For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஆபாசப் படத் துறையால் ஏற்பட்ட ஆபத்தான விளைவுகள் - நடிகை மியா கலீஃபா!

  By Staff
  |

  குறுகிய காலக்கட்டத்தில் ஆபாசப் பட உலகில் பெரும் பிரபலமானவரும் இவர் தான். அதே போல, வளர்ந்த வேகத்தில் அந்த துறையில் இருந்து வெளியே வந்தவரும்  இவர் தான்.

  ஹிஜாப் அணிந்து ஒருமுறை மியா கலீஃபா ஆபாசப்படம் ஒன்றில் தோன்றியதன் காரணத்தால், இவரது தலையை துண்டிப்போம் என்று என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்தது. மேலும், மியா கலீஃபா இனிமேல், ஆபாசப் படங்களில் நடிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறினார்கள்.

  லெபனான் நாட்டை பூர்வீகமாக கொண்ட மியா கலீபாவின் குடும்பத்தார் 2000ம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றனர். மியா கலீபா டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் வரலாற்று பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.

  18 வயதிலேயே திருமணம் செய்துக் கொண்ட இவர், தனது ஆரம்பக்கட்டத்தில் பர்கர் கடையில் வேலையும் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  2014 - 2015

  2014 - 2015

  தனது 18வது வயதில், 2011ம் ஆண்டு அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார் மியா கலீபா. திருமணமான இரண்டே ஆண்டுகளில் இவர் பார்ன் துறையில் நுழைந்தார்.

  பர்கர் கடையில் வேலைப் பார்த்து வந்த போது, அங்கே வரும் ஒரு கஸ்டமர் மூலமாக தான் பார்ன் துறை அறிமுகமானது மியா கலீபாவிற்கு. அவர் மூலமாகவே இந்த துறையில் நுழைந்தார் மியா.

  இவர் 2014ம் ஆண்டு ஆபாசப் படங்களில் நடிக்கத் துவங்கியதில் இருந்து, இவரது குடும்பத்தார் யாரும் இவருடன் தொடர்பில் இல்லை.

  நம்பர் ஒன்!

  நம்பர் ஒன்!

  பார்ன் துறையில் நுழைந்த ஒரு வருடத்திற்குள் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார் மியா கலீபா. ஆபாசப் படம் பார்க்கும் ரசிகர்களிடையே இவர் பெரும் பிரபலம் அடைந்தார். அதே நேரத்தில் இவர் சில சர்ச்சைகளிலும் சிக்கினார். பிறப்பால் இஸ்லாமியரான இவர் வெளியுலகிற்கு தன்னை ஒரு கிருஸ்துவர் போல காண்பித்துக் கொள்வதும் உண்டு.

  ஆனால், ஒருமுறை இவர் இஸ்லாம் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்து ஆபாசப் படம் ஒன்றில் தோன்றிய போது தான், இவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் நடுவே பிரச்சனைகள் உண்டானது.

  தயாரிப்பாளர்கள்!

  தயாரிப்பாளர்கள்!

  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மியா கலீபாவின் தலையை நிச்சயம் துண்டிப்போம் என்று மிரட்டல் விடுத்தது. ஆனால், அப்படியான தோற்றத்தில் தோன்றியதற்கு தயாரிப்பாளர்கள் தான் காரணம். தானாக முன்வந்து எதையும் செய்யவில்லை என்று மியா கலீபா தரப்பு தகவல் கூறியது.

  #MeToo

  #MeToo

  நானும் பல சமயங்களில், பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன். நான் MeToo பிரச்சாரத்தை, விழிப்புணர்வை வரவேற்கிறேன். ஆனால், எனக்கு நேர்ந்தவற்றை அதனுள் சேர்க்க நான் விரும்பவில்லை. நான் எல்லாம் பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசினால் யாரும் ஏற்க மாட்டார்கள். மேலும், என்னை அதன் ஒரு அங்கமாக நான் என்றும் கருதியதும் இல்லை என்று கூறியிருக்கிறார் மியா கலீபா.

  பின்தொடரும் நபர்கள்...

  பின்தொடரும் நபர்கள்...

  என்னை பின்தொடரும் நபர்கள் என்று பலர் இருக்கிறார்கள். சமூக தளங்கள், இன்ஸ்டாகிராம் என்று மட்டுமின்றி, நான் செல்லும் இடங்களில் எல்லாம் சிலர் பின் தொடர்வார்கள் எனவே, எப்போதும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சூழலில் நான் வாழ்ந்து வருகிறேன். முக்கியமாக முகம் தெரியாத நபர்களிடம் இருந்து என்னை நானே காப்பாற்றிக் கொள்ள நிறைய கவனமாக இருக்க வேண்டியுள்ளது என மியா கூறியுள்ளார்.

  ஐஎஸ்ஐஎஸ் விட மோசம்...

  ஐஎஸ்ஐஎஸ் விட மோசம்...

  என்னை பின் தொடரும் கூட்டத்தின் வயது 18-24 தான் இருக்கும். நான் நண்பர்களுடன் பார் அல்லது பார்ட்டி நடக்கும் இடங்களுக்கு செல்லும் போது யார் என் பின்னே நிற்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனமாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

  என்னிடம் கேட்டு புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு. பணிவாக, மரியாதையாக பேசுபவர்களின் எண்ணிக்கையும் குறைவு தான். 60% பேர் மோசமாகவும், மரியாதை இல்லாமலும் தான் நடந்துக் கொள்வார்கள்.

  எனவே, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை போலவே நான் இவர்களை கண்டும் அஞ்சி தான் வாழ வேண்டியுள்ளது என மியா கலீபா மேலும் தெரிவிததுள்ளார்.

  மிரட்டல்!

  மிரட்டல்!

  ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் மற்றும் தான் வேலை செய்யும் துறையில் இருக்கும் ஆபத்தான சூழல் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற பல காரணங்களால் மியா கலீபா ஆபாசப் படாது துறையில் இருந்து விலகியுள்ளார். இதை அமெரிக்காவில் பல ரேடியோ மற்றும் வீடியோ ஊடகங்களில் தான் அளித்த பேட்டிகளில் கூறியுள்ளார் மியா கலீபா.

  25 வயது பெண்...

  25 வயது பெண்...

  மியா கலீபாவிற்கு இப்போது வயது 25 தான். அதற்குள் மிக பிரபலமாகவும், கொலை செய்யும் அளவிற்கு தீவிரவாதகளிடம் இருந்து மிரட்டல்களுக்கும் ஆளாகி யுள்ளார் மியா கலீபா. மியா கலீபாவின் பெற்றோர், அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. அவரது எந்தவொரு செயலுக்கும் நாங்கள் பொறுப்பாக முடியாது என்று கூறி வருகிறார்கள்.

  கலாச்சாரம்...

  கலாச்சாரம்...

  எங்கள் தாயகத்தின் கலாச்சாரத்தை இங்கே பின்பற்ற மிகவும் கடுமையாக போராட வேண்டியுள்ளது. இந்த நாடு மற்றும் இந்த காலாச்சாரத்தில் இருந்து எங்கள் பிள்ளைகளை பாதுகாக்க நாங்கள் பெரிதும் போராடுகிறோம்.

  அவரவர் பாரம்பரியத்தை காப்பாற்ற அதன் மதிப்பை நிலைநாட்ட அடுத்த தலைமுறை அதை பின்பற்ற செய்வது மிகவும் கடுமையாக இருக்கிறது. இதுப் போன்ற காரணங்களால் பல குழந்தைகள் தங்கள் கலாச்சார வேர்களை அறுத்துக் கொண்டு செல்கிறார்கள்.

  மியா கலீபா மீண்டும் அறிவுடன் நடந்துக் கொள்வார் என்று நம்புகிறோம், அவரது தற்போதைய பெயரும் செயல்களும் அவரது குடும்பத்திற்கு எந்த விதத்திலும் மதிப்பை பெற்று தரவில்லை, என்று மியா கலீபாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Mia Khalifa Regrets For Her Past!

  Mia Khalifa speaks up about the regrets and dangerous consequences associated with having been a part of the pornography industry.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more