For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கள் தலைவனின் 100வது பிறந்தநாள்: நெல்சன் மண்டேலா குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!

|

நிறவெறியை எதிர்த்து போராடி தன் வாழ்நாளின் பெரும்பங்கினை சிறையில் கழித்த தலைவர். இளமை பருவத்தில் இவருக்கு குத்து சண்டையில் பெரும் ஆர்வம் இருந்ததாம்.

ஆனால், அதை அவர் வன்முறைக்கு பயன்படுத்தாமல், வாழ்வில் பல வகைகளில் தனக்கு எதிராக முன்னின்ற தடைகளையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ள, தன்னை தற்காத்துக் கொள்ள ஒரு அறிவியல் கருவியாக அதை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

நிறத்தில் கருப்பானாலும், வெள்ளை மனம் கொண்டவர். இவரது உள்ளங்கை ரேகை இவர் வாழ்ந்த ஆப்ரிக்க கண்டத்தின் அச்சினை அப்படியே பிரதிபலிக்கிறது.

இன்று நெல்சன் மண்டேலாவின் நூறாவது பிறந்தநாள்.

இவரை பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொல்லைக்காரன்!

தொல்லைக்காரன்!

மண்டேலாவின் இயற்பெயர் ரொலிஹ்லஹ்லா (Rolihlahla). மண்டேலாவின் க்ஹோஸா (Xhosa) பழங்குடியினர் மொழியில் இந்த பெயரின் பொருள் மரக்கிளைகளை பிடித்து இழுத்தல் அல்லது தொல்லை செய்பவர் என்பதாம். ஆனால், இந்த தகவல் எவ்வளவு உண்மை என்று அறியப்படவில்லை.

நெல்சன் பெயர் காரணம்!

நெல்சன் பெயர் காரணம்!

இவர் தொடக்கப் பள்ளியில் சேர்ந்த போதுதான், பள்ளி ஆசிரியர் இவருக்கு நெல்சன் என்ற பெயரை சூட்டினார். ஆனால், எதற்காக இந்த குறிப்பிட்ட பெயரை சூட்டினார் என்பதற்கான தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை. 1920களில் ஆங்கிலேயர்கள் ஆப்ரிக்கா குழந்தைகளுக்கு அவர்கள் உச்சரிக்க எளிமையான பெயரை சூட்டி வந்ததாக அறியப்படுகிறது.

நடிகர்!

நடிகர்!

நெல்சன் மண்டேலா ஸ்பைக் லீயின் 'மால்கம் எக்ஸ்' திரைப்படத்தில் சிறப்பு வேடம் ஏற்று நடித்திருந்தார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சில் இவர் ஒரு பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடம் மால்கம் எக்ஸின் பிரபலமான உடையாடல் ஒன்றினை பேசுவது போன்ற காட்சி அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும்.

சிறப்பு, மிகச்சிறப்பு!

சிறப்பு, மிகச்சிறப்பு!

கேப் டவுன் முதல், கலிபோர்னியா உலகின் பல்வேறு நாடுகளில் முக்கிய சாலைகளுக்கு பெயராக சூட்டப்பட்டுள்ளன. புது தில்லியின் தெற்கு பகுதியில் கூட ஒரு சாலைக்கு நெல்சன் மண்டேலா பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளும், கௌரவங்களுக்கு சொந்தக் காரர். கனடா இவருக்கு கௌரவ சிட்டிசன்ஷிப் அளித்து பெருமை சேர்த்தது.

மரங்கொத்தி!

மரங்கொத்தி!

2012ம் வருடம் ஆய்வாளர்கள் வரலாற்று சிறப்புமிக்க மரங்கொத்தி பறவை வகை ஒன்றுக்கு இவரது பெயரை சூட்டினார்கள். அந்த மரங்கொத்தி பறவையின் பெயர் Australopicus nelsonmandelai ஆகும்.

1973ல் லீட்ஸ் பல்கலைகழகத்தின் இயற்பியல் துறையை சார்ந்தவர்கள் ஒரு நியூக்ளியர் பார்ட்டிகலுக்கு மண்டேலா பார்டிக்கல் என்று பெயர் சூட்டி இவருக்கு பெருமை சேர்த்தனர்.

பிரிட்டிஷ் லேபர் பார்ட்டியில் உறுப்பினர், மான்செஸ்டர் யூனிடட்டில் உறுப்பினர் என பல கௌரவங்கள் பெற்றிருக்குறார் நெல்சன் மண்டேலா.

ஃபர்ஸ்ட் லேடி!

ஃபர்ஸ்ட் லேடி!

தனது 80வது வயதில் நெல்சன் மண்டேலா கிராசியா மாச்செல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர் கிழக்கு ஆப்ரிக்கா நாடான மொசாம்பிக்கின் அதிபர் சோமாரா மாச்செலின் மனைவி ஆவார்.

சோமாராவின் மறைவுக்கு பிறகு கிராசியாவை திருமணம் செய்துக் கொண்டார் நெல்சன் மண்டேலா. இதன் மூலம் இரண்டு நாடுகளுக்கு ஃபர்ஸ்ட் லேடியாக இருந்த பெருமை பெற்றார் கிராசியா.

மாறுவேடம்!

மாறுவேடம்!

மாறுவேடம் போடுவதில் வல்லவர் நெல்சன் மண்டேலா என்று அறியப்படுகிறது. நிறவெறிக்கு எதிரான தனது முதல் சண்டையின் போது, அதிகாரிகளிடம் இருந்து பிடிப்படாமல் இருக்க மாறுவேடங்கள் போட்டு செல்வாராம் நெல்சன் மண்டேலா.

ஒருமுறை இவர் ஓட்டுனராக கூட வேடமிட்டு சென்றிருக்கிறார் என்று அறியப்படுகிறது. தனது சுயசரிதையில் பகல் நேரம் எல்லாம் பதுங்கி இருந்து, இரவு வேளையில் தான் என் வேலைகளை செய்து வந்தேன் என்று குறிப்பிட்டிருந்தாரம் நெல்சன் மண்டேலா.

குத்துச்சண்டை!

குத்துச்சண்டை!

அரசியல், போராட்டங்களை தவிர்த்து, நெல்சன் மண்டேலாவுக்கு குத்துச்சண்டை மீது பேரார்வம் இருந்ததாம். குத்துச்சண்டையில் இருந்து வெறி எனக்கு பிடிக்காது, ஆனால், அதில் இருக்கும் அறிவியல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார் நெல்சன் மண்டேலா.

தற்காத்து கொள்ள நமது உடலை எப்படி நகர்த்த வேண்டும், தாக்குதலை கணித்து, அதற்கு ஏற்ப எதிர் தாக்குதல் எப்படி செய்ய வேண்டும், சண்டை முழுக்க உங்கள் வேகத்தை எப்படி காண்பிக்க வேண்டும் என்பதை எல்லாம் குத்துச்சண்டையில் கற்றுக்கொள்ளலாம் என்கிறார் மண்டேலா.

குடல்!

குடல்!

பெரும்பாலும் உலக தலைவர்களை வரவேற்று உணவு உபசரிக்கும் போது ஒயின் கொடுத்து விருந்தளிப்பார்கள். ஆனால், நெல்சன் மண்டேலாவுக்கு பிடித்தமான உணவு ஒயின் அல்ல. நெல்சன் மண்டேலா இறைச்சி குடல், இரைப்பை போன்றவற்றை விரும்பு உண்ணும் பழக்கம் கொண்டிருந்தார்.

தீவிரவாதி!

தீவிரவாதி!

அமெரிக்காவின் தீவிரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் இருந்து 2008ம் ஆண்டு (89வது வயதில்) தான் நீக்கப்பட்டார் நெல்சன் மண்டேலா. நெல்சன் மண்டேலா உட்பட அவரது ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் நிறவெறிக்கு எதிராக போராடி சண்டையிட்டு வந்த காரணத்தால், இந்த பட்டியிலில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nelson Mandela Facts

On his 100th Birthday, Here we have listed some lesser known facts about one of the greatest leader in the world, none other than, Nelson Mandela!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more