சென்னையில் ஓடும் பேருந்தில் இளம் பெண் முன் சுய இன்பம் கண்ட ஆண்!

சென்னையில் ஓடும் பேருந்தில் இளம் பெண் முன் சுய இன்பம் கண்ட ஆண்!

Man Masturbated in Front of Girl in Chennai MTC Bus!

வேலை முடித்து இரவு வீடு திரும்புவது தான் கடினமாக இருக்கிறது என்றால், பட்டப் பகலிலும் பெண்களுக்கு நம் நாட்டில் பாதுகாப்பு இல்லை. தோழனுடன் பயணிக்கும் போது அடித்துப் போட்டுவிட்டு கற்பழித்து கொலை செய்கிறார்கள், தனியாக வந்தால்.. கூட்டு பலாத்காரம் செய்து படம், வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறார்கள். இருளில் தான் இப்படி என்றால், பகலில் கொஞ்சமும் கூச்சமும், அச்சமும் இன்றி பெண்கள் முன் சுய இன்பம் கண்டுத் தொல்லை செய்கிறார்கள்.

இப்படியான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு ஆண்மை / ஆண்குறி நீக்கும் தண்டனை அமலுக்கு வரும் வரையிலும் இப்படியான குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்பே இல்லை என்று தான் எண்ண தோன்றுகிறது.

இதோ! சென்னை எம்.டி.சி பேருந்தில் இரு தினங்களுக்கு முன் (29/11/2018) நடந்த அருவருக்கத்தக்க சம்பவம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாள்!

நாள்!

இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் 29 நாள், மதியம் 1.30 மணியளவில் எம்.டி.சி பேருந்தில் நடந்ததுள்ளது. மதிய வேளை என்பதாலும், பேருந்தில் கூட்ட நெரிசல் பெரிதாக இல்லாததாலும், அந்த கொடூரமான ஆண், வெட்ட வெளிச்சத்தில் எந்த பயமும், கூச்சமும் இன்றி, பேருந்தில் பயணத்தில் வந்து இளம்பெண் முன்னிலையில் சுய இன்பம் கண்டிருக்கிறார்.

இயல்பாக!

இயல்பாக!

பேருந்தில் பயணித்த அந்த இளம்பெண், "நான் எப்போதும் போல கேளம்பாக்கம் - சோழிங்கநல்லூர் செல்லும் பி 19 பேருந்தில் ஏறினேன். எனக்கு ஜன்னல் அருகே சீட்டில் பயணிப்பது மிகவும் பிடித்தமானது. பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியாக வெடிக்கப் பார்த்துக் கொண்டும், பாட்டுக் கொண்டே பயணித்து வந்தேன்.

பார்வை!

பார்வை!

என் இருக்கையின் எதிர்முனையில் ஜன்னல் அருகே இருக்கையில் அந்த நபர் எப்போது வந்து அமர்ந்தார், அவர் எங்கே ஏறினார் என்றெல்லாம் நான் கவனிக்கவே இல்லை. நான் எதற்சையாக திரும்பி பார்த்த போது, அந்த ஆண் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தேன்.

ஒரு பெண்ணாக இருப்பதால், இப்படியான பார்வையை நான் தினந்தோறும் கடந்து வருகிறேன். அதனால், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எதிர்பார்க்கவில்லை!

எதிர்பார்க்கவில்லை!

ஆனால், சற்று நேரம் கழித்து ஏதோ தவறாக நடப்பது போன்ற எண்ணம். திரும்பி பார்த்தால்... வெட்ட வெளிச்சத்தில் ஓடும் பேருந்தில் அந்த ஆண் மிக கேவலமான செயலில் ஈடுபட்டு வந்தார். எனக்கு அங்க என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று அறியாமல், அந்நபரின் செயலை வீடியோவாக பதிவு செய்தேன்.

பதட்டம்!

பதட்டம்!

அந்த செயலை கண்டத்தில் இருந்து பதட்டம் பற்றிக் கொண்டது. என்னால் எதுவும் செய்ய இயலாது நிலை. பயத்தில் பேருந்தின் முன் இருக்கைக்கு சென்று அமர்ந்தேன். பேருந்தில் இருந்து இறங்கிய சில நொடிகளில் அந்த ஆண், மாயமாகிவிட்டார். சில நிமிடங்கள் கழித்து தான்., நான் அவனை சும்மா விட்டிருக்க கூடாது, கத்தி, திட்டி இருக்க வேண்டும், இல்லை கண்டக்டர் இடமாவது கூறி இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

சின்மயி!

சின்மயி!

பேருந்தில் பயணித்த அந்த இளம்பெண், நடந்த நிகழ்வை பாடகி சின்மயிடம் அனுப்ப, அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதை அப்டேட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வர, வர பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மிக கொடூரமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

நான் என்ன செய்ய முடியும்?

நான் என்ன செய்ய முடியும்?

மேலும் பாடகி சின்மயி, " பொது இடங்களில் தங்களிடம் இப்படி சுய இன்பம் கண்டு அச்சுறுத்தும் வகையில் ஆண்கள் நடந்துக் கொள்கிறார்கள் என பல பெண்கள் எனக்கு செய்தி அனுப்பி இருக்கிறார்கள். சிலர், அந்த நிகழ்வுகளை போட்டோ / வீடியோ எடுத்து ஆதாரமாக வைக்கிறார்கள். ஆனால், அதை தாண்டி என்ன செய்ய முடியும், நான் எப்படி உதவ முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இப்படியான சம்பவங்கள் நடப்பது இதுவே முதல் முறை இல்லை. இது இந்தியாவில் மட்டும் தான் நடக்கிறதா என்றால்.. அதுவும் இல்லை. சென்ற ஆண்டு பிலிப்பைன்ஸில் பழி மாணவி முன் ஒரு நபர் இப்படி நடந்துக் கொண்ட சம்பமும் இன்டர்நெட்டில் வைரலானது.

சா வின்யுயா

சா வின்யுயா

சா வின்யுயா, மெய்சுவாயன், புலாசனை சேர்ந்தவர். தற்போது டோன்டோ, மணிலா, பிலிப்பைன்ஸ்-ல் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு பள்ளி செல்லும் மாணவி. கடந்த ஜூலை 25-ம் நாள், இவர் தனது ஃபேஸ்புக்கில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை புகைப்படம், வீடியோ ஆதாரத்துடன் பகிர்ந்திருந்தார்.

சுய இன்பம்!

சுய இன்பம்!

பொது மக்கள் பயணிக்கும் ஜீப்பில் (நமது ஊர்களில் கேப், வேன்கள் போல) பள்ளி முடிந்து சா வின்யுயா பயணித்து வந்துள்ளார். அப்போது அவரது அருகே இருந்த ஒரு ஆண் அவரை கண்டு சுய இன்பம் காண துவங்கியுள்ளார். சுற்றிலும் பல பெண்கள் மற்றும் பயணிகள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் அந்நபர் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

சிட்டி ஹாலில் இருந்து டயுமன் எனும் இடத்திற்கு பயணம் செய்து கொண்டிருக்கும் போது ஏற்றதாழ இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அந்த நபர் தான் ஷோல்டர் பையை மறைவாக வைத்து இந்த வக்கிர செயலில் ஈடுப்பட்டுள்ளார். இதை மொத்தத்தையும் மாணவி சா வின்யுயா தனது செல்போனில் படம் பிடித்துவிட்டார்.

அச்சம்!

அச்சம்!

அந்நபர் செய்யும் காரியத்தை கண்டு கத்தி கூச்சலிட்டு ஜீப்பை நிறுத்தலாம் என கருதினாலும், அவரை கண்டு அச்சத்தில் உறைந்ததால் ஏதும் செய்ய இயலவில்லை என தனது பதிவில் சா வின்யுயா கூறியுள்ளார்.

மேலும், அந்த நபர் அவரது மொழியில் "இங்கேயே இரு, இங்கேயே இரு" என்பது போன்ற சொற்களை அந்த மாணவியின் காதருகே கூறிக் கொண்டே இருந்துள்ளார்.

இயலாமை!

இயலாமை!

பெண் என்ற காரணமா? ஆணாதிக்கம் காரணமா? அல்லது அச்சத்தில் உறைந்த நிலையா? ஏதோ காரணம் அந்த பெண்ணை இயலாமை நிலைக்கு தள்ளியுள்ளது. பயத்தில் உறைந்த சா வின்யுயா, தனது இடம் வந்ததும் இறங்கி ஓடிவிட்டார். அதன் பிறகே ஃபேஸ்புக்கில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

வைரல்!

வைரல்!

சா வின்யுயா இந்த சம்பவம் குறித்து பதிவு செய்த சிறிது நேரத்திலேயே வைரலாக பரவ துவங்கிவிட்டது. இப்போது வரை இந்த பதிவை 39 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர். 18 ஆயிரம் பேர் தங்கள் கோபத்தை லைக்கில் காண்பித்துள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவித்துள்ளனர்.

அடங்கா இச்சை!

அடங்கா இச்சை!

சுய இன்பம் காண்பது ஆண், பெண் மத்தியில் இருப்பது சகஜம். ஆனால், இச்சையின் உச்சத்திற்கு சென்று, பொது இடத்தில் பலர் முன்னணியில் ஒரு பள்ளி மாணவியின் முன்னர் இது போன்ற செயலில் ஈடுபடுவது அந்நபருள் இருக்கும் மிருகத்தை வெளிக்காட்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion