For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வக்கிரமான வார்த்தைகளில் திட்டி, பாடகி சின்மயிக்கு பாலியல் மிரட்டல்!

By John
|
Man Threatens Singer Chinmayi in a Vulgar way Through Instagram

#MeToo-வில் வைரமுத்து மீது பாலியல் புகார் சுமத்திய போது எந்த அளவிற்கு பாடகி சின்மயிக்கு ஆதரவு குரல் கிடைத்ததோ, அதே அளவிற்கு எப்படி கவிப்பேரரசு வைரமுத்து போன்ற தமிழுக்கு தொண்டாற்றிய புகழ்பெற்ற நபர் மீது ஆதாரமின்றி இப்படி ஒரு குற்றச்சாட்டு சுமத்தலாம் என்று எதிர்ப்பு குரலும், கண்டனங்களும் கூட எழுந்தன.

தான் ஒரு பிராமிணப் பெண் என்பதற்காக சமூக தளங்களில் என்னை திட்டியும், வசைப்படியும், கேவலமாக பேசியும் வருகிறார்கள். என் மீது சாதி ரீதியான ஒடுக்குமுறை தாக்குதல் நடக்கிறது என்று பாடகி சின்மயி தனது பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைய சூழலில் ரஜினிகாந்த் - கமல் ஹாசனாக இருந்தாலுமே அவர்களது வயது, புகழ், நிலை பற்றி எதுவும் கருத்தில் கொள்ளாமல் அவர்களது சமூக தள முகவரிகளை டேக் செய்தி அசிங்கமாக பேசும், கிண்டல் செய்யும், அவதூரப் பரப்பும் பெரும் கூட்டம் இருக்கும். அவர்கள் கருத்திற்கு எதிர் கருத்து அல்லது, அது சரியா, தவறா என்று விமர்சனம் செய்வது வேறு, முற்றில்லுமாக அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று வார்த்தைகளால் தாக்குவது வேறு.

இங்கே, பல பிரபலங்கள் சமூக தளங்களில் இந்த வார்த்தை போர்களில் சிக்கி இருக்கிறார்கள். அதிலும், பெண் பிரபலங்களாக இருந்தால் அவர்களது உடல் மற்றும் கற்பு குறித்து மிக எளிதாக வசைப்பாடி விடுகிறது அந்த கூட்டம்.

அப்படி தான் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக பாடகி சின்மயிக்கு ஒருவர் மிக வக்கிரமாக செய்தி அனுப்பி இருக்கிறார். அதில், எப்படி எல்லாம் சித்திரவதை செய்து கற்பழிப்பேன், உன்னை என்ன செய்வேன் பார் என்று வாய்க்கு வந்த படி எல்லாம் பேசி இருக்கிறார். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து என் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்திருக்கிறார் பாடகி சின்மயி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source and Courtesy - Chinmayisripaada | Instagram Story - Screenshot

பிளாக் செய்ததற்காக வக்கிரமான வார்த்தைகளில் திட்டி, பாஜக போல நீயும் நாட்டுக்கு சாபம் என்று வசைப்பாடி உள்ளார் அந்த நபர். 2016ம் ஆண்டில் இருந்து இந்த இன்ஸ்டாகிராம் பயனாளி செயற்பட்டு வருவதாக சின்மயி t அன் ஸ்டோரி அப்டேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

#2

#2

Image Source and Courtesy - Chinmayisripaada | Instagram Story - Screenshot

மீண்டும், மீண்டும் மோசமான, வக்கிரமான வார்த்தைகள் பயன்படுத்தி திட்டியது மட்டுமின்றி, எனக்கு சாபம் விடுகிறாயா என்று மிரட்டியும் இன்பாக்ஸில் மெசேஜ் செய்திருக்கிறார் அகமது ஃபிஹாம் எனும் அந்நபர்.

#3

#3

Image Source and Courtesy - Chinmayisripaada | Instagram Story - Screenshot

தான் திட்டியது எல்லாம் ஸ்டோரி அப்டேட் செய்தி இருக்கிறாயா, போடு, போடு, நல்லா கதறு என்று மீண்டும் சின்மயிக்கு ஸ்டோரி அப்டேட்களை கண்ட பிறகு மெசேஜ் செய்திருக்கிறார் அந்த நபர்.

#4

#4

Image Source and Courtesy - Chinmayisripaada | Instagram Story - Screenshot

அந்த நபர் அனுப்பிய செய்திகள் மட்டுமின்றி, அவரது இன்ஸ்டாகிராம் முகவரி, மற்றும் அவர் பதிவு செய்த படங்களையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஸ்டோரியில் அப்டேட் செய்திருக்கிறார் சின்மயி.

#5

#5

Image Source and Courtesy - Chinmayisripaada | Instagram Story - Screenshot

என்னை 390K மேற்பட்ட நபர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் தினசரி இருபது மெசேஜ்கள் வருகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சின்மயி.

#6

#6

Image Source and Courtesy - Chinmayisripaada | Instagram Story - Screenshot

அகமது போன்ற நபர்களுக்கு, நான் அவர்கள் அனுப்பும் செய்திகளை பொதுவெளியில் அப்டேட் செய்கிறேன் என்று தெரிந்தும், தொடர்ந்து இப்படி செய்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதெல்லாம் நினைத்து பயம் எதுவும் இல்லை. அகமது மிடில் ஈஸ்ட் பகுதியில் வாழும் நபராக இருக்கலாம் என்று அவரது மொபைல் நம்பர் பதிவை வைத்து கூறி இருக்கிறார் சின்மயி.

#7

#7

Image Source and Courtesy - Chinmayisripaada | Instagram Story - Screenshot

இது போல பல பெண்களுக்கு கொடுமைகள நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. பெண்கள் தயக்கம் இன்றி அதை பொதுவெளியில் பதிவு செய்ய வேண்டும். பேருந்தில் நடந்த சம்பவம் பதிவானது போல என்று சின்மயி கூறி இருக்கிறார்.

#8

#8

Image Source and Courtesy - Chinmayisripaada | Instagram Story - Screenshot

எல்லா ஆண்களும் இப்படியானவர்கள் என்று நான் கூறவில்லை. என் கணவர், மாமனார், நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் நிறைய நல்ல ஆண்களும் இருக்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை என்றும் சின்மயி பதிவு செய்திருக்கிறார்.

#9

#9

Image Source and Courtesy - Chinmayisripaada | Instagram Story - Screenshot

பொது வாழ்வில் பரிச்சயமான என்னை போன்ற பெண்களுக்கு இது போல டஜன் கணக்கில் மெசேஜ் தினமும் வருகிறது. MeTooவிற்கு பிறகு பல பெண்கள் அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை எனக்கு மெசேஜ் மற்றும் ஈமெயிலாக அனுப்பி இருக்கிறார்கள், என தெரிவித்துள்ளார் சின்மயி.

#10

#10

Image Source and Courtesy - Chinmayisripaada | Instagram Story - Screenshot

இதை எல்லாம் கண்டு நான் தனிமையில் பயந்து போய் உட்கார்ந்து இருக்க மாட்டேன். இதே போல் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லாம் என்னை போல பிரபலமானவர்களும் இல்லை.

நாம் என்ன செய்ய வேண்டும், இவர்களுக்கு என்ன பாடம் புகட்ட வேண்டும்? பாதுகாவலர்கள் இவர்களை பிடித்து தண்டிப்பார்கள் என்று காத்திருக்கப் போகிறோமா? என்று தன் ஆதங்கங்களை கேள்வியாக எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Man Threatens Singer Chinmayi in a Vulgar way Through Instagram

An Instagram User namely Ahmed Fiham Threatens Singer and Dubbing Artist Chinmayi, That He will rape her. He used foul words and scolded her like anything.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more