Latest Updates
-
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும்
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
Village Style Seeraga Mutton Curry Recipe In Tamil: உங்கள் வீட்டில் வார விடுமுறை வந்தாலே மட்டன் எடுப்பீர்களா? அப்படி எடுக்கும் மட்டனை எப்பவும் ஒரே மாதிரி குழம்பு, சுக்கா, வறுவல் என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் சற்று புதுமையான ரெசிபியை செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கிராமத்து ஸ்டைல் சீரக மட்டன் ரெசிபியை செய்யுங்கள்.

இந்த மட்டன் ரெசிபி செய்வதற்கு ஒருசில பொருட்களே போதுமானது. ஆனால் சுவையோ பிரமாதமாக இருக்கும். இதை சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். ஒருமுறை இந்த மட்டன் ரெசிபியை செய்தால், பின் நிச்சயம் வாரம் ஒருமுறை இதை ட்ரை செய்வீர்கள்.
உங்களுக்கு இந்த கிராமத்து ஸ்டைல் சீரக மட்டன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் சீரக மட்டன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இடிப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1 சிறிய விரல் அளவு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
பிற பொருட்கள்...
* மட்டன் - 1/2 கிலோ
* அரைத்த விழுது
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* வரமிளகாய் - 6 (விதைகளை நீக்கியது)
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மட்டனை கழுவி குக்கரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் இடி உரலில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கல்
உப்பு சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை மட்டனுடன் சேர்க்க வேண்டும்.
* பிறகு அத்துடன் 1 நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து, நறுக்கிய
விதைகளை நீக்கிய 6 வரமிளகாய், சீரகத் தூள், மல்லித் தூள் சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, குக்கரை
அடுப்பில் வைத்து 5 நிமிடம் மட்டனை நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி, மிதமான தீயில் 6
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அந்த குக்கரை அடுப்பில்
வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் வற்றியதும், அதில் மிளகுத் தூள் மற்றும் 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான கிராமத்து
ஸ்டைல் சீரக மட்டன் தயார்.



Click it and Unblock the Notifications
