிக்கும், அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்று துல்லியமாக கணக்கிட்டு சில பயிற்சியளிக்க சுளுக்கு உடனேயே சரியாகிவிட்டிருக்கிறது.

Image Courtesy

யோகா குடும்பம் :

யோகா குடும்பம் :

யோகாவில் இத்தனை நன்மைகளா? அதில் இத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கிறதா என்று ஆச்சரியப்பட்ட நானாம்மாளின் மாமியார் தன் மருமகளிடம் யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.

அதனைப் பார்த்து மொத்த குடும்பமும் நானாம்மாளிடம் யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

Image Courtesy

கடமையை செய் :

கடமையை செய் :

நானாம்மாள் பாட்டிக்கு இரண்டு மகன் மற்றும் மூன்று மகள் என மொத்தம் ஐந்து குழந்தைகள். ஐந்து பேருமே தற்போது யோகா ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இவர்களைத் தவிர இவரிடம் யோகா கற்றுக் கொண்ட மாணவர்கள் பலரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லண்டன்,கனடா,மலேசியா என வெளிநாடுகளில் யோகா பயிற்றுனர்களாக இருக்கிறார்கள்.

தற்போது பேரன் பேத்தி, கொள்ளு பேரன் பேத்திகள் எடுத்தாலும் சுறுசுறுப்பாக யோகா பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார் நானாம்மாள் பாட்டி.

Image Courtesy

மருத்துமனையா அப்டின்னா? :

மருத்துமனையா அப்டின்னா? :

பல வருடங்களாக தொடர்ந்து யோகா பயிற்சி மேற்கொள்வதால் நானாம்மாள் பாட்டி முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். யோகா செய்வதனால் எலும்பு மூட்டுகள் வலுப்பெறும், அதோடு உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இதுவரை ஒரு நாள் கூட யோகா பயிற்சி மேற்கொள்வதை நிறுத்தவில்லை இந்தப் பாட்டி, அதனால் மருத்துவமனை பக்கம் ஒதுங்கியது கூட இல்லை என்கிறார் அசத்தல் பாட்டி.

Image Courtesy

உணவு :

உணவு :

நானாம்மாள் பாட்டியின் காலை உணவாக ராகி, கம்பு, மக்காச்சோளம், பாசிப்பயிறு, வரகு ,தினை,கோதுமை,சிவப்பு அரிசி என இப்படி ஏதாவது ஒரு தானியத்தை வறுத்து அதனை அரைத்து காய்ச்சி அதனோடு மோர் சேர்த்துக் குடிக்கிறார்.

மதியத்திற்கு சைவ உணவு எடுத்துக் கொள்கிறார். இரவு உணவாக பழமும் அரை டம்ப்ளர் பாலும் குடிக்கிறார். இரவு உணவினை ஏழு மணிக்கே சாப்பிட்டுவிடுகிறார். சர்க்கரையை சேர்ப்பதில்லை. டீ,காபிக்கு பதிலாக சுக்கு காபி கருப்பட்டி கலந்து குடிக்கிறார்.

Image Courtesy

சாதனைகள் :

சாதனைகள் :

பல்வேறு யோகா போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார் இவர். வீடு முழுவதும் கோப்பைகளும் விருதுகளும் நிரம்பிக் கிடக்கின்றன. பாட்டியைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் ஏராளமாக வந்திருக்கின்றன. இவரது வீடியோவை உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

ஐம்பது வயது உட்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் பங்கு கொண்டு தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். தேசிய அளவிலான யோகாப் போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ள நானம்மாள் பாட்டி, இதுவரை 5 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

Image Courtesy

விழிப்புணர்வு :

விழிப்புணர்வு :

அந்தமான நிகோபர் தீவில் நடைப்பெற்ற தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ் என்ற பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.

அதோடு பள்ளி மற்றும் கல்லூரிகளில் துரித உணவுகள்,பாக்கெட் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவு சாப்பிட வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம் நடத்துகிறார்.

Image Courtesy

விருதுகள் :

விருதுகள் :

கர்நாடக அரசின் யோக ரத்னா விருது, குடியரசுத் தலைவரிடம் இருந்து பெண் சக்தி விருது அந்தமான் தமிழ் சங்கம் விருது , துபாய் தமிழ் சங்கம் விருது என பல்வேறு விருதுகளை வாங்கி குவித்திருக்கும் நானாம்மாள் பாட்டி தற்போது இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதையும் பெறவிருக்கிறார்.

இத்தனை சாதனைகளுக்கு பிறகும் பாட்டி சொல்கிற விஷயம் என்ன தெரியுமா?

இத்தன வாருஷம் வாழ்ந்து என்ன பண்ணனு என்னைய யாரும் கேக்க முடியாது. அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியத்த சொல்லிக் கொடுத்திருக்கேன். அதத் தொடர்ந்து பயிற்சியளிக்கவும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள உருவாக்கியிருக்கேன் என்பதில் பெருமதிம் கொள்கிறார் நானாம்மாள் பாட்டி.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Padma shree Yoga paaty

life story of Padma shree Yoga paaty
Subscribe Newsletter