சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்

Posted By:

Telangana Chicken Masala Recipe in Tamil: சண்டே வந்தாலே பெரும்பாலனவர்கள் வீட்டில் அசைவ உணவுதான். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு ஒரு புதுவிதமான ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு காரசாரமான உணவுகள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் தெலங்கானா ஸ்டைல் சிக்கன் மசாலாவை செய்து சாப்பிடுங்கள்.

Telangana Chicken Masala Recipe How to Make at Home in Tamil

இந்த தெலங்கானா சிக்கன் மசாலா செய்து சூடான சாதம் மட்டுமின்றி இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் புரோட்டா என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த சிக்கன் மசாலா செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதுடன் சுவையும் வேற லெவலில் இருக்கும். இந்த சிக்கன் மசாலாவின் ஸ்பெஷலே அதில் அரைத்து சேர்க்கப்படும் மசாலாவும், காரசமான சுவையும்தான்.

உங்களுக்கு இந்த தெலங்கானா ஸ்பெஷல் சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தெலங்கானா ஸ்பெஷல் சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கிலோ சிக்கன்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- கால் கிலோ வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 2 இன்ச இஞ்சி தோராயமாக நறுக்கியது
- 10 பூண்டு பல் தோராயமாக நறுக்கியது
- 1 கொத்து கறிவேப்பிலை
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- அரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 கப் துருவிய தேங்காய்
- அலங்கரிக்க கொத்தமல்லி

அரைக்க:

- 7 வர மிளகாய்
- 2 ஸ்பூன் மல்லி விதை
- 1 ஸ்பூன் சீரகம்
- 1ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் கசகசா

செய்முறை:

- ஒரு கடாயை மிதமான தீயில் சூடாக்கவும். அதில் காய்ந்த மிளகாய், மல்லி விதைகள், சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- மிதமான தீயில் வறுத்து மல்லி வாசனை வந்ததும், அதில் கசகசாவைச் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை நன்றாகக் கிளறவும். வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

- மசாலா ஆறியதும் ஒரு மிக்சியில் போட்டு நைசாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

- அதே கடாயில் துருவிய தேங்காயைச் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். இதை ஆறவைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும். அதேபோல இஞ்சி மற்றும் பூண்டையும் மென்மையான விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.

- ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

- வெங்காயம் நிறம் மாறியதும் தீயைக் குறைத்து, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும். 2 நிமிடங்கள் வதக்கி நன்றாகக் கிளறவும்.

- இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனதும் கறிவேப்பிலை மற்றும் தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாக கிளறவும். அடிபிடிக்கமால் இருக்க சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

- பின்னர் சுத்தம் செய்த சிக்கன், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

- நன்றாகக் கிளறி, சிக்கனை சேர்த்து 4 நிமிடங்களுக்கு வதக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி விடவும்.

- அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும், இடையிடையே கிளறிவிடவும். இறுதியாக எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

- அவ்வளவுதான் அட்டகாசமான தெலங்கானா சிக்கன் மசாலா ரெடி. இதை சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, June 21, 2026, 12:52 [IST]
Desktop Bottom Promotion